Bigg Boss: சனிக்கிழமை விஜய் சேதுபதி ரோஸ்ட்.. இவங்களுக்கு மட்டும் தான்! ரசிகர்கள் குமுறல் கேட்டிடுச்சு
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் டிசம்பர் 21ஆம் தேதி சனிக்கிழமை எபிசோடில் விஜய் சேதுபதி ஒரு சில பாண்டியாளர்களுக்கு மட்டும் அதிகமாக ரோஸ்ட் செய்து இருக்கிறார். அதுவும் ரசிகர்கள் இந்த வாரம் விஜய் சேதுபதி கேட்க வேண்டும் என்று சொன்ன கேள்விகளை எல்லாம் அடையாளப்படுத்தி இருக்கிறார்.
இந்த வாரத்தில் முதல் நாள் திங்கள்கிழமையில் தொடங்கி நேற்று வெள்ளிக்கிழமை வரைக்கும் வார இறுதி நாட்களில் விஜய் சேதுபதி என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக இருந்தது. காரணம் இந்த வாரம் முழுக்கவே போட்டியாளர்கள் விளையாடிய விளையாட்டு அப்படி இருந்தது.

எந்த டாஸ்க் கொடுத்தாலும் அதை சுவாரசியமாக செய்யாமல் சண்டை சச்சரவுகளோடு செய்து கொண்டிருக்கும் போட்டியாளர்கள் இந்த முறை அடிதடியிலும் இறங்கி இருந்தார்கள். அதிலும் சிலர் அடியே படாமல் தலை போச்சே... கால் போச்சே என்று கதறியவர்களையும் பார்க்க முடிகிறது. ஆனால் ராணவிற்க்கு அடிபட்ட போது கூட அவர் நடிக்கிறார் என்று ஏளனம் செய்வதையும் பார்க்க முடிந்தது.
இதனால் இந்த வாரம் கண்டிப்பாக குறும்படம் போட வேண்டும், இல்லை என்றால் உள்ளே சில போட்டியாளர்கள் நடந்து கொண்ட விதம் குறித்து கேள்வி கேட்க வேண்டும் என்று அதிகமான ரசிகர்கள் இணையத்தில் குரல் எழுப்பி வந்தனர். இந்த நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்படியே இன்று எபிசோடு ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் விஜய் சேதுபதி கேள்விகளால் சில போட்டியாளர்களை துளைத்து எடுத்தார்.
அதிலும் அன்ஷிதா, ஜெஃப்ரி, விஜே விஷாலுக்கு தான் இன்று ரோஸ்ட் அதிகமாக இருந்தது. வழக்கம் போல அருணை திட்டி இருந்தாலும் சில இடங்களில் அவரின் நடவடிக்கையை பாராட்டியும் இருந்தார். ராணவ் கீழே விழுந்து கையில் சதை முறிவு ஏற்படுவதற்கு முக்கிய காரணமே அருண்தான். அதையும் அம்பலப்படுத்தி இருந்தார்.
அதோடு ராணவிற்க்கு அடிபட்ட பிறகும் சிலர் கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில் முதல் ஆளாக அருண் ஓடியது குறித்து பாராட்டவும் செய்தார். ஆனால் கடைசியில் போகிற போக்கில் என்ன சார் உங்க ட்ரெஸ்ஸில் எப்போவும் ஹார்ட் பறக்கும் இந்த முறை எதுவும் தப்பா போயிருக்கிறதா? டிரஸ்ஸில் மாற்றம் தெரிகிறது என்று அருண் மனதை குழப்பமடையும் வகையில் பேசி இருந்தார்.
அதுபோல அன்ஷிதாவிடம் ராணவ் விஷயத்தில் நடந்து கொண்டது குறித்து கேள்வி எழுப்பி திட்டி இருந்தார். அதுபோல குரூப்பாக சேர்ந்து விளையாடியது குறித்தும் கேள்வி மேல் கேள்வி கேட்டிருந்தார் இதுவரைக்கும் நான் எல்லோருக்காகவும் தியாகி போல நடப்பேன், தேவதை போல இருப்பேன் என்று சொன்ன அன்ஷிதா எங்கே என்று முகத்துக்கு நேராகவே கேள்வி கேட்டிருந்தார்.
அதுபோல விஜே விஷால் கேப்டன்சி ரொம்ப கேவலமாக இருந்தது என்றும் விமர்சித்திருக்கிறார். விஜய் சேதுபதி இன்று போட்ட போடில் எல்லா போட்டியாளர்களும் பதறிப் போய் இருக்கிறார்கள் அடுத்த வாரத்தில் இவர்களின் விளையாட்டு எப்படி இருக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications