பிக் பாஸ் 8: ரஞ்சித்தை உள்குத்துடன் மடக்கிய விஜய் சேதுபதி.. நச்சுனு கேட்ட கேள்வி.. தாக்குப் பிடிப்பாரா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் 9வது போட்டியாளராக நடிகர் ரஞ்சித் கலந்து கொண்டிருக்கிறார். அவரிடம் விஜய் சேதுபதி நான் சின்ன வயதில் பார்த்த ரஞ்சித் வேறு, கவுண்டம்பாளையம் திரைப்படத்திற்கு பேசுறது வேறாக இருக்கிறது. உங்களுடைய உண்மையான கேரக்டர் என்ன என்று பல்வேறு கேள்விகளை கேட்டு இருக்கிறார்.
எட்டாவது சீசனில் விஜய் சேதுபதி தொகுப்பாளராக வரும்போது இவர் இந்த நிகழ்ச்சியை எப்படி கொண்டு போகப் போகிறாரோ என்று எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு இன்று இன்ப அதிர்ச்சி கிடைத்திருக்கிறது. போட்டியாளர்கள் யாரையுமே அதிகமாக பேசவிடாமல் நான்தான் தொகுப்பாளர் என்று போட்டியாளர்களை பேச வேண்டிய விஷயங்களை பேச விட்டு அவர்களுக்கு தக்க இடத்தில் அறிவுரைகளை கூறி ஒரு சிலரை கலாய்த்து விஜய் சேதுபதி அனுப்பி கொண்டிருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி போட்டியாளர்களை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார். அப்போது நடிகர் ரஞ்சித் அறிமுகம் செய்யும்போது அவரிடம் நான் உங்களை சின்ன வயசில் சிந்துநதிப் பூவே திரைப்படத்தின் பார்த்த அந்த கேரக்டர் உங்களுக்கு அவ்வளவு அழகாக பொருந்தி இருக்கும். அழகான நண்பனாக நீங்கள் அந்த திரைப்படத்தில் நடித்து இருப்பீர்கள்.
அதற்கு பிறகு நீங்கள் இயக்கிய பீஷ்மர் திரைப்படமும் பார்த்தேன். அந்த படம் சூப்பரான படம். அந்து படத்திற்கு பிறகு நீங்கள் ஏன் படம் இயக்கவில்லை என்று கேட்டேன். ஆனால் சமீபத்தில் நீங்கள் இயக்கிய கவுண்டபாளையம் திரைப்படம் வந்த பிறகு நீங்கள் பேசியது வேறு விதமாக இருந்தது. இதில் ரஞ்சித் என்பவர் உண்மையில் யார்? நான் பார்த்த சிந்துநதி பூவே படத்தில் கேரக்டரா? அல்லது சமீபத்தில் பேசிக் கொண்டிருக்கும் ரஞ்சித்தின் முகம் தான் உண்மையா? இதில் எது உண்மை?
நீங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பரிமாணத்தில் வளர்ச்சி அடைந்து நிற்கிறீர்கள். அதில் உங்களுடைய நிஜ கேரக்டர் என்ன என்பது சொல்லுங்கள் என்று கேட்க அதற்கு ரஞ்சித் நான் சிந்து நதி பூவே திரைப்படத்திலிருந்து அதே கேரக்டர் தான் என்னுடைய நிஜ கேரக்டர். நான் இயக்கும் திரைப்படங்களில் என்னுடைய கேரக்டர் இருப்பது உண்மைதான். ஆனால் நான் எப்போதும் சரியான நியாயமான விஷயங்களை தான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அதற்கு விஜய் சேதுபதி இந்த வீட்டிற்குள் நீங்கள் இன்னும் நிறைய விஷயத்தை பார்க்கப் போறீங்க. அது உங்களை இன்னும் மாற்றப் போகுது. இந்த வீட்டிற்குள் நீங்கள் உண்மையாக இருக்கப் போகிறீர்களா? அல்லது இன்னும் பெட்டராக இருக்க போகிறீர்களா? என்று கேட்க அதற்கு ரஞ்சித் உண்மையாக இருக்கப் போறேன் அதன் மூலம் இன்னும் பெட்டராக போகிறேன் என்று சொல்லிக் இருக்கிறார்.
ஏற்கனவே சர்ச்சைகளுக்கு பெயர் போன ரஞ்சித்தை முதல் நாளே விஜய் சேதுபதி மடக்கி கேள்வி கேட்டிருக்கிறார். அவருடைய கேள்விகளில் கவுண்டபாளையம் திரைப்படத்திற்கு பிறகு காதல் திருமணத்திற்கு எதிராக ரஞ்சித் பேசுவதற்கு தன்னுடைய கண்டனத்தை தெரிவிப்பது போல தான் உள்குத்தோடு விஜய் சேதுபதி பேசியிருக்கிறார். இனி போக போக இந்த நிகழ்ச்சியில் ரஞ்சித்தின் விளையாட்டு எப்படி இருக்க போகிறது அதற்கு எதிர்வினை எப்படி இருக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications