ராணவ் பற்றிய மீம்ஸ்களுக்கு செம பதிலடி கொடுத்த விஜய் சேதுபதி.. இப்படி பேசுவார்னு எதிர்பார்க்கலையே!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் டிசம்பர் 21ஆம் தேதிக்கான சனிக்கிழமை எபிசோடில் இந்த வாரத்தில் ராணவிற்க்கு அடிபட்டது குறித்து வெளியான மீம்ஸுகளுக்கு விஜய் சேதுபதி பதிலடி கொடுத்திருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க ராணவ்க்கு அடிபட்ட செய்தி தான் பெரிய அளவில் பேசப்பட்டது. டாஸ்க்ககில் விளையாடும் போது ஜெஃப்ரி மற்றும் அருண் ராணவை பிடித்து கீழே தள்ளும் போது ராணவ் கையில் எதிர்பாராத விதமாக அடிபட்டு இருந்தது.

அதே நேரத்தில் ராணவ் அடிபட்டு வலியில் துடித்துக் கொண்டிருக்கும் போது கூட அவருடைய பக்கத்தில் இருந்த ஜெஃப்ரி, அன்ஷிதா, சௌந்தர்யா போன்றோர் ராணவ் நடிக்கிறான் என்று சொல்லிக் கொண்டிருந்தனர். பிறகு மருத்துவர்கள் செக் பண்ணி பார்த்துவிட்டு மூன்று வாரங்களுக்கு ராணவ் எந்த வேலையும் செய்யக்கூடாது என்று சொல்லி இருந்தார்.
இதனால் பிக் பாஸ் ராணவ்விடம் உங்களால் இந்த நிகழ்ச்சியில் தொடர முடியுமா? என்று கேள்வி கேட்டிருந்தனர். அதற்கு ராணவ் எனக்கு ஒரு கை இருக்கிறது அதை வைத்து நான் இந்த நிகழ்ச்சியில் விளையாடுவேன், இந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியில் போகமாட்டேன் என்று உறுதியாக சொல்லி இருந்தார். அதே நேரத்தில் ராணவவிற்க்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் அதிகமான கமெண்டுகள் வந்து கொண்டே இருந்தது.
அதுபோல ஜெஃப்ரி மற்றும் அருணை பற்றியும் சிலர் கமெண்ட்களில் திட்டி வந்ததையும் பார்க்க முடிந்தது. அந்த நிலையில் தான் ராணவிற்கு அடிபட்ட இரவு அடிபட்ட கையை தலையணையில் வைத்து தூங்கும் கிளிப்ஸ்களும் இணையத்தில் வைரலானது. அப்போது கூட பலர் ராணவ் மற்றும் பிக்பாஸ் சேர்ந்துதான் கூட்டாக நடிக்கிறார்கள் என்று கூட மீம்ஸ்கள் வெளியிட்டு வந்தனர்.

அதை குறிப்பிட்டு இன்றைய எபிசோடில் விஜய் சேதுபதி ராணவிடும் தெளிவுபடுத்தி இருக்கிறார். உங்களுக்கு அடிபட்ட கை பக்கத்தில் படுக்க முடிகிறதா? என்று கேட்க, ஆமாம் சார் படுக்க முடிகிறது. நான் அப்படித்தான் படுக்கிறேன் என்று சொல்லி இருந்தார். அதற்கு விஜய் சேதுபதி ஒருவருக்கு அடிபட்டு இருக்கிறது என்று மருத்துவர்கள் டெஸ்ட் பண்ணி பார்த்துவிட்டு சொன்ன பிறகு கூட இங்கே வெளியே பலருக்கும் சந்தேகம் இருக்கிறது அதை தெளிவுபடுத்த தான் நான் உங்களிடம் கேட்டேன் என்று சொல்லி இருக்கிறார்.
சமூக வலைத்தளத்தில் தன்னைப் பற்றியும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றியும் எவ்வளவு வதந்திகள் பரவி வருகிறது என்பதை விஜய் சேதுபதி கவனித்து வருகிறார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications