பாக்கியலட்சுமி சீரியலை விட்டு வந்த காரணம்! பிக் பாஸ் மேடையில் பேசிய விஷால்.. பாராட்டிய விஜய் சேதுபதி
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி இன்று தொடங்கி இருக்கும் நிலையில் இதில் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகர் விஜே விஷால் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். அவர் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து தான் எதற்காக வெளியே வந்தேன் என்று இந்த நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார். அவருக்கு நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு தெரிவித்து இருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி முற்றிலும் புதுமையாக இருக்கிறது. இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசனில் எல்லா போட்டியாளர்களும் ரசிகர்களுக்கு தெரிந்த முகங்களாக இருக்கின்றனர். அதிலும் அதிகமானோர் விஜய் டிவி பிரபலங்களாக இருக்கின்றனர். விஜய் சேதுபதி முதல் நாளே யாரிடமும் தயவு தாச்சனம் இல்லாமல் முகத்துக்கு நேராகவே பேசி இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் விஜே விஷாலும் ஒருவர். பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கேரக்டரில் நடித்து வந்தார். விஜய் டிவியில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பயணித்து வரும் இவர் பட்ட படிப்பு முடித்துவிட்டு சொந்தமாக தொழில் தொடங்கி அதில் பயணித்து வந்த நிலையில் தான் அவருக்கு தொகுப்பாளராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அதற்கு பிறகு உதவி இயக்குனராக சின்னத்திரையில் தன்னுடைய பணியை தொடங்கினர். பிறகு இயக்குனர் உதவி இயக்குனராக கலக்கப்போவது யாரு உட்பட பல நிகழ்ச்சிகளில் பணியாற்றி இருக்கிறார். பாக்கியலட்சுமி சீரியல் மூலம் இவருக்கு பெரிய அளவில் பிரபலம் கிடைத்தது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
ஆனால் திடீரென்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து தான் விலகி இருக்கும் நிலையில் அது குறித்து விஜய் சேதுபதி முன்பு வி.ஜே விஷால் பேசுகையில் நான் நடிக்க வேண்டும் என்று ஆசையோடு பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியே வந்தேன். எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் கனவாக இருக்கிறது. அதனால் தான் சினிமாவுக்கு முயற்சி செய்யும்போது பாக்கியலட்சுமி சீரியல் எழில் கேரக்டர் போலவே எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நிஜத்தில்எழில் கேரக்டர் போல என்னுடைய நிஜ கேரக்டர் கிடையாது.
என்னுடைய கேரக்டரே வேறு. அதை நிரூபிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து இருக்கிறேன் என்று விஜே விஷால் சொல்லி இருக்கும் நிலையில், உங்களுக்கு வெற்றி கிடைத்து ஒரு இடத்தில் இருந்தால் இதுவே போதும் என்ற மனமில்லை இல்லாமல் நம்முடைய திறமையின் மீது நம்பிக்கை கொண்டு நீங்கள் எடுத்து வைத்திருக்கின்ற முயற்சிக்கு வாழ்த்துக்கள் என்று விஜய் சேதுபதி வாழ்த்தி இருக்கிறார்.
அப்போது விஷால் நான் உங்களை 5முறை சந்திச்சு முத்தம் வாங்கி இருக்கிறேன். இப்போது ஆறாவது முறையா எனக்கு முத்தம் தந்து அனுப்புங்க அண்ணா என்று சொல்ல, அதற்கு விஜய் சேதுபதி நான் முத்தம் தந்திருக்கிறேன் என்பதால் கண்டிக்க மாட்டேன் என்று நினைக்காதீர்கள் என்று சொன்னதும் விஷால் ஒரு நிமிடம் தயங்கி நிற்கிறார். அந்த நேரத்தில் எதிர்பார்க்காத விதமாக டக் என்று விஜய் சேதுபதி முத்தம் கொடுத்து அனுப்புகிறார்.












Click it and Unblock the Notifications