சௌந்தர்யா பற்றி அபாண்டமாக குற்றச்சாட்டு வைத்த VJ விஷால்.. இப்படியுமா பேசுவாங்க? பொங்கும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் சில தினங்களாகவே விஜே விஷால், சௌந்தர்யா குறித்து அதிகமான குற்றச்சாட்டுகள் வைத்து வருகிறார். இது குறித்து சௌந்தர்யாவின் ரசிகர்கள் விஜே விஷாலை திட்டி மீம்ஸ்கள் மற்றும் கமெண்டுகள் வெளியிட்டு வருகிறார்கள். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது ஒரு மைண்ட் கேம் தான். இந்த நிகழ்ச்சியில் யார் எப்படி என்பது யாராலும் யூகிக்க முடியாத வகையில் தான் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவரின் கேரக்டர் மாறிக்கொண்டே இருக்கிறது. ஆரம்பத்தில் வில்லனாக தெரியும் போட்டியாளர்கள் கூட போகப்போக காமெடியனாக மாறிய கதையும் உண்டு.

bigg boss tamil 8 bigg boss 8 8

அது போல ஆரம்பத்தில் அமைதியாக இருக்கும் போட்டியாளர்கள் எப்போதும் வேண்டும் என்றாலும் வெடித்து பூகம்பமாக மாறுவார்கள். சிலர் வெளியே ஜாலியாக இருப்பார்கள் ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் அவர்களுடைய நிஜ கேரக்டரை பார்த்ததும் ரசிகர்கள் மிரண்டு போய் விடுவார்கள். அது போல் தான் சில நாட்களவே விஜே விஷால் உடைய நடவடிக்கைகள் இருந்து வருகிறது.

அதாவது ஆரம்பத்தில் எல்லோரிடமும் சகஜமாக பேசிக்கொண்டிருந்த விஜே விஷால் சில இடங்களில் தவறு என்று பட்டால் தைரியமாக பேசிக் கொண்டிருந்தார். பல இடங்களில் காமெடியாகவும் பேசிக்கொண்டிருந்தார். ஆனால் இரண்டு வாரங்கள் தொடர்ச்சியாக முத்துக்குமாரன் ஆண் போட்டியாளர்களிடம் சொன்னதை எல்லோரும் ஃபாலோ செய்ததால் விஜய் சேதுபதி அனைவரையும் திட்டி இருந்தார்.

அதற்கு பிறகு விஜே விஷால் முத்துக்குமரன் மீது தன்னுடைய கோபத்தை அடிக்கடி காட்ட தொடங்கினார். அவரை முழுமையாக எதிர்க்க தொடங்கி இருந்தார். இது ஒரு பக்கம் இருந்தாலும் சில தினங்களாக இப்போது சௌந்தர்யா பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். அதாவது இரண்டு தினங்களுக்கும் முன்பு சௌந்தர்யாவிற்கு ரஞ்சித் தலையில் எண்ணெய் வைத்து இருந்தார்.

அதை பார்த்த விஷால், அருண் உட்பட ஒரு சிலரிடம் ரஞ்சித் சார் சௌந்தர்யாவிற்கு தலை, முகத்தில் எல்லாம் எண்ணை தேச்சு விட்டுட்டு இருக்கிறார் என்று பிற்போக்குத்தனமாக பேசிக் கொண்டிருந்தார். அதாவது சௌந்தர்யா மற்றும் ரஞ்சித் ஆரம்பத்திலிருந்து அப்பா மகள் பாசத்தில் தான் இருக்கிறார்கள்.

ஒரு முறை ரவீந்தர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது கூட பிராங்க் செய்தார்கள். அப்போது கூட அது பெரிய அளவில் பிரச்சனையாக வெடித்தது. அந்த நேரத்தில் பிராங்க் முடிந்ததும் ரஞ்சித் ஓடி வந்து ஐஸ்வர்யாவின் நெற்றியில் முத்தம் கொடுத்துவிட்டு குழந்தை போல துள்ளிக் கொண்டு போனார்.

அதற்கு பிறகு பல இடங்களில் ரஞ்சித் சௌந்தர்யாவிடம் ஒரு மகள் போல தான் நடந்து கொண்டிருக்கிறார். அதை அவரே சில இடங்களில் சொல்லி இருக்கிறார். எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள் என்பதால் எனக்கு சௌந்தர்யாவை பார்க்கும் போது ஒரு பொண்ணு இருந்தால் எப்படி இருக்கும் என்று தோன்றுகிறது என்று சொல்லி இருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் இதுபோல பல சீசன்களில் உறவு முறைகள் உருவாகி இருக்கிறது. ஆனாலும் இந்த சீசனில் ரஞ்சித் சௌந்தர்யாவிடம் மட்டுமல்ல பவித்ராவிடம் கூட சில நாட்களுக்கு முன்பு நான் வாழ்க்கையில் உனக்கு எந்த சூழ்நிலையிலும் துணையாய் இருப்பேன். பிக் பாஸ் என்பது ஒரு விளையாட்டு தான் இதை தாண்டி வெளியே நான் 24 மணி நேரமும் உனக்காக இருப்பேன் என்று சொல்லி இருந்தார்.

அப்போது கூட பவித்ரா எனக்கு இப்படி ஒரு அண்ணன் வேண்டும் என்று கண்கலங்கி அழுது இருந்தார். ஆனால் விஜே விஷால் சௌந்தர்யா பற்றி மட்டும் தவறான அர்த்தத்தோடு பேசிக் கொண்டிருக்கிறார். அதிலும் இன்று லைவில் இன்னொரு விஷயத்தையும் சொல்லி இருந்தார்.

அதாவது தன்னை சௌந்தர்யா இடிப்பது போலவும் கட்டிப்பிடிப்பது போலவும் அடிக்கடி வருகிறார் என்றும், நான் தான் எப்போது வேண்டுமென்றாலும் அதிலிருந்து விலகிப் போகிறேன் என்றும் கூட சொல்லி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஒருமுறை முத்துக்குமரன் சாய்ந்து இருக்கும்போது முத்துக்குமரனின் இரண்டு முட்டிகளிலும் கையை வைத்துக் கொண்டும் முகத்துக்கு நேராக முகத்தைக் கொண்டு வந்து சௌந்தர்யா நின்று கொண்டிருந்தார்.

அதை பார்த்து முத்துக்குமாரனுக்கு தர்ம சங்கடமாக இருந்தது. எதற்காக சௌந்தர்யா இப்படி எல்லாம் நடந்து கொள்கிறார் என்று தெரியவில்லை என்று விஜே விஷால் பேசி இருக்கிறார். இது குறித்து இந்த வாரம் விஜய் சேதுபதி பேச வேண்டும் என்று ரசிகர்கள் அதிகமான மீம்ஸ் மற்றும் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+