பிக் பாஸ்-க்கு டாடா காட்டிய கமல்ஹாசன்.. திடீர் பதிவுக்கு நிஜ காரணம் இதுவா? அவருக்கு பதிலாக யார்?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து தான் விலகப்போவதாக கமல்ஹாசன் பதிவு வெளியிட்டு இருக்கும் நிலையில் அவருக்கு பதிலாக இனி எட்டாவது சீசனை யார் தொகுத்து வழங்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருக்கிறது. அதே நேரத்தில் கமல்ஹாசன் திடீரென இந்த முடிவு எடுப்பதற்கு என்ன காரணம் என்று கேள்விகள் குவிந்து வருகிறது.
ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பெயர் போன விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்றாலே அதை தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்கள் தொடங்கி விடுகிறது. அந்த வகையில் மக்கள் பலரையும் வியக்க வைத்த நிகழ்ச்சி என்றால் பிக் பாஸ் நிகழ்ச்சி தான். பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்று எட்டிப் பார்க்கும் பழக்கம் பலருக்கும் இருக்கும் நிலையில் அதையே திரையில் காட்டி பிக் பாஸ் பற்றிய பேச்சுகளை மக்கள் மத்தியில் எழுப்ப வைத்தது.

ஆரம்பத்தில் முதல் இரண்டு சீசன்களுக்கு பெரிய அளவில் இணையத்தின் பயன்பாடு இல்லாததால் எல்லோரும் டிவியில் பார்த்து வந்தனர். ஆனால் இப்போதுள்ள சீசன்கள் இணையத்தில் பார்த்துவிடும் நிலையில் அது குறித்த விவாதங்களும் இணையத்தில் அளவுக்கதிகமாக இருக்கிறது. உலக நாயகனாக பலரால் கொண்டாடப்படும் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார் என்ற போது ஆரம்பத்திலேயே அந்த நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பு இருந்தது.
ஒரு சிலர் விமர்சித்து வந்தாலும் ஒரு சிலர் என்னதான் இருக்குன்னு பார்ப்போமே என்று கமல்ஹாசனுக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள் ஏராளம். ஆனால் நாட்கள் போகப்போக கமல்ஹாசன் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டுகளும் அளவுக்கு அதிகமாக வந்தது. போட்டியாளர்கள் பிஆர் உதவியோடு வெற்றி பெறுகிறார்கள் என்றும் குற்றச்சாட்டுகள் வந்தது.
அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியின் மூலமாகவே கமல்ஹாசனை சர்வ சாதாரணமாக பலரும் திட்ட தொடங்கிவிட்டனர். அதன் வெளிப்பாடோ என்னவோ இந்த முறை பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை தான் தொகுத்து வழங்கப் போவதில்லை என்று கமல்ஹாசன் திடீர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். கமல்ஹாசன் வெளியிட்ட பதிவில், கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய எங்கள் பயணத்திலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சினிமா கமிட்மென்ட் காரணமாக பிக் பாஸ் தமிழில் வரவிருக்கும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை. உங்கள் இல்லங்களில் உங்களை சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. உங்கள் அன்பையும் பாசத்தையும் நீங்கள் எனக்கு பொழிந்தீர்கள். அதற்கு உங்களுக்கு என்றென்றும் என் நன்றி இருக்கிறது. பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை இந்தியாவில் சிறந்த தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்றாக மாற்றுவதற்கு போட்டியாளர்கள் உங்கள் உற்சாகமாக மற்றும் உணர்ச்சிபூர்வமாக தந்தீர்கள்.
இந்த நிகழ்ச்சி மூலமாக தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல விஷயங்களை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். இந்தக் கற்றல் அனுபவத்திற்கு நான் எப்போதும் நன்றியுள்ளனாக இருப்பேன். நாங்கள் ஒன்றாக நேரம் செலவழித்ததை மறக்க முடியாது. அதுபோல இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இறுதியாக விஜய் டிவியில் அற்புதமான குழுவிற்கு இந்த நிறுவனத்தை ஒரு பெரிய வெற்றியாக மாற்றுவதில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு குழு உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த சீசன் இன்னொரு வெற்றியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்று கமல்ஹாசன் கூறி இருக்கிறார்.
தான் இன்னொரு படத்தின் சூட்டிங்கில் பிஸியாக இருப்பதில் நான் இந்த சீசனில் கலந்து கொள்ள முடியவில்லை என்று கமல்ஹாசன் கூறியிருந்தாலும் ஏற்கனவே இந்த நிகழ்ச்சிக்கான செட் போடும் வேலை தொடங்கப்பட்டது என்று இணையத்தில் சில நாட்களுக்கு முன்பே தகவல்கள் வெளியாகி விட்டது. அதே நேரத்தில் கமலுடன் சம்பள பேச்சு வார்த்தை நடந்ததை தொடர்ந்து அதில் கமல்ஹாசன் எதிர்பார்த்த சம்பளம் கிடைக்கவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதா? என்று சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இன்னும் ஒரு சிலர் கமல்ஹாசனுக்கு பதிலாக நடிகர் சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும் என்றும் கூறி வருகிறார்கள். ஏற்கனவே கமல்ஹாசன் முதல் சீசனில் இருந்து ஏழு சீசன்கள் தொகுத்து வழங்கி இருந்தாலும் அவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில் கமல்ஹாசனுக்கு பதிலாக சிம்பு மற்றும் நடிகை ரம்யா கிருஷ்ணன் தான் தொகுத்து வழங்கி இருந்தார்கள்.
அந்த எபிசோடு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. அதனால் அவர்களே மீண்டும் இந்த சீசனை தொகுத்து வழங்குவதற்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்லும் பிக் பாஸில் இந்த முறை எதிர்பாராத சம்பவங்கள் நிறைய இருக்கு போல, என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications