பிக் பாஸ் 8இல் இன்றைய சூட்டிங் தொடங்கியது.. வெளியே போகும் நபர் இவர் தானா? கசிந்த தகவல்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த வாரத்தில் 12 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் அவர்களில் யார் வெளியேறப் போகிறார்கள் என்று பார்க்கலாம்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி தொடங்கி கிட்டத்தட்ட 80 நாட்களை கடந்துவிட்ட நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் நிகழ்ச்சி முடிவுக்கு வந்துவிடும். அதுபோல இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் அறிமுகமானவர்கள். அதில் தொடர்ந்து சில வாரங்களில் ஆறு வைல்ட் கார்டு போட்டியாளர்களும் என்ட்ரி கொடுத்தனர்.

இதில் அதிகமானோர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இன்னும் 12 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளே இருக்கிறார்கள். ஆனால் நிகழ்ச்சி முடிவடைய ஒரு சில வாரங்கள் மட்டும் இருப்பதால் இந்த வாரத்தில் இரண்டு எவிக்ஷன் இருக்குமா? என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.
அதே நேரத்தில் இன்று சனிக்கிழமை என்பதால் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடுக்கான சூட்டிங் தொடங்கி இருக்கிறது. தற்போது விஜய் சேதுபதி ஷுட்டிங்கில் கலந்துகொண்டு பேசிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் இந்த வாரத்தில் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் பெரிய அளவில் இருக்கிறது.
காரணம் இந்த வாரத்தில் குடும்பத்தினரின் வருகையால் போட்டியாளர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். ஒரு சிலர் இந்த நிகழ்ச்சியில் தங்களுடைய குடும்பத்தினரை எப்படியாவது கலந்து கொள்ள வைக்க வேண்டும் என்பதற்காகவே இத்தனை வாரங்களாக எப்படியாவது இருந்து விட வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்தனர். அவர்களுடைய போராட்டம் வெற்றி அடைந்தது.
ஆனால் சில போட்டியாளர்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றம் அடைந்து விட்டது. அதிலும் தர்ஷா, சத்யா போன்றோர் இந்த நிகழ்ச்சியில் எப்படியாவது குடும்பத்தை கூட்டி வந்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டனர். ஆனால் அவர்கள் இல்லாமல் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்றிருக்கிறது.
இந்த நிலையில் இந்த வார எவிக்ஷனில் ஏழு போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களில் வாக்குகளின் அடிப்படையில் அன்ஷிதா, ஜெஃப்ரி மற்றும் விஜே விஷால் மூன்று பேருடைய பெயர்தான் கடைசி இடத்தில் இருக்கிறது. அதில் அன்ஷிதா தான் இந்த வாரம் வெளியேறப் போகிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதே நேரத்தில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஒரு எவிக்ஷன் நாளை நடைபெறும் என்று கூறப்படுகிறது. ஒரு எவிக்ஷன் மிட் நைட்டில் நடைபெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது. ஆனால் இன்னும் யார் எவிக்ஷன் என்பது விஜய் சேதுபதி அதிகாரப்பூர்வமாக ஷூட்டிங்கில் அறிவிக்கவில்லை. அதனால் ஒரு சில மணி நேரத்தில் யார் வெளியேறப் போகிறார்கள் என்று அதிகாரப்பூர்வமாக தெரிந்துவிடும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications