பிக் பாஸ் 8 டிராபியில் இத்தனை சிறப்பு அம்சங்களா? தங்கத்தை விட அதிக மதிப்பு! ரகசியம் உடைத்த பிரபலம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்ட முத்துக்குமரன் தனக்கு வழங்கப்பட்ட டிராபியில் இருக்கும் சிறப்பு அம்சங்கள் குறித்து பேசி இருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கி கடந்த ஜனவரி 19 அதாவது கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சியில் அதிகமான விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஆனால் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் தேர்வாகி இருந்தார்.

இது ஒரு சாமானியனின் வெற்றி என்று மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. முத்துக்குமரன் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுப்பது குறித்து பலரும் பாராட்டி வருகிறார்கள். இதுவரைக்கும் நடந்த சீசன்களின் இந்த எட்டாவது சீசன் தான் டாக்ஸி ஃப்ரீ சீசன் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
அதே நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில விஷயங்கள் அதிக சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. அதில் பைனலில் முத்துக்குமரனுக்கு கொடுக்கப்பட்ட டிராஃபியும் இடம் பிடித்திருக்கிறது. இதுவரைக்கும் கொடுக்கப்பட்ட டிராஃபியை விடவும் தற்போதைய எட்டாவது சீசனில் கொடுத்த டிராபி மிகவும் வித்தியாசமாக இருந்தது. அதை விஜய் சேதுபதி ஃபைனல் அன்று அறிமுகப்படுத்தியதுமே அது குறித்த மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வந்தது.
அந்த டிராபி பார்ப்பதற்கு ராகு கேது சிலை போல இருக்கிறது என்று நெட்டிசன்கள் கலாய்த்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் இந்த டிராபியில் ஒளிந்திருக்கும் சிறப்பு அம்சங்கள் குறித்து முத்துக்குமரன் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் அவர் பேசுகையில் பிக் பாஸ் ட்ராபியை முதல் முதலில் நான் பைனல் மேடைக்கு வருவதற்கு முன்பு பிக்பாஸ் வீட்டிற்குள் வைத்து பார்த்தேன்.
அப்போது அதை தூரமாக தான் பார்த்தேன். அதை பார்க்கும்போது எனக்கு அது தங்கமா? வெள்ளியா? என்பதெல்லாம் எனக்கு தெரியாது. அது என் கண்களில் பார்க்கும்போது மக்களின் அங்கீகாரமாக தான் தெரிந்தது. எனக்கு வழங்கப்பட்ட டிராபி மிகவும் அழகானது. இதற்கு முன்னர் நடந்த சீசன்களில் டைட்டில் வின்னருக்கு தங்க முலாம் அல்லது வெள்ளி முலாம் பூசப்பட்ட டிராபிகள் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் எனக்கு வழங்கப்பட்ட டிராபி முழுக்க முழுக்க ஒரே கல்லால் செய்யப்பட்டது. அதை ரொம்ப அழகாக செதுக்கி இருந்தார்கள். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் பிள்ளையார்பட்டியை எடுத்துக் கொண்டால் அங்குள்ள குடவரை கோவிலின் சிறப்பு என்னவென்றால் அது ஒரே மலையை குடைந்து செய்யப்பட்ட கோவில். அதுபோலத்தான் ஒரே கல்லால் அந்த ட்ராபி செய்யப்பட்டிருந்தது.
கற்களில் சிற்பங்கள் செய்வது நம்முடைய பாரம்பரியத்தின்படி மிகவும் அழகானது. மற்ற நாடுகளை விட நம்ம ஊர்களில் உள்ள கோவில்களில் தான் யாழியாக இருந்தாலும் சரி பெண்களின் ஜடையாக இருந்தாலும் சரி அது நம்மூரில் தான் இருக்கிறது. அதை கற்களால் செதுக்குவது மிகவும் கடினம்.
வெளிநாட்டவர்களே வந்து அந்த கலை சிற்பங்களை ரசிக்கிறார்கள். அப்படி பாரம்பரியத்தோடு பிக் பாஸ் ட்ராப்பி செய்யப்பட்டிருக்கிறது. அந்த கோப்பையின் கணம் அதிகம் அதைத் தூக்கவே முடியாது. உண்மையில் தங்கம் முலாம் பூசி கொடுத்திருந்தால் கூட இவ்வளவு சிறப்பாக இருந்திருக்குமா? என்பது தெரியாது. நிஜமா சொல்றேன் இந்த 8 சீசன்களில் எனக்கு வழங்கப்பட்ட டிராபி தான் மிகவும் கலைத்துவமானது என்று முத்துக்குமரன் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications