பிக் பாஸ் மேடையில் காட்டியது கொஞ்சம் தான்! சௌந்தர்யா சொன்னது எனக்கே அதிர்ச்சி.. முத்துக்குமரன் ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் சமீபத்தில் முடிவுக்கு வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 8-வது நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக தேர்வான முத்துக்குமரன், ரன்னராக தேர்வான சௌந்தர்யா பற்றி சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். சௌந்தர்யா பைனல் மேடையில் பேசியது பலருடைய பாராட்டைப் பெற்று வரும் நிலையில் சௌந்தர்யா பேசிய சில விஷயங்கள் வெளியே காட்டவில்லை என்று முத்துக்குமரன் கூறி இருக்கிறார்.

கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி ஜனவரி மாதம் 19 ஆம் தேதியோடு முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்ததும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் நடந்த பல நிகழ்வுகள் குறித்து பேட்டிகளில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

bigg boss tamil television bigg boss tamil 8 8

அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சிலரை ஆரம்பத்தில் திட்டி வந்த ரசிகர்கள் கூட கடைசியில் பாராட்ட தொடங்கி விட்டனர். அதிலும் சௌந்தர்யாவிற்கு இருந்து வந்த நெகட்டிவ் இமேஜ் பைனல் மேடையில் அவர் பேசிய வார்த்தையால் அப்படியே காணாமல் போய் இருக்கிறது. ஆரம்பத்தில் சௌந்தர்யாவுக்கு என்று தனி ரசிகர்கள் உருவாகியிருந்தனர்.

ஆனாலும் சௌந்தர்யா பிஆர் வைத்து விளையாடுகிறார். அதனால் தான் அவருக்கு இவ்வளவு சப்போர்ட் கிடைக்கிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது அது குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போட்டியாளர்கள் கூட சௌந்தர்யாவிடம் நேரடியாக பேசி இருந்தனர். ஆனால் சௌந்தர்யா அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தன்னுடைய விளையாட்டில் கவனம் செலுத்தி வந்தார்.

அதே நேரத்தில் பிக் பாஸ் கிராண்ட் பினாலே மேடையில் விஜய் சேதுபதி பக்கத்தில் சௌந்தர்யா மற்றும் முத்துக்குமரன் நின்று கொண்டிருந்தனர் இதில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருந்தது முத்துக்குமரன் ஜெயிக்க வேண்டும் என்று எல்லோரும் நினைத்தாலும் சௌந்தர்யாவும் நிற்பதால் அவர்கள் ஜெயிக்கப் போகிறாரா? என்ற கேள்விகளும் எழுந்து வந்தது.

ஆனால் கடைசியில் விஜய் சேதுபதி முத்துக்குமரன் டைட்டில் வின்னர் என்று அறிவித்திருந்தார். அப்போது சௌந்தர்யா நல்ல வேலை சார் நான் கூட என் கையை தூக்கிருவீங்களோனு பயந்துட்டேன். என் கையில் நீங்க அந்த கோப்பையை தந்திருந்தா கூட எங்க அப்பா ஓடிவந்து அந்த கோப்பையை வாங்கி முத்துக்குமரனுக்கு கொடுத்திருப்பார் என்று பாசிட்டிவாக சொல்லி இருந்தார்.

ஜெயிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இத்தனை போராட்டங்கள் கஷ்டங்கள் எல்லாவற்றையும் தாண்டி வந்திருக்கிறார்கள். ஆனால் கடைசி நேரத்தில் தனக்கு வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் தன்னோடு இருந்தவருக்கு கிடைப்பதை நினைத்து சௌந்தர்யா பாசிட்டிவாக பேசியது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சௌந்தர்யாவிற்கு அதிகமான பாசிட்டிவ் கமெண்ட்ஸ்கள் குவிந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் முத்துக்குமரன் சௌந்தர்யா பற்றி சில விஷயங்களை சொல்லி இருக்கிறார். அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில விஷயங்கள் கிராண்ட் பினாலே மேடையில் நடந்ததை காட்டவில்லை.

நான் விஷால், சௌந்தர்யா மூன்று பேரும் நின்று கொண்டிருந்தோம். அப்போது விஷால் எவிக்ஷன் செய்து அனுப்பப்பட்ட பிறகு நானும் சௌந்தர்யாவும் மட்டும் ஒரு இடத்தில் உட்கார்ந்து இருந்தோம். அப்போது சௌந்தர்யா நீ தான் எப்படியும் டைட்டில் வின்னராக போகிறாய். கண்டிப்பாக டைட்டில் வின்னரானதும் எங்கள மறந்துடாத என்று சொன்னார்.

நான் பதட்டத்திலேயே இருக்கிறேன் ஆனால் அந்த நேரத்தில் கூட சௌந்தர்யா கூலாக என்னை பார்த்து இப்படி சொல்வது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் நான் ஒரு பேச்சுக்கு கூட நீதான் வெற்றி பெறுவாய் என்று என்னால் சொல்ல முடியவில்லை. அது ஏனென்று எனக்கு அந்த நேரத்தில் தெரியவில்லை. ஆனால் சௌந்தர்யாவிற்கு அந்த மனது பெரிய விஷயம் தான்.

நீ எதற்காக டென்ஷனா இருக்கிற. கண்டிப்பா நீ தான் ஜெயிக்க போற என்று எனக்கு தைரியம் சொல்லிக்கிட்டே இருந்தாங்க. சௌந்தர்யா ரொம்ப நல்ல பொண்ணு. எந்த அளவிற்கு துரு துருவென இருக்கிறாளோ அந்த அளவிற்கு சௌந்தர்யா மனசுக்குள்ளேயே பாசிட்டிவான மனநிலை இருக்கிறது என்று அந்த பேட்டியில் முத்துக்குமரன் பேசியிருக்கிறார். இதை சௌந்தர்யாவின் ரசிகர்கள் பாராட்டி ஷேர் செய்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+