பிக் பாஸ் தமிழ் 8: இந்த முறை தொகுப்பாளர் இவர் தானா? பிரம்மாண்ட செட்.. விரைவில் ப்ரோமோஷூட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி முடிவடைந்து சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் விரைவில் 8வது சீசன் தொடங்கப்பட இருக்கிறது. இதில் யார் தொகுப்பாளர்கள் எப்போது ப்ரோமோ வெளியாகும் என்ற தகவல்கள் இப்போது இணையத்தில் பரவி வருகிறது அது பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பெயர் போன விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதனாலேயே இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து இருக்கிறது. விரைவில் எட்டாவது சீசன் தொடங்க இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைந்ததும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு விடும். இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டப் போக இருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டிருக்கிறது என்று கூறப்படுகிறது.

Vijay TV Bigg Boss Entertainment

ஏற்கனவே முதல் ஐந்து சீசன் வரை தொகுத்து வழங்குவதற்காக தான் கமலுடன் ஒப்பந்தம் போட்டு இருக்கிறார்கள் என்கிற தகவல்கள் வெளியானது‌ இதனால் ஐந்தாவது சீசன் முடிவடைந்ததும் ஆறாவது சீசனில் கமல் தொகுத்து வழங்குவாரா? என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருந்தது. ஆனால் ஆறாவது மற்றும் ஏழாவது சீசனை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார். இந்த நிலையில் ஏழாவது சீசனில் பெரிய அளவில் சர்ச்சைகளையும் கமல்ஹாசன் சந்தித்திருந்தார்.

இதனால் எட்டாவது சீசனை அவர் தொகுத்து வழங்குவாரா? இல்லையா? என்ற கேள்வி எல்லா ரசிகர்கள் மத்தியிலும் இருக்கின்றது. இந்த நிலையில் எட்டாவது சீசனுக்கு கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விட்டதாம். கமல் தான் எட்டாவது சீசனையும் தொகுத்து வழங்குகிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் கமல்ஹாசன் இதுவரை இல்லாத வகையில் இந்த சீசனில் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதற்காக அதிகப்படியான பணம் கேட்பதாகவும் அதற்காக சேனல் தரப்பில் யோசித்துக் கொண்டிருப்பதாகவும் ஆரம்பத்தில் பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இப்போது கமல்ஹாசன் இந்த சீசனில் வழக்கம்போல தொகுத்து வழங்குவார் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்த சீசனுக்கான புரமோஷன் தொடங்கும் நாள் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து பிக் பாஸ் வீடு அமைக்கும் பணி தொடங்கப்பட இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

வீட்டிற்கான பணிகள் தொடங்கப்பட்டதும் முதல் வாரத்திலேயே பிரமோஷூட் தொடங்கினாலும் தொடரலாம் அப்படி நடந்தால் ஆகஸ்ட் 15 வக்கீல் நிகழ்ச்சியை குறித்த ஃபர்ஸ்ட் லுக் வெளியாவதற்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் இப்போது கமல்ஹாசன் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். அதனால் அவருடைய கால்ஷீட்படிதான் ப்ரோமோ ஷூட் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+