Bigg Boss : நேற்று பிக் பாஸில் மரண குத்து கொடுத்த விஜய் சேதுபதி! வார்த்தையை விட்ட ஆதிரை.. குவியும் கமெண்ட்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி, நான்காவது வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் நிலையில், இந்த வாரம் ஆதிரை அதிரடியாக வெளியேறியது ரசிகர்களிடையே கலவையான உணர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த எவிக்‌ஷன் சிலருக்குச் சரியாகத் தோன்றினாலும், ஆதிரை மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே வர வாய்ப்பு இருப்பதாகக் கிளம்பியுள்ள தகவல், நிகழ்ச்சிக்கு மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

Bigg Boss Bigg Boss tamil Vijay Sethupathi vijay tv

மந்தமான எலிமினேஷன்

பிக் பாஸ் 9 நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே, 'ஆட்டம் இன்னும் சூடுபிடிக்கவில்லை' என்ற குற்றச்சாட்டு நீடித்து வருகிறது. இதற்கு முன் நடந்த இரண்டு எலிமினேஷன்களும் பெரும்பாலும் ரசிகர்கள் எதிர்பார்த்ததுதான். பெரிய அளவில் விளையாடாத பிரவீன் காந்தி மற்றும் திருநங்கை அப்சரா ஆகியோர் வெளியேறினர். "இரண்டு வாரமா தூங்கிட்டு இருந்தவங்க கடைசியில் தூங்கப் போனதே நல்லதாப் போச்சு" என்று ரசிகர்கள் கலாய்த்தனர்.

ஆதிரையின் வெளியேற்றம்

ஆனால், இந்த முறை ஆதிரையின் வெளியேற்றம் சிலருக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆதிரை முதல் வார நாமினேஷனில் இருந்தே ரசிகர்களிடம் தனக்கான இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருந்தார். அவர் பேசும் விஷயங்கள் பல நேரம் ரசிகர்கள் மனதில் இருந்த கேள்விகளைப் பிரதிபலிப்பாகவே இருந்தன. அவர் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். கண்டிப்பாக ஆதிரை ஃபைனல் மேடையில் ஏறுவார் என்று கூட எதிர்பார்க்கப்பட்டது.

காதல் கன்டென்ட்டின் விலை

ஆனால், அவர் எஃப்.ஜே.யுடன் நடந்துகொண்ட விதம் பலருக்கும் வெறுப்பைத் தந்தது. வெறும் இரண்டு வாரத்தில் காதல் கன்டென்ட் கொடுப்பது ரசிகர்களிடம் ரசிக்கும்படியாக அமையவில்லை. அதிலும் கடந்த வாரம் முழுவதும் ஆதிரையை எஃப்.ஜே. தவிர்த்து வந்தார். ஆனாலும் தொடர்ந்து அவரிடம் ஆதிரை பேசிக்கொண்டிருந்தது, அவர் மீது சலிப்பை ஏற்படுத்தி எலிமினேஷன் வரை கொண்டு சென்று இருக்கிறது. அதிரை மீது ரசிகர்களுக்கு வெறுப்பு வருவதற்கு காரணம் அவருக்கு வெளியே ஒரு காதலர் இருப்பதாகவும் ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் தனக்கு என்டர்டைன்மென்ட் வேண்டும் என்று எஃப்ஜே மீது தனக்கு ஒரு அஃபெக்ஷன் இருப்பதாகவும் அவர் சொல்லி இருந்தார். இதனால் இவர் மீது ஒரு நெகட்டிவ் உருவாகிவிட்டது.

விஜய் சேதுபதிக்கு மரியாதை

போட்டியாளர்கள் குறித்து அவர்களுக்கு முகத்திற்கு நேராகக் கருத்துகளை முன் வைக்க முதல் முறை வெளியேறிய போட்டியாளருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது ஆதிரை பேசிய சில வார்த்தைகள் சர்ச்சையை உருவாக்கியுள்ளன. மேடையில் பேசிய ஆதிரை, "நான் வீட்டிற்குள் இருக்கத் தகுதி உடையவள். ஆனால் தகுதியே இல்லாமல் இன்னும் பலர் உள்ளே இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் ரசிகர்களுக்குச் சரியான புரிதல் இல்லை" என்று சொல்லி அதிர்ச்சி கொடுத்தார்.

விமர்சனம்

"ரசிகர்களுக்குப் புரிதல் இல்லை" என்று அவர் பேசியது பிக் பாஸ் 9 சீசனை பார்த்துக் கொண்டிருக்கும்போது காயப்படுத்தியது. இதற்கிடையில், இந்த நிகழ்ச்சி நடுவர் விஜய் சேதுபதியின் அணுகுமுறை மிகவும் நேர்த்தியாகவும், அநாகரீகமான ஆட்டத்தைத் தாங்காமல் 'சகிக்க முடியவில்லை' என்று வெளிப்படையாகப் பேசும் அவரது துணிச்சலுக்காகவும் ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர். "விஜய் சேதுபதி இருப்பதால்தான் இந்த சீசனைப் பார்க்க முடிகிறது" என்றும் கருத்துகள் முன் வைக்கப்படுகின்றன.

மீண்டும் ஒரு வைல்டு கார்டு

விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி வந்த ஆதிரை வெளியேறி இருப்பதால், வைல்டு கார்ட் எண்ட்ரியுடன் அவர் மீண்டும் சில வாரங்களுக்குப் பிறகு உள்ளே வர வாய்ப்பு இருப்பதாக கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால், "ரசிகர்களை விமர்சித்த ஆதிரை, மீண்டும் அதே ரசிகர்களின் வாக்குகளை நம்பி உள்ளே வர ஒப்புக்கொள்வாரா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது" என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+