Bigg Boss : பிக் பாஸ்ல என்னங்க நடக்குது? கடைசி போட்டியாளராக வந்த அகோரி கலையரசன், மனைவி வெளியிட்ட வீடியோ
சென்னை: விஜய் டிவியில் இன்று (அக்டோபர் 5) பிரமாண்டமாகத் தொடங்கிய 'பிக் பாஸ் தமிழ் சீசன் 9' நிகழ்ச்சியில், இருபதாவது மற்றும் இறுதிப் போட்டியாளராக உள்ளே நுழைந்தவர் அகோரி கலையரசன். சமூக ஊடகங்களில் சில மாதங்களுக்கு முன்பு வரை இவரைப் பற்றித்தான் அதிகமாகப் பேசப்பட்டது. ஆனால், அது இவரது தனித்திறமைகளுக்காக அல்ல, மாறாக இவரது குடும்பப் பிரச்சனைக்காகத் தான்.

இப்படியான சூழ்நிலையில், கலையரசன் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருப்பது, "சர்ச்சை இருந்தால் போதும், பிக் பாஸ் கதவு திறக்கும் போல!" என்று நெட்டிசன்களால் அதிகம் பேசப்பட்டு வருகிறது. சமூக ஊடகங்களில் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமான ஒருவராக இருந்த கலையரசன், இப்போது தன் சொந்த வாழ்க்கையின் சர்ச்சைகளைச் சுமந்தபடி பிக் பாஸ் களத்தில் நிற்கிறார்.
கணவன்-மனைவி சண்டை
அகோரி கலையரசன் மற்றும் அவரது மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பச் சண்டை, இணையத்தில் ஒரு திறந்த புத்தகமாகவே மாறியது. இவர்கள் இருவரும் சில வருடங்களுக்கு முன்பு பிரிந்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால், சில மாதங்கள் கழித்து இருவரும் மீண்டும் சேர்ந்து விட்டனர்.
மீண்டும் சேர்ந்த பிறகும்கூட, நிலைமை சீராகவில்லை. கடந்த வருடத்தில், கலையரசனின் மனைவி, "தன் கணவர் கடவுளுக்குச் சமம்" என்று புகழ்ந்து பேசிய வீடியோக்கள் இணையத்தில் இருந்தன. ஆனால், அதன் அடுத்த சில மாதங்களிலேயே நிலைமை தலைகீழானது. கலையரசனின் மனைவி அவர் மீது பல குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் முன்வைத்தார்.
இதற்குப் பதிலடியாக, கலையரசனின் அம்மா மற்றும் சகோதரிகள் கதறி அழுதபடி வீடியோவில் வந்து, தங்கள் தரப்பு நியாயத்தைப் பேசினர். இப்படி, குடும்பப் பிரச்சனை, கணவன்-மனைவி மோதல், மாமியார்-மருமகள் சண்டை என ஒரு முழு நீளத் தொலைக்காட்சி சீரியலுக்குரிய அத்தனை 'மசாலா'க்களும் கலையரசனின் வாழ்வில் அரங்கேறியது.
பிக் பாஸ் வீட்டிலும் பஞ்சாயத்து
இவ்வளவு சர்ச்சைகளையும், குடும்பப் பிரச்சனைகளையும் சுமந்து கொண்டு, இப்போது அகோரி கலையரசன் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருப்பது, ரசிகர்களிடையே சிரிப்பையும், லேசான கிண்டலையும் ஏற்படுத்தியுள்ளது.
"கலையரசன் அவர்களே! நீங்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வரக் காரணம், ஒருவேளை உங்கள் 'அகோரி வேடத்தைக் காண்பிக்கத்தானா, அல்லது உங்களைச் சுற்றியுள்ள சண்டைகளை விட இந்த வீட்டில் இருக்கும் சண்டைகள் சாதாரணமாக இருக்கும் என்று நம்புவதா?" என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
ஏற்கனவே 'பிக் பாஸ்' வீடு சண்டைகளுக்கும், பஞ்சாயத்துகளுக்கும் பேர் போனது. இப்போது குடும்பப் பிரச்சனை அரசியலில் கைதேர்ந்த அகோரி கலையரசனும் உள்ளே வந்திருப்பதால், இந்த சீசனில் நிச்சயம் சண்டைகளுக்கு ஒரு புதிய ஃபார்முலாவைக் காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனி, அவர் பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களுடன் என்ன மாதிரியான 'நாடகங்களை' அரங்கேற்றப் போகிறார் என்பதைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம். அகோரி கலையரசனின் இந்தச் சர்ச்சைப் பின்னணி, பிக் பாஸ் டைட்டிலை வெல்ல அவருக்குச் சாதகமாக அமையுமா என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications