பார்வதிக்கு ரெட் கார்டு தப்பு! சான்ட்ரா நாடகம் போடுறாங்க! பிரஜன் அநாகரிகமா பேசுறாரு! தர்பூசணி திவாகர் ஆதங்கம்
சென்னை: பிக் பாஸ் சீசன் 9 இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 'கார் டாஸ்க்' நிகழ்ச்சி எதிர்பாராத அளவுக்கு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. டாஸ்க் என்ற பெயரில் தொடங்கிய விவகாரம், ஒரு கட்டத்தில் வாக்குவாதமாகவும், அதன் பின் நேரடி அடிதடி தாக்குதலாகவும் மாறியது. காருக்குள் இருந்த சாண்ட்ரா, பார்வதி, கம்ருதீன் மூவருக்கும் இடையே நடந்த மோதல், பிக் பாஸ் வரலாற்றிலேயே பேசப்படும் சம்பவமாக மாறியது.
வாக்குவாதம் உச்சத்தை எட்டிய நிலையில், பார்வதி சாண்ட்ராவை எட்டி உதைக்க, கம்ருதீனும் அதில் இணைந்து சாண்ட்ராவை வலுக்கட்டாயமாக காரில் இருந்து வெளியே தள்ளினார். இதைப் பார்த்த ரசிகர்கள், சமூக வலைதளங்களில் உடனடியாக ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

விஜய் சேதுபதி எடுத்த அதிரடி முடிவு
சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி, பார்வதி மற்றும் கம்ருதீன் இருவருக்கும் ரெட் கார்டு வழங்கி உடனடியாக வெளியேற்றினார். பிக் பாஸ் வரலாற்றில் முதல்முறையாக ஒரு பெண் போட்டியாளருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்ட சம்பவம் இதுவாக அமைந்தது. இந்த முடிவை ஸ்டுடியோவில் இருந்த பார்வையாளர்கள் கைதட்டி வரவேற்ற நிலையில், சபரியின் விசிலும் கூட அந்தக் காட்சியை மேலும் 'ட்ரெண்டிங்' ஆக்கியது.
பார்வதி வெளியேற்றப்பட்ட பிறகும், தன் மீது எந்த தவறும் இல்லை என்பது போல தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவுகள் பகிர்ந்து வருவது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 'நான் அநியாயமாக வெளியேற்றப்பட்டேன்' என்ற தொனியில் பதிவுகள் தொடர, சிலர் அவருக்கு ஆதரவாகவும் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தாலும், பிக் பாஸ் டிராமா இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதே உண்மை.
இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 9 போட்டியாளர் வாட்டர்மெலன் திவாகர் அளித்த பேட்டி, நெருப்பில் எண்ணெய் ஊற்றும் வகையில் அமைந்துள்ளது. பார்வதிக்கு ரெட் கார்டு கொடுத்தது வேதனையளிக்கிறது என்றும், கார் டாஸ்கில் சாண்ட்ரா தான் பார்வதியின் கோபத்தை தூண்டினார் என்றும் அவர் பேசி இருக்கிறார். மேலும், "தள்ளுவது, இடிப்பது எல்லாமே விளையாட்டின் ஒரு பகுதி தான்" என அவர் கூறியது, பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.
ஒருபக்கம் உடல் ரீதியான தாக்குதல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மறுபக்கம் அதனை 'கேம்' என எளிதாக கடந்து செல்லும் விளக்கங்கள் வருவது தான் தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. ஒருவரை உதைத்து வெளியே தள்ளுவதும், வரம்பு மீறிய வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் உண்மையிலேயே ஒரு விளையாட்டா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் தீவிரமாக பேசப்படுகிறது.
சாண்ட்ரா மீது குற்றச்சாட்டு
திவாகர் தனது பேட்டியில் சாண்ட்ரா, "அழுது நாடகமாடுகிறார்", "முதுகில் குத்துகிறார்" போன்ற குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். அதோடு நான் ஒரு டாக்டர் என்பதால் எனக்கு சில விஷயங்கள் தெரியும். சான்ட்ரா காரில் இருந்து கீழே விழுந்ததால் அவருக்கு வலிப்பு வரவில்லை அவர் சும்மா நாடகம் போட்டு இருக்கிறார். பிக் பாஸ்க்கு வெளியே கூட அவருடைய புருஷன் அநாகரிகமாக பேசிக் கொண்டிருக்கிறார் என்று திவாகர் பேசி இருக்கிறார். ஒருபக்கம் விஜய் சேதுபதி எடுத்த அதிரடி நடவடிக்கை பாராட்டப்பட்டாலும், மறுபக்கம் விமர்சிக்கபட்டும் வருகிறது












Click it and Unblock the Notifications