Bigg Boss : அடிதடியோடு கலவரமான பிக் பாஸ் வீடு! திவாகர் நெஞ்சில் எட்டி மிதித்த விஜே பார்வதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டி.வி-யில் ஆரம்பிக்கப்பட்டு வெறும் 4 நாட்கள்தான் ஆகியிருக்கு பிக் பாஸ் தமிழ் சீசன் 9. ஆனா, இந்த வீடு இப்போ சண்டை, காமெடி, கண்ணீர், 'ரிசைன்மென்ட்'னு ஒரு வருஷச் சரக்கு நாலு நாள்ல தீர்ந்த மாதிரி கலகலப்பாக ஓடிட்டு இருக்கு! இந்த நிலையில் இன்று அக்டோபர் ஒன்பதாம் தேதிக்கான முதல் பிரமோ பலரையும் பதர வைத்திருக்கிறது. அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

Bigg Boss Bigg Boss tamil Vijay Sethupathi vijay tv

வாட்டர் மெலன் அகாடமி டிராமா

போட்டியாளர்கள் ஒருத்தரை ஒருத்தர் சண்டை போட்டுக்கிட்டு இருக்கும்போது, பிக் பாஸ் ஒரு வித்தியாசமான டாஸ்க்கைக் கொடுத்திருக்கார். நான்காவது நாளுக்கான ப்ரோமோவில், சபரி வாசித்த அந்த டாஸ்க்கின் கேப்ஷன், 'மோர்னிங் ஆக்டிவிட்டி வாட்டர் மெலன் அகாடமி'!

இது என்னடா புதுப் பெயருன்னு பார்த்தா, இது நம்ம 'வாட்டர் மெலன் ஸ்டார்' திவாகரைக் கலாய்க்கிறதுக்காக வச்ச பேர்தான்! இந்த டாஸ்க்குல எல்லோரும் நடிக்கணும்! வி.ஜே. பார்வதி டிராமான்னா சும்மா விடுவாங்களா? நடிப்பின் உச்சகட்டமா திவாகரை நெஞ்சில் ஓங்கி மிதிச்சுட்டு, "என்னைக்கு இருந்தாலும் நான் தான் உனக்கு லவ்வு"னு சொன்னாங்க. இதைப் பார்த்த சக போட்டியாளர்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறாங்க. வல்லவன் பட காட்சிகள் ரீ கிரியேட் செஞ்சிருக்காங்க போல.

அடுத்ததாக, விக்கல்ஸ் விக்ரம் செம மாஸ்! "அடக்க நினைக்கின்றாயா என் தமிழினத்தை? விட்டு விடுவேனா? வீரபாண்டியன் கட்டபொம்மனடா!"ன்னு அவர் பேசின வசனத்துக்குப் போட்டியாளர்கள் கைதட்டிப் பாராட்டினாங்க. இறுதியில, இந்தக் கலாய் டிராமாவுக்குப் பரிசா, திவாகரே, விக்கல்ஸ் விக்ரமை ' பிக் பாஸ் வீட்டின் நடிப்பு அரக்கன்'னு தேர்ந்தெடுத்தார்.

திவாகரின் டார்கெட் டிராமா அனுதாபம் ஏறுது

ஆரம்பத்துல இருந்தே, இந்த வீட்டுல திவாகர் மட்டும்தான் எல்லோருடைய 'வாட்டர் மெலன் டார்கெட்'-ஆக இருக்கார். அவர் பேசுற தற்பெருமையும், பில்டப்பும் பலருக்கும் பிடிக்கலைங்கிறது உண்மைதான். ஆனா, எல்லாப் போட்டியாளர்களும் ஒண்ணா சேர்ந்து ஒரு ஆளை மட்டும் டார்கெட் பண்ணும்போது, வெளியில இருக்கிற ரசிகர்களுக்கு அனுதாபம் வராமல் இருக்குமா?

இப்போ நிலைமை என்னன்னா, இந்த வார நாமினேஷன் லிஸ்ட்ல திவாகருக்கு அதிகமான ஓட்டுகள் கிடைத்திருக்குதாம்! வெளியே திவாகருக்கு சப்போர்ட் கூடிட்டு இருக்குன்னு தெரிஞ்சா, அவர் இன்னும் அதிகமாகப் பெருமை பேசிக்கிட்டுத் திரிவார்!

நேற்று இரவு நடந்த ஒரு சண்டையிலதான் திவாகருக்கு அதிகமான சப்போர்ட் கிடைச்சது. கெமி, திவாகரிடம் தேவையில்லாம சண்டைக்குப் போய்க்கிட்டு இருந்தப்போ, "என்னுடைய கண்ணைப் பாத்து பேசுங்க! வயிற்றைப் பாத்து பேசாதீங்க!"னு ஒரு குற்றச்சாட்ட வச்சார்.

இதுவரைக்கும் பாடி ஷேமிங் பண்றாங்கன்னு அழுதுகிட்டு இருந்த திவாகரை, இப்போதன்னை தவறான நோக்கத்தில் பார்த்ததாக கெமி குற்றச்சாட்டு வைத்தது வெளியே திவாகருக்கு ஆதரவு பல மடங்கு கூடிருச்சு!

இனியாவது சண்டையை குறைப்பாங்களா

மொத்தத்துல, பிக் பாஸ் வீட்டை விட்டு சீக்கிரம் வெளியே போகணும்னு திவாகரை டார்கெட் பண்ணிக்கிட்டு இருக்கிற மற்ற போட்டியாளர்கள், அவங்க பாட்டுக்குச் சண்டை போட்டு, திவாகரை 'கிங்காக' மாத்திக்கிட்டு இருக்காங்க!

இனியாவது மற்ற போட்டியாளர்கள் எல்லாரும், திவாகர் மேல அட்டாக் பண்றதைக் குறைச்சுக்கிட்டு, அனுதாப ஓட்டுகளை அவர் வாங்காமப் பார்த்துப்பாங்களா, இல்லைன்னா, தொடர்ந்து சண்டை போட்டு, அவரை ஃபைனலுக்கு அனுப்பி வைப்பாங்களான்னு ஒரு பெரிய கேள்வியோட காத்துட்டு இருக்கோம்! சக போட்டியாளர்கள் திவாகரை டார்கெட் செய்வது, அவருக்கு அனுதாப ஓட்டுகளைக் கூட்டுகிறதா அல்லது உண்மையாகவே அவர் ஆட்டத்தை வீணாக்குகிறதா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+