Bigg Boss 9: பிக் பாஸ் 9 வீட்டில் முதல் நாளே லவ் ட்ராக்? அரோராவிடம் வம்பிழுத்த திவாகருக்கு விழுந்த தக் லைஃப்
சென்னை: விஜய் டிவியில் இன்று பிரம்மாண்டமாகத் தொடங்கிய 'பிக் பாஸ் தமிழ் சீசன் 9' நிகழ்ச்சி, முதல் நாளே கலகலப்புக்கும், லேசான ரொமான்ஸுக்கும் பஞ்சமில்லாமல் தொடங்கியுள்ளது. நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக உள்ளே வந்த 'வாட்டர்மெலன் ஸ்டார்' திவாகர், இரண்டாவது போட்டியாளராக வந்த 'பலூன் அக்கா' அரோராவிடம் முதல் நாளே வம்புக்கு இழுக்கும் வேலையைக் காட்டிவிட்டார்.
சமூக வலைதளங்களில் தனது நகைச்சுவைக்காகப் பிரபலமான திவாகர், பிக் பாஸ் வீட்டுக்குள் வந்ததும் போட்டியாளர்களுடன் சகஜமாகப் பேச ஆரம்பித்தார். அந்த நேரத்தில், அவர் மாடலும் சோஷியல் மீடியா பிரபலமான அரோராவைப் பார்த்து, "உங்க கண் அழகா இருக்கு" என்று வெளிப்படையாகப் புகழ்ந்துள்ளார்.

தக் லைஃப் மொமண்ட்
திவாகரின் இந்தப் புகழ் மாலை, பிக் பாஸ் வீட்டுக்குள் ஒரு காதல் ட்ராக் ஆரம்பமாகிறதோ என்று பார்வையாளர்கள் நினைக்கும் அளவுக்கு இருந்தது. ஆனால், அந்த நேரத்தில் அருகில் இருந்த மற்றொரு போட்டியாளரான F.J. உடனே குறுக்கிட்டு, திவாகருக்கு ஒரு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டார்.
"இவங்களுக்கு உங்க பேத்தி வயசு" என்று F.J. கிண்டலடித்தபோது, திவாகர் உடனடியாக அமைதியாகிவிட்டார். ஒரு நகைச்சுவை நடிகராகப் பேச்சால் வம்பிழுக்க நினைத்த திவாகருக்கு, அருகில் இருந்த போட்டியாளர் கொடுத்த இந்த 'தக் லைஃப்' (தக்க பதிலடி) மொமண்ட், முதல் நாளே வீட்டில் கலகலப்பைக் கூட்டியது.
பிக் பாஸ் வீட்டுக்குள் வரும் போட்டியாளர்கள், முதல் இரண்டு நாட்களில் சக போட்டியாளர்களைப் புகழ்வது, கிண்டல் செய்வது அல்லது வம்பிழுப்பது வழக்கம். அந்த வகையில், திவாகர் அரோராவைப் பார்த்துக் கண் அழகைப் பற்றிப் பேசியதும், அங்கேயே அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம், இந்த சீசனில் நிச்சயம் கலகலப்புக்கும், சண்டைகளுக்கும் பஞ்சமிருக்காது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
முதல் நாளே ஆரம்பமான இந்தச் சிறு ரொமான்ஸ் மற்றும் அதற்கான பதிலடி, இந்த சீசனின் ஆட்டத்தின் போக்கை எப்படி மாற்றும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications