Bigg Boss 9: பிக் பாஸ் 9 முதல் எவிக்ஷன்! டாக்டர் திவாகரா? தில்லாலங்கடி வேலையை அம்பலப்படுத்திய பிரபலம்!
சென்னை: விஜய் டிவியில் நேற்று (அக்டோபர் 5) பிரமாண்டமாகத் தொடங்கிய 'பிக் பாஸ் தமிழ் சீசன் 9' நிகழ்ச்சி, முதல் நாளே களேபரங்களைத் தொடங்கிவிட்டது. தொகுப்பாளர் விஜய் சேதுபதி அறிமுகப்படுத்த, மொத்தம் 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். இந்த சீசனில், திவாகர் (வாட்டர்மெலன் ஸ்டார்), அரோரா சின்க்ளேர் (பலூன் அக்கா), வி.ஜே. பார்வதி, இயக்குநர் பிரவீன் காந்தி, தேசிய வீராங்கனை மற்றும் டான்ஸர் கெமி, மேடை கலைஞர் ரம்யா ஜோ, 'மீனவப் பெண்' சுபி, மற்றும் சர்ச்சை நடிகர் அகோரி கலையரசன் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

ஒருநாள் கூத்து டாஸ்க்
பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் நுழைந்த முதல் நாளே, நிகழ்ச்சி நிர்வாகம் அவர்களுக்கு ஒரு அதிரடியான டாஸ்க்கைக் கொடுத்துள்ளது. இந்த வாரத்தின் முதல் புரோமோவில், "ஒரு நாள் கூத்து" என்ற தலைப்பில் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, "இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு நாள் கூட தாக்குப்பிடிப்பதற்கான சரக்கு யாருக்கு இல்லையோ?" அவரைத் தேர்ந்தெடுத்து, அதற்கான காரணத்தையும் சொல்ல வேண்டும் என்பதே அந்த டாஸ்க்.
இந்த டாஸ்க் ஆரம்பிக்கப்பட்ட உடனேயே, வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்கள் பலரும் முதல் டார்கெட்டாக டாக்டர் திவாகரைத் தேர்வு செய்தனர்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 முதல் எவிக்ஷன்
திவாகரைத் தேர்வு செய்த போட்டியாளர்கள், தங்கள் கருத்துக்களை மிக வெளிப்படையாக முன்வைத்தனர். அதில் அதிகமாகக் கேட்கப்பட்ட குற்றச்சாட்டு இதுதான்: "டாக்டர் திவாகர் இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பதற்குச் சரியான நபர் கிடையாது. அவர் கேமரா முன்பு மட்டும்தான் பேசிக்கொண்டிருக்கிறாரே தவிர, மற்ற போட்டியாளர்களுடன் அவர் பேசவோ, மக்களுடன் அவர் உள்மனதோடு இணையவோ விரும்பவில்லை."
திவாகர் முதல் நாளே அரோராவிடம் "உங்க கண் அழகு" என்று வம்பிழுத்தது, VJ பார்வதியின் உடையை மிதித்தது, மற்றும் இயக்குநர் பிரவீன் காந்தியிடம் தேவையே இல்லாமல் தன்னை புகழ்ந்து பேசியது போன்ற 'ஆர்வக்கோளாறு' சேட்டைகள், சக போட்டியாளர்கள் மத்தியில் அவருக்கு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தவில்லை என்பதையே இது காட்டுகிறது.
முதல் வார எவிக்ஷன் பயம்
பொதுவாக, பிக் பாஸ் வீட்டில் முதல் வாரத்திலேயே எவிக்ஷன் (வெளியேற்றம்) இருக்காது. இருப்பினும், இந்த 'ஒரு நாள் கூத்து' டாஸ்க், முதல் வார நாமினேஷனுக்கு அடிப்படையாக இருக்கலாம் அல்லது திவாகரின் சவாலான வாரத்தைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் நாளே பெரும்பான்மையான போட்டியாளர்கள் ஒருவரையே டார்கெட் செய்திருப்பது, இந்த சீசனின் ஆரம்பப் பரபரப்பை அதிகரித்துள்ளது. இந்த வாரம் முழுவதும் திவாகர் எப்படிச் சமாளிக்கப் போகிறார், மற்ற 19 போட்டியாளர்கள் மத்தியில் அவர் தன்னை எப்படி நிரூபிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்புடன், இந்த வாரத்தில் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற சலசலப்பும் இப்போதே கிளம்பிவிட்டது. இந்த "ஒரு நாள் கூத்து" டாஸ்க்கில் திவாகர் எப்படி சமாளிப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?












Click it and Unblock the Notifications