Bigg Boss: "இது 'அடல்ட்' பிக் பாஸ் 9 – இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற போவது இவர்? லீக்கான தகவல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 தற்போது நான்காவது வாரத்தை எட்டியுள்ளது. ஆனால், நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வந்தாலும், இந்த சீசன் ஆரம்பம் முதலே டி.ஆர்.பி. ரேட்டிங்கில் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம், போட்டியாளர்களின் மோசமான மற்றும் முகம் சுளிக்கும் வகையிலான நடவடிக்கைகள்தான் என்கிறார்கள் ரசிகர்கள். இந்த நிலையில் இந்த வரை இந்த நிகழ்ச்சியில் இருந்து யார் வெளியேறப் போகிறார்கள் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

அடல்ட் கன்டென்ட் சீசன்
கடந்த சீசன்களை ஒப்பிடுகையில், இந்த 9வது சீசன் அடல்ட் கன்டென்டுக்கு ஃபேமஸாக மாறியுள்ளது. பலரும் 18 + சீசன் என்று இதை விமர்சித்து வருகின்றனர். ஆண்கள் 10 பேர், பெண்கள் 10 பேர் என மொத்தம் 20 போட்டியாளர்கள் சென்ற இந்த வீட்டுக்குள், போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் மிகவும் மோசமாகப் பேசிக் கொள்வது, நெருக்கமாக நடந்து கொள்வது போன்றக் காட்சிகள் 24 மணி நேர லைவ்வில் இடம்பெறுகின்றன.
சர்ச்சை பேச்சுக்கள்
குறிப்பாக, திவாகரின் பாடி லாங்வேஜ், எஃப் ஜேவின் பாடி ஷேமிங் தொடர்பானப் பேச்சுக்கள் ஆகியவை இந்த சீசனுக்கு அடல்ட் கன்டென்ட் முத்திரையைப் பதித்துள்ளது. கடந்த 3 வாரங்களில் 3 எவிக்ஷன்கள் நடந்துள்ளன. ஓட்டுக்கள் அடிப்படையில் பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். VJ நந்தினி மட்டும் முதல் வாரமே தனிப்பட்ட காரணங்களால் பிக் பாஸ் ஷோவில் இருந்து விலகினார்.
4வது வார எவிக்ஷன்
இந்த வாரம் 4வது எவிக்ஷன் நடைபெறவுள்ளது. போட்டியாளர்களில் பலர் கன்டென்ட்டுக்காக மட்டுமே உள்ளே இருப்பதால், சரியான போட்டி மனப்பான்மை இல்லாதது பார்வையாளர்களைச் சோர்வடையச் செய்துள்ளது. இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் அகோரி கலை, அரோரா, காம்ரூதின், பார்வதி, கானா வினோத் ஆகியோர் உள்ளனர்.
கடைசி மூவர்
இதில் குறைந்த வாக்குகள் அடிப்படையில் அகோரி கலை, அரோரா, காம்ரூதின் ஆகியோர் கடைசி மூன்று இடங்களில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த மூன்று பேரில், அரோரா அல்லது அகோரி கலை வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
வைல்டு கார்டு வருகை
போட்டியாளர்கள் சுவாரசியமாக இல்லாததால் டி.ஆர்.பி. ரேட்டிங்கில் ஏற்பட்டப் பின்னடைவைச் சமாளிக்க, பிக் பாஸ் நிர்வாகம் அதிரடி முடிவெடுத்துள்ளது. இந்த வாரம் 4 வைல்டு கார்டு போட்டியாளர்களும் உள்ளே செல்லவிருக்கின்றனர். புதிய போட்டியாளர்களின் வருகை, வீட்டில் நிலவும் 18+ கன்டென்ட்டுகளை மாற்றி, ஒரு ஆரோக்கியமான போட்டிச் சூழலைக் கொண்டு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வெளியே செல்ல போகும் போட்டியாளரும், உள்ளே வரப் போகும் வைல்டு கார்டுகளும், இந்த டல்லடித்த சீசனைச் சூடுபிடிக்க வைப்பார்களா என்றுப் பொறுத்திருந்து பார்க்கலாம்!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications