Bigg Boss: இன்று சாயங்காலம் 6 மணிக்கு சம்பவம்! பிக் பாஸ் பற்றி விஜய் டிவி வெளியிட்ட முதல் ப்ரோமோ! ஆரம்பமே அதிரடி
சென்னை: ஆஹா! பிக் பாஸ் தமிழ் ஒன்பதாவது சீசனுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இன்று மாலை 6 மணிக்கு பிக் பாஸ் பற்றிய பெரிய அப்டேட் வரப்போகிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதுக்குள்ள எட்டு சீசன் முடிஞ்சுபோச்சா? முதல் சீசன்ல இருந்து பிக் பாஸ் பார்த்த நமக்கு, இந்த ப்ரோமோ ஒரு சின்ன ஃபிளாஷ்பேக் மாதிரி மனசுக்குள்ள ஓடிட்டு இருக்கு. இதோ, பிக் பாஸ் வீட்டைப் பற்றி ஒரு சின்ன உரையாடல்...

பிக் பாஸ் - ஒரு புதிய அனுபவம்
நினைவிருக்கிறதா? 2017-ல், முதன்முறையாக கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க, 'பிக் பாஸ் தமிழ்' நிகழ்ச்சி தொடங்கியது. ஒரு மிகப்பெரிய வீட்டுக்குள்ளே, 15க்கும் மேற்பட்ட பிரபலங்கள், 100 நாட்கள் வெளியுலகத் தொடர்பு இல்லாமல் வாழ வேண்டும் என்ற கான்செப்ட், ஆரம்பத்தில் கொஞ்சம் விசித்திரமாத்தான் தெரிஞ்சது. ஆனா, முதல் சீசனிலேயே அது மிகப்பெரிய ஹிட்டாகியது. ஆரவ் முதல் சீசனின் டைட்டில் வின்னராகப் பட்டம் சூடினார்.
சீசன்களும், டைட்டில் வின்னர்களும்
சீசன் 1: ஆரவ்
சீசன் 2: ரித்விகா
சீசன் 3: முகேன் ராவ்
சீசன் 4: ஆரி அர்ஜுனன்
சீசன் 5: ராஜு ஜெயமோகன்
சீசன் 6: அசீம்
சீசன் 7: அர்ச்சனா (முதல் வைல்ட் கார்ட் வின்னர்)
சீசன் 8: முத்துக்குமரன்
பரபரப்பான தருணங்கள்
ஒவ்வொரு சீசனும் ஒவ்வொரு விதமான அனுபவத்தைக் கொடுத்தது. சீசன் 3-ல் கவின் - லாஸ்லியா காதல், தர்ஷனின் நியாயமான ஆட்டம், மற்றும் வனிதா விஜயகுமாரின் ஆவேசமான விவாதங்கள் எனப் பல விஷயங்கள் இன்னும் நினைவில் நிற்கின்றன. சீசன் 6-ல் அசீமின் ஆக்ரோஷமான விளையாட்டு, அவருக்குப் பல எதிர்ப்புகளைப் பெற்றுத் தந்தாலும், இறுதியில் அவர்தான் டைட்டில் வின்னர் ஆனார். சீசன் 7-ல், அர்ச்சனா ஒரு வைல்ட் கார்ட் போட்டியாளராக வந்து டைட்டிலை வென்றது, பிக்பாஸ் வரலாற்றிலேயே ஒரு புதிய சாதனை.
பிக் பாஸ் நிகழ்ச்சி சண்டை, கண்ணீர், காதல், நட்பு என எல்லா உணர்வுகளையும் கலந்துகட்டி ஒரு விருந்து படைக்கும். ஒரு மனிதன் எப்படி நடந்துகொள்வான், அவனுடைய கோபம், வருத்தம், பொறாமை என எல்லாவற்றையும் ஒரு கண்ணாடி மாதிரி நமக்குக் காட்டிவிடும். இது வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி மட்டும் அல்ல, ஒரு சமூகப் பரிசோதனையும்கூட.
ஒன்பதாவது சீசன் - என்னென்ன காத்திருக்கிறது
பிக் பாஸ் தமிழ் சீசன் 9-ன் முதல் ப்ரோமோவில், கடந்த சீசன்களின் பரபரப்பான தருணங்கள் இடம்பெற்றுள்ளன. இது, இனி வரப்போகும் சீசன் எவ்வளவு பவர் பேக்காக இருக்கப்போகிறது என்பதற்கான ஒரு ட்ரெய்லர் மாதிரி இருக்கு.
இன்று மாலை 6 மணிக்கு வரப்போகும் அடுத்த ப்ரோமோ என்னவெல்லாம் சொல்லப்போகுது? இந்த சீசனில் என்னென்ன புது ரூல்ஸ் வரப்போகுது? யார் உள்ளே வரப்போறாங்க? மீண்டும் ஒரு காதல் கதை உருவாகுமா? சண்டை, சிரிப்பு, கண்ணீர், ஆட்டம் என எல்லாம் கலந்த ஒரு பொழுதுபோக்கை இந்த சீசனும் நமக்கு கொடுக்குமா?
எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைக்க, நாம் அனைவரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்குவதற்காகக் காத்திருப்போம்.












Click it and Unblock the Notifications