Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹவுஸ் மேட்ஸ்ஸிடம் கூட சொல்லல.. விஜய் சேதுபதிக்கே ஜெர்க் தந்த பிரவீன் காந்தி... பிக்பாஸ் சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் 9ம் சீசன் தொடங்கி நேற்றுடன் ஒருவாரம் நிறைவடைந்துவிட்டது, இந்த ஷோவில் இருந்து நந்தினி திடீரென வெளியேறிவிட்ட நிலையில் முதல் வார இறுதியில் எலிமினேஷன் இருக்குமா இருக்காதா என கேள்வி எழுந்தது. ஆனால் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்வதற்கேற்ப நேற்றைய எலிமினேஷன் நடந்துள்ளது. இயக்குநர் பிரவீன் காந்தி வெளியேற்றபட்டதற்கான காரணமும் இதுதான் என்று ரசிகர்கள் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்தே சலசலப்புகளுக்கு பஞ்சமில்லாமல் போய்கொண்டிருக்கிறது., போட்டியாளர்கள் தேர்விலிருந்தே இந்த சர்ச்சை கிளம்பியது, அடுத்த முறை போட்டியாளர்கள் தேர்வில் தன்னுடைய தலையீடு நிச்சயம் இருக்கும் என்று கடந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியின்போதே விஜய் சேதுபதி கூறியிருந்தார். அப்படியிருக்கும் போது, அவரது தலையீட்டில்தான் இத்தனை போட்டியாளர்கள் தேர்வானார்களா? என்றும் ரசிகர்களிடம் கிளம்பியது,

Bigg boss tamil season 9 Praveen Gandhi Vijay Sethupathi 9

நிகழ்ச்சி துவங்கியதிலிருந்தே ஆளாளுக்கு கண்டென்ட்டுகளை தர துவங்கிவிட்டார்கள்.. எடுத்ததற்கெல்லாம் தகராறு, சண்டைகளாய் வெடித்து, ஒரு வாரத்துக்கு முன்பே ஒரு போட்டியாளர் வெளியேறினார்,

திவாகர் ஓட்டுக்கள்

இந்நிலையில், இந்த வார நாமினேஷனில் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், ஆதிரை, வியானா, பிரவீன் ராஜ், அப்சரா, கலையரசன், மற்றும் இயக்குநர் பிரவீன் காந்தி ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன.. அதிலும் திவாகரை டார்கெட் செய்து இணைவாசிகளும், ஹவுஸ்மேட்ஸ்களும் ஒரேநேரத்தில் டார்கெட் செய்ததால் அவர்தான் முதல் ஆளாக வெளியேறுவார் என்று பலரும் கணிப்புகளை வெளியிட்டனர். கடைசியில் இதுவே திவாகருக்கு அனுதாப ஓட்டுகளாய் மாறி ஓட்டுக்களில் டாப்பில் உள்ளாராம்,

திவாகருக்கு அடுத்தபடியாக, ஆதிரை, வியானா ஆகியோரும் நல்ல வாக்குகள் பெற்றதாகவும், இவர்களுக்கு அடுத்தபடியாக பிரவீன் ராஜ் அப்சரா உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியின.. அதிலும் டேஞ்சர் ஜோனில் இருக்கும் இருவர், கலையரசன், இயக்குநர் பிரவீன் காந்தி தான்! இதில், இயக்குநர் பிரவீன் காந்திக்குத்தான் மிக மிகக் குறைவான வாக்குகள் கிடைத்திருப்பதாகவும், இதில் முதல் ஆளாக எலிமினேட் ஆகும் போட்டியாளராக, இயக்குநர் பிரவீன் காந்தி இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் செய்திகள் கசிந்திருந்தன,.

ஒரு கண்டெட்டும் தரல

நேற்று எதிர்பார்த்தபடியே டைரக்டர் பிரவீன் காந்தி எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.. வெளியில் இருக்கும்போது சர்ச்சை பேச்சுகளுக்கு பெயர் போனவர் என்பதால் பிக்பாஸ் வீட்டில் பிரவீன் காந்தி ஏகப்பட்ட கண்டென்ட்களை தருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கேற்றபடி முதல்நாள் வீட்டுக்குள் சென்றதுமே கலகலவென பேசி ஆக்டிவ்வாக இருந்தார் பிரவீன் காந்தி.. மறுநாளிலிருந்து எந்தவிதமான கன்டென்ட்டையும், பெரிய ஆக்‌ஷனையும் காட்டாமல் சைலண்ட் மோடுக்கு போய்விட்டார், இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே தந்துவிட்டது,.
அதனால்தான் ஓட்டு வாங்காமல் போய்விட்டதாக தெரிகிறது.'

எனக்காக யாருமே வராதீங்க

வழக்கமாக ஒரு போட்டியாளர் எலிமினேட்டாகி வெளியேறி செல்லும்போது, மற்ற போட்டியாளர்களிடம் சொல்லிவிட்டு, முடிந்தால் அவர்களுக்கு அட்வைஸ் தந்துவிட்டு, தங்களது அன்பையும் வெள்ப்படுத்திவிட்டு வெளியேறி செல்வார்கள்.. சக போட்டியாளர்களும் எலிமினேட் ஆனவரை கடைசிவரை சென்று வழியனுப்பி வைத்துவிட்டு வருவார்கள். இதனால் ஒவ்வொரு எலிமினேஷனும் நெகிழ்ச்சியை தந்துவிடும்,

ஆனால் பிரவீன் காந்தி யாரும் எனக்காக வரவேண்டாம், உள்ளே போங்க என சொல்லி எல்லோரையும் உள்ளே அனுப்பினார். அதேபோல வீட்டில் இருப்பவர்களிடம் எதுவுமே சொல்லாமல் வெளியேறிவிட்டார்.. இதை போட்டியாளர்கள் மட்டுமல்ல, விஜய் சேதுபதியே எதிர்பார்க்கவில்லை.
எனவேதான், பிரவீன் காந்தி பேசிவிட்டு கிளம்பி சென்றபிறகு விஜய் சேதுபதி அதை சொல்லி எல்லோரிடமும் கலாய்த்து விட்டார்.

சேரனை போ நினைச்சாங்களே

பிரவீன் காந்திக்கு என்ன ஆச்சு? டிவி விவாதங்களில் கண்டெண்ட் தருபவரால் பிக்பாஸில் ஏன் தரமுடியவில்லை.. ஏன் 2வது நாளே வீட்டுக்குள் சோர்ந்து போய்விட்டார்? என்று தெரியவில்லை..

வழக்கமாக பிக்பாஸ் வீட்டுக்குள் ஒவ்வொரு முறையும் 40 வயதை கடந்தவர்களை உள்ளே அனுப்புவது வழக்கம். அந்தவகையில் அனுப்பப்பட்ட பிரவீன் காந்தி, சேரனை போல நின்று விளையாடி தாக்கு பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனைவருக்குமே அவர் ஏமாற்றம் தந்துவிட்டதாக ரசிகர்கள் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+