சன் டிவியில் இருந்து சிக்னல்: பிக் பாஸ் 9-க்குள் நுழையும் நடிகை, நடிகர்! மந்தத்துக்கு மருந்தாகும் 'வைல்டு கார்டு'

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சின்னத்திரையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி 20 நாட்களைக் கடந்துள்ள நிலையில், 'ஆட்டம் இன்னும் சூடுபிடிக்கவில்லை' என்ற குற்றச்சாட்டு ரசிகர்கள் மத்தியில் நீடிக்கிறது. இதனால், உஷாரான பிக் பாஸ் குழுவினர், மூன்றாவது வார இறுதியில் அதிரடியாக வைல்டு கார்டு போட்டியாளர்களை வீட்டுக்குள் அனுப்பத் திட்டமிட்டுள்ளனர். இந்த திடீர் 'மசாலா' வரவுதான் இப்போது இணையத்தின் ஹாட் டாபிக்!

Bigg Boss Bigg Boss tamil Vijay Sethupathi vijay tv

சன் டி.வி.யில் இருந்து வந்த சர்ப்ரைஸ்

வைல்டு கார்டு எண்ட்ரிக்கான அப்டேட்கள் வெளிவந்த வண்ணம் உள்ள நிலையில், தற்போது ஒரு பிரபல சீரியல் நடிகை பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ள தகவல் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

திவ்யா கணேஷ்: அந்த நடிகை வேறு யாருமில்லை; சன் டிவியின் 'அன்னம்' சீரியலில் நடித்து வந்த திவ்யா கணேஷ் தான் அவர். திவ்யா கணேஷ் திடீரென 'அன்னம்' சீரியலில் இருந்து விலகியதே, அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காகத்தான் என்று தற்போது உறுதியாகி உள்ளது. அவருக்குப் பதில் பிரியங்கா அந்த சீரியலில் நடிக்கக் கமிட்டாகியுள்ளார்.

மகாநதி சாம்ராஜ்யம்

திவ்யா கணேஷ் ஏற்கனவே விஜய் டிவியின் 'மகாநதி' சீரியலில் நடித்தவர். இதுதான் இப்போது இருக்கும் போட்டியாளர்களுடன் ஒரு சுவாரசியமான பிணைப்பைக் கொடுக்கிறது. தற்போது பிக் பாஸில் ஏற்கனவே 'மகாநதி' சீரியல் பிரபலங்களான கம்ருதீன் மற்றும் ஆதிரை என இருவர் உள்ள நிலையில், மூன்றாவதாக திவ்யா கணேஷும் எண்ட்ரி கொடுக்க உள்ளார்.

ஒரே சீரியலில் நடித்திருந்தாலும், கம்ருதீனும், ஆதிரையும் வீட்டில் எலியும் பூனையுமாகச் சண்டை போட்டு வருகிறார்கள். இப்போது திவ்யாவின் எண்ட்ரிக்குப் பின், இவர்களுக்கிடையேயான மோதல் அதிகரிக்குமா அல்லது பழைய பாசம் துளிருமா என்று பிக் பாஸ் டீம் ஒரு புதிய 'கான்ஃப்ளிக்ட்'டை உருவாக்கலாம்.

வைல்டு கார்டு எதிர்பார்ப்புகள்

திவ்யா கணேஷ் மட்டுமல்லாமல், வேறு சில நடிகர்களின் வருகையும் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் ஆட்டத்தை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு வைல்டு கார்டு எண்ட்ரியாக நடிகர் பிரஜின் செல்ல உள்ளார். பிரஜின் - சாண்ட்ரா ஜோடி வருவதாக முன்னர் தகவல் வந்த நிலையில், பிரஜின் மட்டும் செல்ல வாய்ப்புள்ளதாகச் சிலர் கருதுகின்றனர்.

Bigg Boss Bigg Boss tamil Vijay Sethupathi vijay tv

சிபு சூரியன்

இதுதவிர, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த 'கெட்டி மேளம்' சீரியலில் நடித்து வந்த நடிகர் சிபு சூரியனும் பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு எண்ட்ரி கொடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் ஆட்டம் சூடுபிடிக்காததால், "ஏன் பிக் பாஸ், இந்த வாரமும் தூங்க போறோமா?" என்று கலாய்த்த ரசிகர்களுக்கு, இப்போது 'பிக் பாஸ் டீம்' புதுப்புது முகங்களைக் கொடுத்து உற்சாகமூட்ட முயற்சி செய்துள்ளது. சண்டைக்கோழியான ஆதிரை இந்த வாரம் எலிமினேட் ஆக வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த மூன்று புது வரவுகளினால் பிக் பாஸ் நிகழ்ச்சி சூடுபிடித்து, உண்மையான ஆட்டம் இனிமேல்தான் தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+