பிக் பாஸ் 9க்குள் கிளம்பும் வைல்டு கார்டு புயல்! திவ்யா கணேஷ், பிரஜன் அதிரடி என்ட்ரி! இப்பவே மிரட்டுறாங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி, சண்டை, சர்ச்சைகள், மற்றும் காதல் கண்டென்ட்டுகளால் மட்டுமே நிரம்பி வழிந்த நிலையில், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த வைல்டு கார்டு எண்ட்ரி சண்டைக் களத்தை சூடுபிடிக்க வைக்கத் தயாராகிவிட்டது.

Bigg Boss Bigg Boss tamil Vijay Sethupathi vijay tv

சண்டைக்கோழிகளின் ஆட்டம்

இந்த சீசன் தொடங்கியதில் இருந்தே, "பிக் பாஸ் வீட்டுக்குள் சண்டைகளும் சலசலப்புகளும்தான் அதிகமாக இருக்கிறது" என்ற விமர்சனம் ஓடிக்கொண்டிருக்கிறது. உள்ளிருக்கும் போட்டியாளர்கள், "சண்டை போட்டால் தான் ப்ரோமோவில் இடம் பிடிக்கலாம்" என்ற பிளானோடு, நாள் முழுக்க சண்டையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த 'சண்டைக்கோழி' ஆட்டம் அவர்களுக்கு மைனஸ் ஆகப் போய்க்கொண்டிருக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை.

விஜய் சேதுபதியின் போராட்டம்

இந்தச் சண்டைக் களத்தில், ஒவ்வொரு வாரமும் நடுவராக வரும் விஜய் சேதுபதி மட்டும்தான் நிதானத்துடனும், பொறுமையுடனும் போட்டியாளர்களுடன் போராடிக்கொண்டிருக்கிறார். போன வாரமே அவர், "இனிமேல் ஆட்டம் மாறும்" என்று க்ளூ கொடுத்துவிட்டுப் போயிருந்தார்.

முதல் வைல்டு கார்டு: 'ஜெனி' திவ்யா கணேஷ்

இந்த நிலையில்தான், இந்த வாரம் வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே இறங்க இருக்கிறார்கள். இதில் நடிகை திவ்யா கணேஷ் தான் முதல் வைல்டு கார்டு போட்டியாளராகக் கலந்து கொள்கிறேன் என்று முதல் ப்ரோமோவில் பேசி இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பாக்கியலட்சுமி' சீரியலில் 'ஜெனி'யாக நடித்ததன் மூலம் இவர் பலருக்கும் பரிச்சயமானார். ஆனாலும், அவர் நடித்தப் பல சீரியல்களில் பாதியிலேயே விலகியவர், 'பாக்கியலட்சுமி' சீரியலில் மட்டுமே கடைசி வரை இருந்தார். அதனால்தான் இவரைப் பெரும்பாலும் 'பாக்கியலட்சுமி ஜெனி' என்றே அழைக்கிறார்கள்.

அதிரடி டயலாக்

இவர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று, "உள்ளிருக்கும் போட்டியாளர்களின் முகத்திரையைக் கிழிக்கப் போகிறேன்; அவர்களுடைய நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப் போகிறேன்" என்று சொல்லி, சண்டைக்குத் தயாராகவே புறப்பட்டு வந்திருக்கிறார்.

இரண்டாவது வைல்டு கார்டு: பிரஜன்

திவ்யா கணேஷைத் தொடர்ந்து, ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே இன்னொரு ப்ரோமோவும் வெளியாகி இருக்கிறது. அந்தப் ப்ரோமோவில் நடிகர் பிரஜன்*, "நானும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராகப் போகிறேன். உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு மரியாதை கொஞ்சம் கூடத் தெரியவில்லை. அவர்களுக்கு மரியாதையைச் சொல்லிக் கொடுத்து, அவர்களுடைய முகத்திரையைக் கிழிக்கப் போகிறேன். நான் என்னுடைய இன்னொரு முகத்தை அங்கே காட்டுகிறேன்" என்று அவரும் சவால் விட்டிருக்கிறார்.

இந்த வாரத்தில் அடுத்தடுத்து வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே போகப் போகிறார்கள். இவர்களுடைய வருகைக்குப் பிறகாவது உள்ளிருக்கும் போட்டியாளர்கள் தங்கள் போக்கைத் திருத்திக் கொள்வார்களா? அல்லது, வழக்கம் போல உள்ளே இருப்பவர்கள் இவர்களிடமும் சண்டை செய்து, வம்புக்கு இழுக்க போகிறார்களா?

பொறுத்திருந்து பார்த்தால், நிச்சயம் இந்த வார ஆட்டம் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+