பிக் பாஸ் FJ-யின் போராட்ட வாழ்க்கை! முதல் நாளே திவாகருக்கு கொடுத்த தக் லைஃப்! ஹிப்ஹாப் ஆதி பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவின் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான 'பிக் பாஸ் தமிழ் சீசன் 9' நேற்று (அக். 5) கோலாகலமாகத் தொடங்கியது. கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த சீசனையும் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். இந்த ஆண்டு சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள், சீரியல் நடிகர்கள், யூடியூபர்கள் என மொத்தம் 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்துள்ளனர். இதில், வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், அகோரி கலையரசன், அரோரா சின்க்ளேர், வி.ஜே. பார்வதி, கெமி, ரம்யா ஜோ போன்றோர் அடங்குவர்.

Bigg Boss Bigg Boss tamil Vijay Sethupathi vijay tv

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் பதிவு

இந்த 20 போட்டியாளர்களில் ஒருவராகக் கலந்துகொண்டிருப்பவர் FJ. இவர் சுழல் (சீசன் 1) வெப் சீரிஸ், அரண்மனை 4 உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். FJ-யின் இந்த பிக் பாஸ் பயணத்தைப் பற்றி இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி தனது இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

ஆதி தனது பதிவில், "ஒரு சிறுவனாகக் கையில் மைக் வைத்திருந்த காலத்தில் இருந்தே எனக்கு FJ-வைத் தெரியும். அவனுடைய மிகப்பெரிய கனவு பீட்‌பாக்சிங்தான். அவன் அண்டர்கிரவுண்ட் ட்ரைப்பில் பீட்‌ பாக்சிங் பண்ணுவான். சில சமயம் ரேப் பாடுவான்" என்று தெரிவித்துள்ளார்.

FJ-யை முதன்முறையாகப் பார்த்தபோதே, "இந்த பையன் ஒரு உண்மையான போராளி" என்று தனக்குத் தோன்றியதாகவும், ஒரு நாள் பெரிய மேடைகளில் அவன் கலக்குவான் என்று நம்பிக்கை இருந்ததாகவும் ஆதி கூறியுள்ளார்.

திடீரென ஒரு நாள் வெப் சீரிஸ் ஒன்றைப் பார்த்தபோது, அதில் FJ நடித்திருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்த ஆதி, அவனை அழைத்து, "'தம்பி இது எப்போடா?' என்று கேட்டபோது, அவன், 'அண்ணா, நான் நடிகனாகணும்'ன்னு சொன்னான்" என்றும், "மீண்டும் அவன் போராட்டம் தொடர்ந்தது. அதுதான் FJ" என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

FJ-ஐ "எப்போதும் வாழ்க்கையில் ஒரு படி மேலே போக முயற்சிக்கும் உண்மையான போராளி" என்று பாராட்டிய ஆதி, "இப்போது அவன் பிக் பாஸிற்குள் கால் வைக்கிறான். உண்மையாக இரு தம்பி. நான் உன்னிடம் பார்த்த திறமையை இந்த உலகமும் பார்க்கட்டும். வாழ்த்துக்கள், நிகழ்ச்சியை வென்று வா" என்று ஆசி கூறி பதிவை முடித்துள்ளார்.

முதல் நாளே திவாகருக்குக் கொடுத்த தக் லைஃப்

FJ-ன் இந்த துணிச்சலான குணத்தை பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முதல் நாளே பார்க்க முடிந்தது. இரண்டாவது போட்டியாளராக வந்த அரோராவிடம், வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், தேவையே இல்லாமல் "உங்க கண் அழகாக இருக்கு" என்று புகழாரம் சூட்டினார்.

உடனடியாக, அங்கிருந்த FJ குறுக்கிட்டு, "இவங்களுக்கு உன்னோட பேத்தி வயசு ஆகுது!" என்று கூறி, திவாகருக்கு ஒரு சரியான 'தக் லைஃப்' கொடுத்தார். சண்டைகள், சர்ச்சைகள் நிறைந்த பிக் பாஸ் பயணத்தில், FJ-ன் இந்தத் துணிச்சலும், வெளிப்படைத் தன்மையும் அவருக்குச் சாதகமாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

FJ-ன் பீட்‌பாக்ஸ் திறமை, பிக் பாஸ் வீட்டில் ஏதாவது டாஸ்க்கில் வெளிப்படுமா என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+