Bigg Boss: ஆம்பள மூஞ்சினு கேலி பண்ணுறாங்க! கண் கலங்கிய கெமி! திவாகரிடம் மன்னிப்பு கேட்ட போட்டியாளர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டி.வி-யின் 'பிக் பாஸ் தமிழ் சீசன் 9' நிகழ்ச்சி சண்டை, சச்சரவுகளுக்கு நடுவே, கொஞ்சம் உணர்ச்சிப்பூர்வமான பக்கங்களையும் காட்டத் தொடங்கியுள்ளது. மொத்தமே ரெண்டு நாள்தான் ஆச்சு, ஆனா சண்டையாலேயே வெறுத்துப் போயிருந்த ரசிகர்களுக்கு, போட்டியாளர்களின் 'கடந்து வந்த பாதை' கொஞ்சம் ஆறுதலைக் கொடுத்திருக்கு.

Bigg Boss Bigg Boss tamil Vijay Sethupathi vijay tv

கெமியின் கண்ணீர்க் கதை

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டுல போட்டியாளர்கள் எல்லாரும் அவங்க வாழ்க்கையில நடந்த கஷ்டங்களைப் பத்திப் பேசச் சொல்லிருக்காங்க. இது வழக்கமா சிம்பதி ஓட்டு வாங்கப் போடுற டிராக்தான் என்றாலும், சிலர் கதை உண்மையாகவே மனசு உருக வைக்குது!

போட்டியாளர் கெமி சொன்ன கதை பலரையும் கண்ணீரில் மூழ்கடிச்சுச்சு. அவர் தன் கதையச் சொல்லும்போது, "அன்பா பார்க்க வேண்டிய கண்கள் எல்லாம் என்னை தப்பா பார்த்து இருக்கு..." என்று ஆரம்பித்தார். மாடலிங், ஆங்கர், ஆக்டர் ஆகணும்னு நிறைய ஆசைப்பட்ட கெமி, இந்த ஆசைகளுக்காகப் போராடியபோது சந்தித்த அவமானங்களைப் பகிர்ந்துகொண்டார்.

"இவ ஆம்பள மூஞ்சி... இவ ஆம்பளையா? பொம்பளையான்னு? தெரியல... எல்லோரும் என்னை ஆம்பள மாதிரி இருக்கேன்னு சொன்னாங்க..." என்று அவர் சொன்னபோது, அங்கு ஒரு பெரிய மௌனம் நிலவியது.

அப்போது கெமி கொடுத்த பதில் ஷாக்! "என்னையும் என் குடும்பத்தையும் மொத்தமாகப் பார்த்துக்கிட்டு, காப்பாற்றுவது ஆம்பளத்தனம்னா... நான் ஆம்பளதான்" என்று அவர் கொடுத்த தரமான பதிலடி பலரையும் நெகிழச் செய்தது!

இவருடைய நேர்மையான பேச்சைக் கேட்டுச் சக போட்டியாளர்கள் பலரும் கைதட்டி, தங்கள் அன்பைத் தெரிவிச்சுக்கிட்டாங்க. சமூக வலைதளங்கள்ல பலரும் கெமியின் தைரியத்தைப் பாராட்டி, இவருக்கு ஆதரவாகக் கருத்துக்களைப் பதிவிட்டு வர்றாங்க.

திவாகரின் டிராமாவுக்கு ரெஸ்பெக்ட்

அதேபோல, சண்டைக் கோழி சீசன் 9-இன் கதாநாயகனான டாக்டர் திவாகர் தன்னுடைய வாழ்க்கைக் கதையைப் பத்திப் பேசும்போது ஒரு காமெடி ட்விஸ்ட் நடந்தது. இவரோட தொடர்ச்சியான பில்டப், 'வெட்டிடுவேன்'னு மிரட்டும் சண்டைன்னு எல்லாமே கடுப்பேத்தி, திவாகரை எல்லாரும் ரவுண்டு கட்டினாங்க.

ஆனா, இவருடைய கஷ்டங்களைப் பத்திப் பேசும்போது, சண்டை போட்ட போட்டியாளர்கள் எல்லாம் அவர் கிட்ட மன்னிப்புக் கேட்டு ஒரு புதுப் பஞ்சாயத்தை ஆரம்பிச்சாங்க. அவங்க சொன்னது இதுதான்: "திவாகர், நீங்க நல்ல மருத்துவர் என்பதை ஒப்புக் கொள்கிறோம். ஆனா, உங்களை நடிகர் என்று மட்டும் சொன்னால் நாங்க ஒத்துக் கொள்ள மாட்டோம்!" என்று கலாய்த்தார்கள்!

அதாவது, உன்னுடைய நிஜத் தொழிலுக்கு எங்க ரெஸ்பெக்ட் இருக்கு, ஆனா உன் 'நடிப்பு அரக்கன்' டிராமாவுக்கு ரெஸ்பெக்ட் கிடையாதுன்னு சொல்லிட்டாங்க. இது ஒருபக்கம் திவாகருக்கு அவமானம் போலத் தெரிஞ்சாலும், இன்னொரு பக்கம், அவர் டாக்டர் என்ற அவருடைய உண்மையான அடையாளத்துக்கு ஒரு மரியாதையைப் பெற்றுத் தந்திருக்கிறது.

மொத்தத்துல, இந்த சீசன்ல சண்டையும் குறையல, கண்ணீர்க் கதைகளும் ஓயல. கெமியின் கதை பலருக்குத் தைரியம் கொடுத்திருக்கு. திவாகரின் கதை, சண்டைக்கும், நிஜ வாழ்க்கைக்கும் இருக்கிற வித்தியாசத்தைக் காட்டி இருக்கு!

போட்டியாளர்களின் இந்த உணர்ச்சிப்பூர்வமான கதைகள், அவர்களுக்கு சிம்பதி ஓட்டுகளைப் பெற்றுத் தருமா அல்லது விளையாட்டில் இன்னும் நிறைய உழைக்க வேண்டுமா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+