Bigg Boss: பிக் பாஸிலிருந்து கெமி வெளியேற உண்மை காரணம் இதுதானா? மறைக்கப்பட்ட உண்மை! சம்பளம் இவ்வளவாமே!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தழில் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து கெமி வெளியேறியது பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. போட்டித் திறன் மற்றும் நேர்மைக்குப் பெயர் போன கெமி வெளியேறியதும், "இது அநியாயமான வெளியேற்றம் (அன்ஃபேர் கேம்)" என்று சமூக வலைதளங்களில் பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள்.

விஜய் சேதுபதி ரியாக்ஷன்
கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவராக இருந்த எஃப்.ஜே நன்றாக செயல்பட்டாலும், அவருடைய பேச்சை யாரும் கேட்கவில்லை. பிக் பாஸ் கொடுத்த பணிகளும் ரசிகர்களை கவர்வதுபோல இல்லை. ஆனால், வாரக் கடைசி நாட்களில் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த விஜய் சேதுபதி போட்டியாளர்களை அடுத்தடுத்த கேள்விகளால் வறுத்தெடுத்தார். குறிப்பாக, வைல்டு கார்டு போட்டியாளர்களாக உள்ளே வந்த திவ்யா, சாண்ட்ரா, பிரஜன் மூவரையும் மாறி மாறிக் கேள்வி கேட்டார்.
வரம்புமீறிய பிரஜன்
சாண்ட்ரா, திவ்யா இருவரும் ஏனோதானோவென வேலை செய்ததால் அவர்களைச் சரமாரியாகக் கேள்வி கேட்டார். அதேபோல, எஃப்.ஜே திவ்யாவிற்கு பால் கொடுக்கவில்லை என்பதற்காக பிரஜன் கடுமையான வார்த்தைகளால் பேசியதுடன், பல இடங்களில் வரம்புமீறிப் பேசியிருந்தார். பிரஜனின் தவறுகளை ஒரு பட்டியலிட்டு எடுத்து வந்து மேடையில் படித்துக் காட்டி அவரைத் திக்குமுக்காட வைத்துவிட்டார் விஜய் சேதுபதி.
அநியாயமான வெளியேற்றம்
இந்த வாரம் பிரஜன் வெளியேறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து டப் போட்டியாளரான கெமி வெளியேறி உள்ளார். கெமி உண்மையிலேயே ஒரு நல்ல போட்டியாளர். எந்த டாஸ்க் கொடுத்தாலும் அதை சிறப்பாகச் செய்யக்கூடியவர். சக போட்டியாளர்கள் வீட்டில் தவறாக நடந்து கொண்டால், அதை துணிந்து கண்டித்தும் இருக்கிறார். வீட்டுக்குள் எதுவுமே செய்யாமல் பலர் இருக்கும்போது, கெமியை வெளியேற்றியது சரியில்லை என்று பலரும் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
சினிமா வாய்ப்பு மற்றும் சம்பளம்
கெமி வெளியேறியதற்கு இன்னொரு முக்கியக் காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது, அவர் ஒரு பெரிய திரைப்படத்தில் கமிட் ஆகி இருப்பதாகவும், அந்தப் படத்தில் நடிக்க வேண்டியதால் தான் அவர் இந்த வாரம் வெளியேறிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. கெமி 'குக் வித் கோமாளி' மூலம் புகழ் பெற்றவர், முன்னாள் கூடைப்பந்து வீராங்கனை. பிக் பாஸ் வீட்டில் 50 நாட்கள் இருந்த கெமிக்கு ஒரு நாளைக்கு 8 ஆயிரம் ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு, மொத்தம் 4 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
விஜய் சேதுபதியின் கிப்ட்
கெமி வெளியேறியபோது நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம், விஜய் சேதுபதியின் செயலைத் தனியாகப் பாராட்டுவதற்குக் காரணமாக அமைந்தது. கெமி மேடையில் கலங்குவதைப் பார்த்த விஜய் சேதுபதி, தன்னுடைய கண்ணாடியைக் கொடுத்து, அந்தக் கண்ணீரை மறைக்குமாறு கூறியிருந்தார். விஜய் சேதுபதியின் இந்த அன்பான செயலை இணையத்தில் பலரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
மொத்தத்தில் எதிர்பாராத வெளியேற்றம், சினிமா வாய்ப்பு மற்றும் விஜய் சேதுபதியின் அன்புப் பரிசு என பிக் பாஸ் வீட்டை விட்டுப் போனாலும், கெமி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார்.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications