பிக் பாஸே நீங்கதானா? போட்டியாளர்கள் பேச வாய்ப்பு கொடுங்க!” விஜய் சேதுபதியை கலாய்த்த பிரவீன் காந்தி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி, ஆரம்பமே 'கன்டென்ட்' மற்றும் சர்ச்சைகளில் களைகட்டிவிட்டது. இந்த சீசனின் முதல் வாரத்திலேயே வெளியேற்றப்பட்ட இயக்குநரும் நடிகருமான பிரவீன் காந்தி, இப்போது பேட்டிகள் கொடுத்து, நிகழ்ச்சியையும், அதன் தொகுப்பாளரான விஜய் சேதுபதியையும் சரமாரியாக விமர்சித்துப் பேசியிருப்பதுதான் ஹாட் டாபிக்!

Bigg Boss Bigg Boss tamil Vijay Sethupathi vijay tv

ஜூனியர் சேதுபதிக்கு சீனியர் காந்தியின் அட்வைஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக, ஏழு சீசன்கள் கமல்ஹாசன் இருந்த நிலையில், எட்டாவது சீசனில் இருந்து விஜய் சேதுபதி அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, இப்போது ஒன்பதாவது சீசனையும் தொகுத்து வழங்குகிறார். விஜய் சேதுபதி தன் தனித்துவமான ஸ்டைலில் போட்டியாளர்களைக் கையாள்வது ரசிக்கும்படியாக இருந்தாலும், முதல் ஆளாக எவிக்ட் ஆன பிரவீன் காந்திக்கு அது பிடிக்கவில்லை போல. சமீபத்தில் ஒரு தனியார் ஊடகத்திற்குப் பிரவீன் காந்தி அளித்த பேட்டியில், விஜய் சேதுபதியைச் சற்றும் தயங்காமல் கடுமையாக விமர்சித்திருக்கிறார்:

"விஜய் சேதுபதி எனக்கு சினிமாவில் ஜூனியர். ஆனால் பிக் பாஸில் எனக்கு சீனியர். அதனால்தான் அவரை என்னால் எதிர்த்து பேச முடியவில்லை. அவரிடம் சண்டை போட்டால் 'கலீஜ்' ஆகிவிடும்" என்று பிரவீன் காந்தி சொல்லியிருப்பது தான் இந்தப் பேட்டியின் உச்சகட்டக் கிண்டல்! மேலும், பிக் பாஸ் தொகுப்பாளர் விஜய் சேதுபதிக்கு அவர் அட்வைஸ் ஒன்றையும் வழங்கியிருக்கிறார்:

"விஜய் சேதுபதி அவர்களே, போட்டியாளர்கள் பேசுவதற்கும் கொஞ்சம் வாய்ப்பு கொடுங்கள். கமல்ஹாசன் சார் அதைத்தான் செய்தார். என்னை விட்டுவிடுங்கள். அங்கு இருப்பவர்களையாவது இனிமேல் பேச விடுங்கள்."

பிரவீன் காந்தியின் ஆவேசம்

விஜய் சேதுபதியின் அணுகுமுறை குறித்தும் பிரவீன் காந்தி தன் கோபத்தை பதிவு செய்திருக்கிறார். இந்த சீசனில், விஜய் சேதுபதி, முதல் நாளிலிருந்தே, துஷார், ஆதிரை, கம்ரூதின், கலையரசன் போன்ற போட்டியாளர்களைக் கண்டித்து, தனது பாணியை மாற்றி அதிரடி காட்டி வந்தார். எழுந்து நின்று பெயர் சொல்லாத ஆதிரை, சிரித்த திவாகர், குரலுக்கு விளக்கம் கேட்ட கலையரசன் என அவர் கையாண்ட விதம் ரசிகர்களுக்குப் பிடித்திருந்தாலும், பிரவீன் காந்தி அதைப் பாராட்டவில்லை.

"அவர்கள் பேசுவதற்கு முன்பே அவர்களை 'நோஸ் கட்' செய்வதிலேயே இருக்கிறீர்கள். பிக் பாஸே நீங்கள்தான் என்கிற மாதிரி நான் சொல்றதைத்தான் கேட்க வேண்டும் என்கிற மனநிலை இருக்கிறது" என்றும் பிரவீன் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டுக்குள் அலப்பறை

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்குள் ஆபாச உரையாடல்கள், உருவ கேலி மற்றும் மரியாதை இல்லாமல் பேசுவது எனப் பல அலப்பறைகள் நடந்திருக்கின்றன. முதல் வாரமே பிரவீன் காந்தி வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வார இறுதியில் விஜய் சேதுபதி என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஆனால், "தான் ஒரு வாரத்தில் வெளியேறியது, விஜய்சேதுபதியை எதிர்த்துப் பேசியது என அனைத்துமே 'எழுதப்பட்டது'" என்று முன்னர் பிரவீன் காந்தி கூறியதுதான் இந்தப் பேட்டியை கேட்கும் ரசிகர்களுக்கு இன்னும் கூடுதல் கிண்டலையும், சிரிப்பையும் வரவழைக்கிறது. எது எப்படியோ, 'ஜூனியர்' விஜய் சேதுபதியை பேசிய 'சீனியர்' பிரவீன் காந்தியின் இந்தக் கன்டென்ட், பிக் பாஸ் பரபரப்பை அடுத்த லெவலுக்குக் கொண்டுபோயிருக்கிறது!

சினிமாவில் ஜூனியர் - பிக் பாஸில் சீனியர்! - விஜய் சேதுபதி இந்தக் கருத்துக்கு எப்படி ரியாக்ட் செய்யப் போகிறார்?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+