Bigg Boss 9: பிக் பாஸ் வீட்டில் நள்ளிரவில் நடந்த சண்டை! திவாகரை வறுத்தெடுத்த கெமி! செம சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் நேற்று (அக்டோபர் 5) பிரம்மாண்டமாகத் தொடங்கப்பட்ட 'பிக் பாஸ் தமிழ் சீசன் 9' நிகழ்ச்சி, முதல் நாளே கலகலப்புடன் கூடிய காரசாரமான மோதல்களுக்கும் அச்சாரமிட்டுள்ளது. இதில், யாரும் சற்றும் எதிர்பாராத வகையில் திவாகர் (வாட்டர்மெலன் ஸ்டார்), அகோரி கலையரசன், மற்றும் அரோரா சின்க்ளேர் போன்றவர்கள் போட்டியாளர்களாகக் களமிறங்கினர். இதை நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்
சமூக வலைதளங்களில் தனது நகைச்சுவைக்காகப் பிரபலமான திவாகர், வீட்டிற்குள் வந்த முதல் நாளிலேயே தனது வழக்கமான 'ஓவர் பில்டப்' மற்றும் வாய் வரிசையைக் காட்ட ஆரம்பித்துவிட்டார். இவரின் இந்த அதீதப் பேச்சு, சக போட்டியாளர்களான கெமி மற்றும் இயக்குநர் பிரவீன் காந்தியின் கைகளில் வசமாக மாட்டிக்கொள்ள வழிவகுத்தது.

பிக் பாஸ் பஞ்சாயத்து
பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த ஹவுஸ்மேட்ஸ், திவாகரின் கல்விப் பின்னணி குறித்துக் கேள்வி எழுப்பத் தொடங்கினர். குறிப்பாக, "டாக்டரா நீங்க?" என்று அவரிடம் கேட்கப்பட்டது. இதற்குத் திவாகர் சற்றும் தயங்காமல், "ஆமாங்க, நான் டாக்டர் தான்" என்று பதிலளித்தார்.
உடனடியாக, திவாகரின் 'பிசியோதெரபி' பட்டம் குறித்த விவாதம் அங்கு எழுந்தது. பிசியோதெரபி படித்தவர்களைச் சட்டப்படி 'டாக்டர்' என்று அழைக்கக்கூடாது என்ற விதிமுறைகள் குறித்து விவாதம் வந்தது. இது குறித்துத் தனது தரப்பை எடுத்து வைத்த திவாகர், தனது நிலையை நியாயப்படுத்த ஒரு விளக்கத்தைச் சொல்ல முயற்சித்தார்.
அவர் விளக்கம் கொடுத்த விதம் எப்படி இருந்தது தெரியுமா? "அதுக்கப்புறம் நிறைய போராட்டங்கள்... அதன்பின் அவங்களும் ஒரு டாக்டர் தான் என்ற மாதிரி ஒரு அதிகாரமும் பெற்றிருந்தாங்க... அதெல்லாம் உங்களுக்குச் சொன்னா புரியாது... சொன்னாலும் தெரியாது..." என்று மற்ற போட்டியாளர்களுக்குப் புரியாததைப் போல ஒரு பில்டப் கொடுத்தார்.
கெமியின் பதிலடி
திவாகர் இப்படி, "உங்களுக்குத் தெரியாது; புரியாது" என்று மற்ற போட்டியாளர்களை மட்டம்தட்டிப் பேசியது, அங்கிருந்தவர்களுக்குச் சற்றும் பிடிக்கவில்லை. உடனடியாக, தேசிய கூடைப்பந்து வீராங்கனையும், மாடலுமான கெமி குறுக்கிட்டு பதிலடி கொடுத்தார்
திவாகர் சொன்ன அந்தப் போராட்டக் கதையை, "அதைக் கூகுள் பண்ணிக் கூடப் பார்க்கலாம்... படிச்சா தெரிஞ்சிடப் போகுது..." என்று கெமி சொன்னபோது, திவாகரின் பில்டப் கொஞ்சம் ஆட்டம் கண்டது. ஆனாலும், திவாகர் விடாமல், "அதுக்குப் படிச்சா தெரியாது, புரியாது" என்று மீண்டும் பிடிவாதமாகப் பேசினார்.
பிரவீனின் நெத்தியடி பதில்
திவாகரின் இந்தப் பிடிவாதமும், மற்றவர்களைப் பார்த்து "படிச்சா தெரியாது, புரியாது" என்று திரும்பத் திரும்பச் சொன்ன விதமும், இயக்குநர் பிரவீன் காந்திக்குச் சற்றும் பிடிக்கவில்லை. பொதுவாகவே, வெளிப்படையாகவும், துணிச்சலாகவும் பேசக்கூடிய பிரவீன் காந்தி, உடனடியாகத் திவாகரை எதிர்த்துப் பேசினார்.
"படிச்சா தெரியாது, புரியாது அப்படிங்கற மாதிரி எல்லாம் வந்து சொல்லாதீங்க... படிச்சா தெரியும்... படிச்சா புரியும்... அதை நீங்க முதல் அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கோங்க..." என்று பிரவீன் காந்தி மிகவும் போல்டாகவும், அழுத்தமாகவும் திவாகருக்கு நெத்தியடியாகப் பதிலளித்தார்.
தன் பேச்சால் மற்ற போட்டியாளர்களை வளைத்துப் போட நினைத்த டாக்டர் திவாகருக்கு, முதல் நாளே கெமி மற்றும் பிரவீன் காந்தியின் மூலம் சரியான பதிலடி கிடைத்தது. இனி, இந்த வீட்டில் திவாகர் தனது 'நடிப்பு அரக்கன்' நாடகத்தைத் தொடர்வாரா, அல்லது கொஞ்சம் அடக்கி வாசிப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
வீட்டுக்குள் முதல் நாளே திவாகர் எடுத்த இந்த டாக்டர் பஞ்சாயத்து, அவரது ஆட்டத்தை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க பாஸ்?












Click it and Unblock the Notifications