பிக் பாஸ் 9ல் 2வது போட்டியாளரர் அரோரா.. நிகழ்ச்சிக்கு வந்த காரணமே இதுதானா? ஓபனா சொல்லிட்டாங்களே!
சென்னை: விஜய் டிவியில் இன்று தொடங்கிய 'பிக் பாஸ் தமிழ் சீசன் 9' நிகழ்ச்சியில் இரண்டாவது போட்டியாளராகக் களம் இறங்கிய மாடல் அரோரா, தற்போது சமூக ஊடகங்களில் தவிர்க்க முடியாத பேசுபொருளாக மாறியுள்ளார். சேலத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர், தனது பள்ளிப்படிப்பை அங்கேயே முடித்து, பின்னர் தாவரவியலில் (Botany) பட்டப்படிப்பையும் நிறைவு செய்தார்.

பட்டப்படிப்புக்குப் பிறகு வேலை தேடி சென்னைக்கு வந்த அரோனாவுக்கு, தான் செய்த வேலையில் கிடைத்த சம்பளம் பற்றாத காரணத்தினால், மாடலிங் துறைக்குள் நுழையும் கட்டாயம் ஏற்பட்டது. தனது 21 வயதில் மாடலிங் கரியரைத் தொடங்கிய அரோரா, தனது உடலமைப்பு பாரம்பரிய உடைகளில் மாடலிங் செய்வதற்கு ஏற்றதாக இல்லை என்று உணர்ந்ததால், துணிச்சலாக கிளாமர் மாடலிங்கை நோக்கித் தன் பாதையை மாற்றினார்.
சோஷியல் மீடியா செல்வாக்கு
மாடலிங் துறையில் நுழைந்த அரோனா, இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியாகப் புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார். அதுவே அவருக்குப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொடுத்தது. தற்போது இவருக்கு இன்ஸ்டாகிராமில் 7 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். மாடலிங்கைத் தாண்டி, ஒரு சில குறும்படங்களிலும் அரோரா நடித்துள்ளார். மாடலிங் மற்றும் விளம்பரங்கள் மூலம் அரோரா ஒரு மாதத்திற்குச் சுமார் ரூ. 26 லட்சம் வரை சம்பாதிப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகின. இந்த அதிகப்படியான வருமானம், அவரது உழைப்புக்கும் சமூக ஊடகங்களில் அவருக்கு இருக்கும் செல்வாக்குக்கும் சான்றாக இருக்கிறது.
விமர்சனங்களுக்குப் பதிலடி
அரோனாவின் துணிச்சலான பயணத்தில் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட 'ஆபாசமான' புகைப்படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
மேலும், அங்கீகாரம் இல்லாத டேட்டிங் ஆப்களை விளம்பரப்படுத்தியதாகவும் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. ஒரு மாடலாக, தனது வேலைக்குத் தேவையான எல்லையை அவர் தொடுகிறாரா அல்லது வரம்பு மீறுகிறாரா என்ற விவாதம் அடிக்கடி எழுந்தது. இந்த விமர்சனங்கள் அனைத்தையும் பொருட்படுத்தாமல், தனது சொந்த ஸ்டைலிலும், பிடிவாதத்துடனும் தொடர்ந்து இயங்கி வந்தார் அரோனா. நெட்டிசன்கள் இவருக்குச் செல்லமாக வைத்த 'பலூன் அக்கா' என்ற டேக்கும், அவரது பிரபலத்தின் உச்சத்தைத் தான் குறிக்கிறது.
தாவரவியல் மாணவியாகத் தொடங்கி, கிளாமர் மாடலிங் உலகில் தனது சம்பாத்தியத்தைத் தாண்டி சர்ச்சைகளையும் சந்தித்த அரோனா, இப்போது பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கிறார். தனது வெளிப்படையான குணத்தாலும், துணிச்சலான பேச்சாலும் அவர் பிக் பாஸ் வீட்டில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் அரோரா எடுத்த துணிச்சலான முடிவுகள், இந்த பிக் பாஸ் வீட்டில் அவருக்குச் சாதகமாக அமையுமா என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?


Click it and Unblock the Notifications
