Bigg Boss: பிக் பாஸ் எடுத்த உருப்படியான முடிவு! கனிக்கு பதில் வெளியேற்றப்பட்ட திவாகர்! கடைசி நேர மாற்றம்
சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வாரம் 'காரக்குழம்பு கனி' வெளியேறப்போவதாகப் பரவிய வதந்திக்குப் பிறகு, யாரும் எதிர்பாராத ஒரு மெகா ட்விஸ்ட் நடந்திருக்கிறது! நேற்று வெளியான தகவலில் கனி திரு வெளியேறுவதாக சொல்லப்பட்ட நிலையில், இப்போது கடைசி நேரத்தில் திவாகர் இந்த நிகழ்ச்சியை விட்டு அதிரடியாக வெளியேற்றப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன!

எதிர்பார்க்கப்பட்டது நடந்தது
கடந்த சில நாட்களாக, இயக்குநர் அகத்தியனின் மகளான கனி திரு இந்த வாரம் வெளியேற போவதாக செய்திகள் பரவி, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், நாளை எபிசோடுக்கான ஷூட்டிங் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், கடைசி நேரத்தில் கனிக்குப் பதிலாக திவாகரை வெளியேற்றி இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி, பலருக்கும் ஆறுதலை கொடுத்துள்ளது.
வாட்டர் மெலனின் அலப்பல்கள்
திவாகர் தனது பேச்சுகள் மற்றும் செயல்களால் சமூக வலைத்தளங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டு வருகிறார். தனக்குத் தானே பட்டம் கொடுத்து கொண்டிருக்கும் திவாகர், வீட்டினுள் தொடர்ந்து இரட்டை அர்த்த பேச்சுக்கள் பேசுகிறார் என்று அவர் மீதுப் பலரும் குற்றஞ்சாட்டி வந்தனர். சில தினங்களுக்கு முன்பு, திவாகர் கேமரா முன்பு பேசும்போது, "இந்த உலகத்திலேயே எனக்கு மட்டும் தான் நடிக்கத் தெரியும். ரஜினிக்கு வயதாகிவிட்டது. விஜய் சினிமாவுக்கு போய்விட்டார். அஜித் ரேஸுக்கு போய்விட்டார். தமிழ் சினிமாவை காப்பாற்றப் போவது நான் தான்!" என்று பேசியபோது, கேமராவே தலையைத் திருப்பிக் கொண்டது! அந்த நேரத்தில் இந்தச் சம்பவம் மீம்ஸ்களாக அதிகமாக கலாய்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களின் விருப்பம் நிறைவேறியது
இந்த சீசனில் கடைசி வரைக்கும் திவாகர் இருந்து விட்டால், அவர் தன்னுடையப் பெருமைக்காக அடுத்தவர்களைப் பலிக்கடா ஆக்குவார் என்றும், அவர் மீதுச் சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், திவாகரை இந்த வாரம் அதிரடியாக நீக்கியதாகத் தகவல்கள் வெளியாகி இருப்பது, "ஒரு வழியாகப் பிக்பாஸ் இப்போதுதான் ரசிகர்களின் விருப்பத்திற்கு முடிவெடுத்தாரே!" என்று பலரையும் ஆறுதல் அடையச் செய்திருக்கிறது.
இவ்வளவு அலப்பல்களை கொடுத்த திவாகர் வெளியேற போகிறார். இது உங்களுக்குத் திருப்தி கொடுக்கிறதா அல்லது வருத்தம் கொடுக்கிறதா என்று சொல்லுங்க பாஸ்!












Click it and Unblock the Notifications