Bigg Boss: பிக் பாஸ் 9ல் இந்த வாரமும் யாரும் எதிர்பார்க்காத வெளியேற்றம்! அதுவும் இவர்தான்! சுபி எஸ்கேப்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் எதிர்பாராதத் திருப்பங்களுடன் போய்க்கொண்டிருக்கிறது! கடந்த வாரம் பிரவீன் ராஜ் வெளியேறியது யாரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவமாக இருந்த நிலையில், இந்த வாரம் அதைவிடப் பெரிய அதிர்ச்சி காத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன!

கனி திரு வெளியேற்றம்
நாளை (நவ.16,2025) எலிமினேஷனுக்கான ஷூட்டிங் தற்போது நடந்து முடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், இயக்குநர் அகத்தியனின் மகளும், ஆரம்பத்திலிருந்தே டைட்டில் வின்னர் பட்டியலில் இருந்தவருமான கனி திரு இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது!
இந்த வாரம் வாக்குகளின் அடிப்படையில் ரம்யா ஜோ மற்றும் சுபிக்ஷா ஆகிய இருவரும் குறைவாக இருந்தனர். அதனால் இவர்களில் ஒருவர் தான் வெளியேற்றப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், கடைசி நேரத்தில் நடந்த இந்த மாற்றம், பிக்பாஸ் TRP-க்காகவா அல்லது நேற்றைய எபிசோட் முடிவில் கனி அழுது கொண்டிருந்ததால் பிக்பாஸ் இப்படி ஒரு அதிரடி முடிவெடுத்தாரா என்றும் கேள்விகள் எழுந்து வருகின்றன.
ரசிகர்கள் அதிருப்தி
கனி வெளியேறியது குறித்து ரசிகர்கள் சோசியல் மீடியாவில் மோதிக் கொண்டிருக்கிறார்கள்: ஒரு பிரிவினர், கனி வெளியேறியது சரிதான் என்றும், அவர் GAMEஐச் சரியாக விளையாடவில்லை என்றும் கூறி வருகின்றனர். மற்றொருப் பிரிவினர், "கனி டைட்டில் WINNER ஆவதற்குத் தகுதியானவர், கடைசி வரைக்கும் இருந்திருக்க வேண்டும்" என்றும் கூறி வருவது, பிக்பாஸின் தனிப்பட்ட நியதிகளை உணர்த்துகிறது.
உள்ளே நடந்த நாடகங்கள்
இந்த வாரம் எலிமினேஷன் பட்டியலில் ரம்யா ஜோ, சுபிக்ஷாவுடன் கனி, விக்ரம், கம்ருதீன், அரோரா, பார்வதி ஆகியோர் இருந்தனர். கடந்த வாரம் வெளியேறிய பிரவீன் ராஜ், "நிகழ்ச்சியில் அடல்ட் டாபிக் பற்றிப் பேசுகிறார்கள்; அதெல்லாம் நேரில் பார்த்தால் குமட்டிட்டு வரும்" என்று கூறி பிக்பாஸ் நிகழ்ச்சியைக் கடுமையாகக் கலாய்த்தார்.
அதுபோல கனி பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே அன்பு கேங்குக்கு தலைவராக இருந்த அர்ச்சனா போலவே இந்த சீசனிலும் ஒரு அன்பு கேங்கு உருவாக்கி அதற்கு தலைவராக இருக்கிறார் கனி, அவர் உண்மையாக இல்லை என்பது சிலருடைய குற்றச்சாட்டாக இருக்கிறது. அதே நேரத்தில் விஜய் சேதுபதி கூட நீங்க உண்மையிலேயே இப்படி தானா? அல்லது இந்த நிகழ்ச்சிக்காக இப்படி இருக்கிறீர்களா? இந்த மாதிரி ஒரு ஆளை நான் பார்த்ததே இல்ல, உங்கள மாதிரி ஒருத்தர் இருந்தா பக்கத்து வீட்டுக்காரங்க கூட சண்டையே வராது போல என்றெல்லாம் கலாய்த்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications