பிக் பாஸ் வீட்டுக்குள் நடந்த அசம்பாவிதம்! டாஸ்க் கொடுத்தா இப்படியா காலை உடைப்பாங்க! அடுத்த வெளியேற்றம் இவரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி, ஆரம்பிச்சதுல இருந்து பரபரப்புக்குப் பஞ்சமே இல்லாம போய்க்கிட்டு இருக்கு! 20 போட்டியாளர்கள் களமிறங்கிய வீட்டுல, முதல் வாரமே நந்தினி திடீர்னு வெளியேற, அடுத்ததாக பிரவீன் காந்தியும் எலிமினேட் ஆகி வெளியே போயிட்டாரு. இப்போ, உள்ளே இருக்கிற போட்டியாளர்கள் எதற்கெடுத்தாலும் சண்டைதான் தீர்வுன்னு இறங்கி அடிக்கிறதால, வீடே ஒரு மாதிரி கொந்தளிப்பா இருக்கு!

Bigg Boss Bigg Boss tamil Vijay Sethupathi vijay tv

வைரலாகும் முத்த வீடியோ

பிக் பாஸ் வீட்டுல சண்டை, சச்சரவுகள் ஒரு பக்கம் இருக்க, இப்போ ஒரு முத்த வீடியோ இணையத்துல வைரலாகி, எல்லாரையும் அதிர்ச்சியடைய வச்சிருக்கு!. 'வாட்டர்மெலன் ஸ்டார்'ன்னு எல்லாரும் செல்லமா கூப்பிடும் திவாகருக்கு, அரோரா, பிக் பாஸ் வீடுக்கும் சூப்பர் டீலக்ஸ் வீட்டுக்கும் இடையே உள்ள கண்ணாடி வழியாக முத்தம் கொடுத்திருக்காங்க!

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், "அங்க என்னடா நடக்குது? ஏன் இப்படிப் பப்ளிக்கா செய்றாங்க?"ன்னு கண்டனக் குரலை எழுப்பிட்டு இருக்காங்க. உள்ளே வர்றதுக்கு முன்னாடியே திவாகர் பல சர்ச்சைகள்ல சிக்கியிருந்தாலும், இப்போ அவருக்கு ஃபாலோவர்ஸ் கூட்டம் கூடிட்டு வர்றது குறிப்பிடத்தக்கது.

தலைக்கு பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து

இப்படி சண்டை, காதல்னு போய்க்கிட்டு இருக்க வீட்டுல, போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் வந்துருக்கு. அதுதான் இந்த வாரப் புரோமோல வெளியாகி, மறுபடியும் ஒரு பரபரப்பைக் கிளப்பியிருக்கு. இன்றைய புரோமோவில், கார்டன் ஏரியாவுல பதினெட்டு மாஸ்க்குகள் (முகமூடிகள்) இருக்குது. ஆனால், மாஸ்க்கை வைக்கிறதுக்குக் கார்டன் ஏரியாவில் பதினேழு ஸ்லாட்தான் இருக்கும். பஸர் அடிச்சதும் போட்டியாளர்கள் மாஸ்க்கை எடுத்துட்டு ஸ்லாட்டில் வைக்கணும். ஸ்லாட்டில் மாஸ்கை வைக்காத 18-வது ஆள், போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்னு பார்வதி அறிக்கையைப் படிக்கிறார்.

பஸர் அடிச்சதும், போட்டியாளர்கள் மாஸ்க்கை வைப்பதற்காகப் பதற்றத்துல ஓட ஆரம்பிக்குறாங்க! அப்போதான் ஒரு அதிர்ச்சி! ஓடும்போது, போட்டியாளர் வினோத் நிலை தடுமாறிக் கீழே விழுந்து, கால்ல அடிபடுது! இத்தோட புரோமோ முடிவடைய, இந்த வீடியோ இப்போ சமூக வலைதளங்கள்ல வைரலாகிட்டு இருக்கு!

"கன்டென்ட் கொடுத்தால்தான் வீட்டுல இருக்க முடியும்"னு நினைச்சு ஓடுற போட்டியாளர்கள், சண்டை போடுறது, திட்டுறதுன்னு செஞ்சாங்க. இப்போ, கன்டென்ட்டுக்காக ஓடும்போது கீழே விழுந்து அடிபட்டு வினோத்தும் கன்டென்ட் கொடுத்திருக்காரு!

மொத்தத்தில், பிக் பாஸ் வீட்டுல கன்டென்ட்க்குப் பஞ்சமே இல்லை. சண்டை, முத்தம், இப்போ அடிபட்டு ஓட்டம்னு போய்க்கிட்டு இருக்கிற இந்த ஆட்டத்தை, மக்கள் கண்ணிமைக்காமல் பார்த்துட்டுத்தான் இருக்காங்க!

மாஸ்க் டாஸ்க்கில் கீழே விழுந்து வினோத் வெளியேறுவாரா? அல்லது அடிபட்டாலும் உள்ளேயே இருப்பாரா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+