பிக் பாஸ் தமிழ் 9ல் ‘ஹார்ட் பீட்’ சீரிஸ் பிரபலங்கள் முதல் டான்ஸ் மாஸ்டர் வரை - போட்டியாளர்கள் பட்டியல் இதோ!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் புதிய போட்டியாளர்களுடன் ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனையும் நடிகர் விஜய் சேதுபதிதான் தொகுத்து வழங்க உள்ளார். தற்போது நிகழ்ச்சியின் ப்ரோமோக்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் வெளி உலகத் தொடர்பு இல்லாமல் நூறு நாட்கள் ஒரு வீட்டிற்குள் இருக்க வேண்டும். வீட்டிற்குள் நடக்கும் போட்டிகளிலும் டாஸ்க்குகளிலும் வெற்றி பெற்று ஒவ்வொரு வாரமும் நடக்கும் எலிமினேஷன் சுற்றுகளில் இருந்து தப்பித்து வர வேண்டும். இந்த நிகழ்ச்சியானது போட்டியாளர்களின் சமூகப் பண்புகள் மன உறுதி மற்றும் உண்மையான குணம் ஆகியவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டும் என்பதால் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் மக்கள் கொடுக்கும் வாக்குகளின் அடிப்படையில் ஒருவர் வெளியேற்றப்பட்டு இறுதியில் ஒருவர் வெற்றி பெறுவார்.
பிக்பாஸ் உத்தேச பட்டியல்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகும் பிரபலங்கள் யார் யார் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த முறை சின்னத்திரை வெள்ளித்திரை நடனக் கலைஞர்கள் எனப் பல துறைகளைச் சார்ந்த போட்டியாளர்கள் கலக்க உள்ளனர்.
ஹார்ட் பீட் தொடர் பிரபலங்கள்
டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியான ஹார்ட் பீட் வெப் சீரியஸில் நடித்த நடிகர் பாடினி குமார் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொள்ளப் போவதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே அதே தொடரில் சிறு வயது விஜய் கதாபாத்திரத்தில் நடித்த ரோஷன் கலந்துகொள்ளப் போவதாகத் தகவல் வெளியாகி இருந்த நிலையில் இப்போது அதே தொடரில் இருந்து இன்னொருவரும் கலந்துகொள்வது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரோஷன் கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்து பிரபலமானவர். இவரும் ஒரு மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற சின்னத்திரை பிரபலங்கள்
பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவாக நடித்த நடிகை நேகா, சின்னத்திரை நடிகர் புவியரசு, நடிகர் உமர், நடன மாஸ்டரும் சமையல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றவருமான நட்சத்திர ஜன்மோனி டாலி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாகக் கூறப்படுகிறது.

இசையமைப்பாளர்
யாரும் எதிர்பாராத விதமாக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு சீசனையிலும் ஒரு பாடகர் அல்லது இசையமைப்பாளர் போன்றோர் இந்த நிகழ்ச்சிகளை கலந்து கொண்டு வருகிறார்கள் அந்த வரிசையில் ஸ்ரீகாந்த் தேவாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக கூறப்படுகிறது

இந்த சீசனில் ஹார்ட் பீட் தொடரைச் சேர்ந்த இரண்டு நடிகர்கள் போட்டியிடுவது ரசிகர்களுக்குப் பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. மாடல் நடிகர் இசையமைப்பாளர் எனப் பல துறைகளைச் சார்ந்தவர்கள் ஒரே வீட்டில் நூறு நாட்கள் இருப்பது சுவாரஸ்யமான கண்டென்டை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கான அதிகாரப்பூர்வ பட்டியல் இன்னும் வெளியாகவில்லை என்றாலும் இந்த உத்தேசப் பட்டியலே சமூக வலைத்தளங்களில் விவாதத்தைத் தொடங்கி வைத்துள்ளது. ரசிகர்கள் அனைவரும் அக்டோபர் 5 ஆம் தேதிக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications