எல்லை மீறும் பிக் பாஸ் டிராமா! 'வாட்டர்மெலன்' திவாகருக்கு அரோரா முத்தம் – ஆதிரையின் 'நெருக்கம்' ரெட் கார்டு இவருக்கா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி, இந்த முறை ஆரம்பத்தில் இருந்தே சர்ச்சைகளையும், கிண்டல்களையும் அள்ளி வீசிட்டு இருக்கு! 'உலகநாயகன்' கமல்ஹாசன் டாட்டா காட்டிட்டுப் போக, இப்போ 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி களமிறங்கியிருக்காரு. ஆனா, இந்த சீசன்ல போட்டியாளர்கள் தேர்வுதான், "திறமைசாலி எல்லாம் வெளியே வாய்ப்புக்காக ஏங்க, திறமை இல்லாதவங்க உள்ளே இருக்காங்க"ன்னு ஒரு பெரிய கேள்வியை எழுப்பிருக்கு!

திவாகர்-அரோராவின் அட்ராசிட்டி
இந்த சீசனில் வந்திருக்கும் போட்டியாளர்களில் பலர் சோஷியல் மீடியா பிரபலங்கள். அதுல முக்கியமா, வெளியில் பல விமர்சனங்களுக்கு உள்ளான 'வாட்டர்மெலன் ஸ்டார்' திவாகர், ஆரம்பத்துல கிண்டல் செய்யப்பட்டாலும், இப்போ அவருடைய 'உண்மையான முகம்' பிடிச்சுப்போய், அவருக்குத்தான் அதிக ஆதரவு பெருகி வருதுன்னு சொல்லப்படுது!
ஆனா, இவரும் 'பலூன் அக்கா' அரோராவும்தான் இப்போ 'காதல்' டிராமாவுல எல்லை மீறிப் போயிட்டு இருக்காங்க! அரோரா, இப்போ தன் கவனத்தை திவாகர் மேல மட்டுமில்லாம, துஷார் மீதும் திணிச்சுட்டு இருக்கிறதா சொல்லப்படுது. இந்த முக்கோண (?) காதல் லீலைகள் எல்லாம் இணையத்துல படு வைரலாகப் பகிரப்பட்டு வருது!
மிரர் முத்தம்
ஏற்கனவே கடந்த சீசனில் நிக்சன் - ஐஸ்வர்யா ஜோடி கண்ணாடி வழியாக முத்தம் கொடுத்தது பெரிய சர்ச்சையாச்சு. இப்போ, அதே 'மிரர் முத்த' கலாச்சாரத்தை, திவாகர் - அரோரா ஜோடியும் கையில் எடுத்திருக்காங்க!
சமீபத்தில், அரோரா முதலில் ஆதிரைக்குக் கண்ணாடி வழியாக முத்தம் கொடுக்க, அதைப் பார்த்த திவாகர், "எனக்கு?" என்று கேட்க, அவருக்கும் கண்ணாடி வழியாக முத்தம் கொடுக்கிறார் அரோரா. இது என்ன பிக் பாஸ் வீடா? இல்லை முத்தம் பரிமாற்ற மண்டபமா? ரசிகர்கள், 'அங்க என்னடா நடக்குது'ன்னு தலையில் துண்டு போட்டுட்டு, இவங்களோட வீடியோக்களைப் போட்டு ட்ரோல் பண்ணிப் படுத்தி எடுத்துட்டு இருக்காங்க! 'கண்டென்ட்டுக்காக' இப்படிப் பொதுவெளியில லீலைகள் செஞ்சா, அது சமூகத்துல என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்னு தெரியாதா?
ஆதிரையின் புது முகம்
ஒரு பக்கம் திவாகர் - அரோரா எல்லை மீறி நடந்துட்டு இருக்க, இப்போ ஆதிரை மேலேயும் ஒரு விமர்சனம் எழுந்துருக்கு! ஆதிரையும் எப்ஜேவை காதலிப்பது போலவே அதிகமா நெருக்கம் காட்டிப் பேசிட்டு வர்றதை பலரும் கவனிச்சுட்டு இருக்காங்க.
"இப்போ என்ன... இந்த சீசன்ல எல்லாருக்கும் 'காதல் கன்டென்ட்'டா?"ன்னு மக்கள் கேள்வி எழுப்பிட்டு இருக்காங்க! ஒருவேளை, காதல் கண்டண்டு பண்ணுனா பெரிய கண்டென்ட்டா மாறுமான்னு யோசிக்கிறாங்களா? இல்லைன்னா, இந்த வாரத்துக்கு நாமினேஷன்ல இருந்து தப்பிக்க, 'காதல் டிராமா'தான் ஒரே வழியா?
திறமை இல்லாதவங்கன்னு விமர்சிக்கிற இந்த சோஷியல் மீடியா பிரபலங்கள், உள்ளே போனதுக்கு அப்புறமாவது, டாஸ்க்ல திறமையைக் காட்டாம, இப்படிச் சண்டை, காதல், முத்தம்னு போனா, "விஜய் டி.வி.க்கு அழிவு காலம் நெருங்கிடுச்சு"ன்னு ஷகிலா சொன்னது பலிச்சாலும் பலிக்கும்! இனிமேலாவது போட்டியாளர்கள், 'கண்டென்ட்'டைக் காட்டாம, விளையாட்டைக் காட்டுவாங்களான்னு பார்க்கலாம்!












Click it and Unblock the Notifications