இது பிக் பாஸ் நிகழ்ச்சியா? வெட்டிடுவேன்னு மிரட்டுறாங்களே! ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்படும் போட்டியாளர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டி.வி.யில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி பிக் பாஸ் வீட்டுக்குள் ஆரம்பிச்சது ஒரு ஷோ கிடையாது, இது முழுக்க முழுக்க 'சண்டைக்கோழி சீசன் 9' போல இருக்கு! 20 போட்டியாளர்களுடன் தொடங்கின இந்த சீசன்ல, சோஷியல் மீடியா பிரபலங்கள்தான் அதிகம். ஆனா, இவங்க 8 சீசன்களைப் பார்த்தும் பாடத்தைக் கத்துக்கல போல! முதல் நாளே சண்டையை ஆரம்பிச்சுட்டாங்க.

Bigg Boss Bigg Boss tamil Vijay Sethupathi vijay tv

குறட்டை விட்டா கூட சண்டை

பிக் பாஸ் நிகழ்ச்சின்னா ஜாலியா இருக்கும்னு நினைச்சு டி.வி. முன்னாடி உட்கார்ந்த ரசிகர்களுக்கு மன அழுத்தம் தான் மிச்சம். முந்தைய சீசன்களில் போட்டியாளர்கள் திறமையைக் காட்டி என்டர்டெயின் பண்ணாங்க. ஆனா, இந்த சீசன்ல எல்லாரோட முழு கவனமும் சண்டைகள்லதான் இருக்கு.

அதுலயும் நேற்று முதல் நாள் நடந்த சண்டைகள் வெளியில சொன்னா வெட்கக்கேடு! டாக்டர் திவாகர் மற்றும் பிரவீன் ரெண்டு பேரும் வீட்டுக்குள்ள வந்த அடுத்த நொடியில இருந்தே சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க. திவாகர் என்ன சொன்னாலும், அதுக்கு பிரவீன் ஏட்டிக்கு போட்டியாக பேசிக்கொண்டே இருக்கார்.

இவங்க ரெண்டு பேருக்கும் காலையில வந்த முதல் சண்டையே யார் அதிகமா குறட்டை விட்டதுன்னு தான்! அந்த சண்டையில இடைவெளி விடாம சமாதானப்படுத்தப் போனவங்களையும் திவாகர் வாக்குவாதத்தில் மாட்டிவிட்டார்.

அழுதுகொண்டு போன ரம்யா ஜோ

இன்றும் சண்டை ஓயலை. இன்று வெளியான முதல் ப்ரோமோவிலும் அதே சண்டைதான்! சண்டையைத் தீர்க்க வந்த ரம்யா ஜோ (மேடை கலைஞர்) திவாகரிடம், "திவாகரிடம் யாரு பேசினாலும் 'இவங்க எதுக்காகப் பேசுறாங்க?'ன்னு கேட்கிறார். ஆனா, இவரு மட்டும் எந்தப் பிரச்சனை நடந்தாலும் மூக்கை நுழைச்சிட்டு கருத்து சொல்ல வந்துடுறாரு. இது எப்படி நியாயம்?" என்று நியாயம் கேட்டார்.

உடனே திவாகர் கோபமாகி, "நீ படித்த பொண்ணுதானா? என்ன படிச்ச?" என்று ரம்யா ஜோவின் கல்வித் தகுதியை இழிவாகக் கேட்க, ரம்யா ஜோ உடனே அழுதுவிட்டார். ரம்யா ஜோ அழுததைக் கண்டு அங்கிருந்த எல்லாரும் திவாகரை ரவுண்டு கட்டி சண்டை போட்டனர். அப்போது, எஃப்.ஜே-க்கும் திவாகருக்கும் வாக்குவாதம் வர, கோபத்தின் உச்சியில் இருந்த எஃப்.ஜே., திவாகர் கையை நீட்டிப் பேசியதைக் கண்டு டென்ஷன் ஆகி, "உன்னை வெட்டிவிடுவேன்!" என்று மிரட்டி இருக்கிறார். அதுவும் கையில் அவர் காட்டிய சைகை வன்முறையைத் தூண்டுவது போல இருந்தது.

இதைக் கண்ட ரசிகர்கள் சிலர், "இத்தனை கேமரா முன்பு ஒருத்தன் சின்ன பிரச்சனைக்கே 'வெட்டிடுவேன்' என்று பேசலாமா? இது எந்த வகையில் நியாயம்?" என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதற்கு முந்தைய சீசனில் நிக்சன் என்ற போட்டியாளர் "சொருகிடுவேன்" என்று பேசியது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியபோது, கமல்ஹாசன் அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வார்னிங் கொடுத்தார்.

இதேபோல, இப்போதைய தொகுப்பாளர் விஜய் சேதுபதி, எஃப்.ஜே-க்கு வார்னிங் கொடுத்து நிகழ்ச்சியைத் தொடர வைப்பாரா, அல்லது இந்த வாரத்தோடு மூட்டையைக் கட்டி வெளியே அனுப்புவாரா என்று பார்க்க மக்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

திவாகருக்கு அனுதாப அலை

வந்த நாள் முதல் திவாகர் பேசுவதையும், நடித்ததையும் பார்த்து திட்டித் தீர்த்து வந்த ரசிகர்கள், இப்போது மொத்தக் கூட்டமும் அவரை எதிர்த்துப் பேசுவதைப் பார்த்து, "பாவம் திவாகர்!" என்று அவருக்கு அனுதாப அலை வீசத் தொடங்கி இருக்கிறது. ஒரு பிக் பாஸ் சீசன்ல சண்டையாலேயே ஒரு போட்டியாளருக்குச் சிம்பதி கிடைக்குதுன்னா, இந்த சீசன் வேற லெவல்ல தான் போகப் போகுது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+