பிக் பாஸ் 9ல் பண பெட்டியுடன் நடையை கட்டியவர் இவர்? இது நல்லா முடிவு! அதுவும் இவ்வளவு பணம்தானா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் தொடங்கி இருக்கிறது. இதில் பணப்பெட்டியை தூக்கிக்கொண்டு போகப் போவது யாரு என்ற எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், கடைசியில் யாரும் எதிர்பார்க்காத சம்பவம் நடந்திருக்கிறது அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியை டிவியில் பார்ப்பவர்களை விடவும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பார்ப்பவர்களும், சோசியல் மீடியாவில் அதை விமர்சிப்பவர்களும் அதிகமானோர் இருக்கிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி இதற்கு முன்பு 8 சீசன்கள் முடிவுக்கு வந்தாலும் ஒன்பதாவது சீசன் தொடங்கிய நாளிலிருந்து இந்த சீசன் எப்போதுதான் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு இருக்கிறது.

காரணம் இந்த சீசனில் இருக்கும் போட்டியாளர்கள் சண்டைக்கு பஞ்சமே இல்லாமல் எதற்கெடுத்தாலும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். எப்படியாவது ப்ரோமோவில் வரவேண்டும் என்பதுதான் இவர்களுடைய டார்கெட்டாக இருக்கிறது. ஆனாலும் உங்களுக்கு எல்லாம் நான் ராணி என்று பார்வதி இருந்த வரைக்கும் அதிகமாக ப்ரோமோக்களில் அவரே இடம் பிடித்தார்.
கடைசியில் அவருக்கு போனவாரம் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல கோபம் எல்லா இடத்திலும் சரியாக இருக்காது என்று பார்வதியை வைத்து பலருக்கும் புரிந்திருக்கும். தன்னுடைய சுய விளம்பரத்திற்காக அடுத்தவர்கள் அசிங்கப்படுத்தி பார்க்க கூடாது, அது எப்போதும் நமக்கு சரியா வராது என்று பார்வதி மற்றும் கம்ருதீன் இருவரையும் பார்த்தவர்களுக்கு புரிந்திருக்கும்.
இந்த பஞ்சாயத்து ஒரு பக்கம் இருந்தாலும் இந்த சீசனில் யார் டைட்டில் ஜெயிக்கப் போகிறார்கள் என்று யூகிக்க முடியாத வகையில் தான் விளையாட்டு போய்க் கொண்டிருக்கிறது. போன வாரத்தில் விஜய் சேதுபதி இதை நேரடியாக போட்டியாளர்களிடமே சொல்லிவிட்டார். இன்னும் ஆறு போட்டியாளர்கள் மட்டும்தான் பைனலுக்கு இருக்கிறார்கள் அதில் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவார்.
மீதம் உள்ள ஐந்து பேரும் அடுத்த வாரம் செமி பைனலுக்கு போவார்கள். அதில் இரண்டு போட்டியாளர்கள் நேரடியாக பைனலுக்கு தேர்வாகி இருக்கிறார்கள். அதுபோல இந்த முறை பணப்பெட்டி டாஸ்கில் பணத்தை தூக்கிக்கொண்டு கிளம்பியது சபரி என்று கூறப்படுகிறது. நேற்று நடந்த சம்பவம் இன்று அல்லது நாளை தான் ஒளிபரப்பு செய்யப்படும் என்பதால் இந்த காட்சி நாளைக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

சபரி டைட்டில் ஜெயிப்பதற்கு வாய்ப்பில்லை என்றாலும் இந்த டாஸ்க்கில் பற்றிய தூக்கிக்கொண்டு கிளம்பியது நல்லது என்று சிலர் கூறி வருகின்றனர். அதோடு இந்த சீசனில் பணம் பெட்டியில் 7 லட்சம் ரூபாய் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கின்றனர் அவர்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்துவிட்டு உள்ளே இருப்பவர்களை டார்கெட் செய்து அடிக்கிறார்கள். இவங்க கிட்ட இருக்குறதுக்கு நான் இந்த வாரமே வெளியே போறேன் என்று சபரி இப்படி ஒரு முடிவு எடுத்தாரா? அல்லது இது வதந்தி செய்தியை என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications