பிக் பாஸில் வினோத்தை பார்த்து தர்பூஸ் திவாகர் சொன்ன வார்த்தை! கொந்தளிக்கும் ரசிகர்கள்! அப்போ ரெட் கார்ட்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'பிக் பாஸ்' வீட்டுக்குள்ள நடக்குற கூத்தெல்லாம் நமக்கு ஒரு பொழுதுபோக்குதான். ஆனா, இந்த 'வாட்டர்மெலன் ஸ்டார்' திவாகர் பண்ற அலப்பறை இருக்கு பாருங்க... சும்மா சொல்லக்கூடாது, 'அப்பாடா, இவருக்கு ரெட் கார்டு கொடுத்து அனுப்பி விடுங்கப்பா!'ன்னு எல்லாரையும் கத்த வச்சுட்டாரு! அதுக்கு ஒன்னு இல்ல, ரெண்டு காரணங்கள் இருக்குன்னு பார்வையாளர்கள் கொதிச்சு போய் இருக்காங்க!

Bigg Boss Bigg Boss tamil Vijay Sethupathi vijay tv

மோந்து பார்த்த திவாகர்

தர்பீஸ் திவாகர் தன்னை தான் இந்த சீசனோட 'மெயின் பில்லர்'ன்னு நினைச்சுட்டு இருக்காரு. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சொல்லியும் கூட, அந்த 'தகுதி பேச்சு' அடங்கவே இல்லை! இப்போ புதுசா ஒரு வேலையை ஆரம்பிச்சிருக்காரு!. தர்பீஸ் சாம்ராஜ்யத்தின் மன்னரா இருந்த திவாகர், அரோராவுக்குப் பின்னாடி நின்னு, அவங்க முடியை மோந்துப் பார்த்திருக்கார்! அரோரா அதை பெருசா எடுத்துக்கலைன்னாலும், இது சுத்த அநாகரீகம்னு பார்வையாளர்கள் முகம் சுளிக்கிறாங்க.

இதுக்கு முன்னாடியே அரோராவோட உடலை மோந்து பார்த்துட்டு, "சூப்பரா வாசமா இருக்கு!"ன்னு வேற சொல்லி இருக்காரார்! "பிக் பாஸை நம்பி பொண்ணுங்க வர்றாங்க. ஆனா, இவரு இப்படி மோசமா நடந்தும் கூட, ரெட் கார்டு கொடுக்காம இவரை ப்ரோமோ வீடியோவில் வேற காட்டிகிட்டு இருக்கீங்களே! இதுவே தெலுங்கு பிக் பாஸ் வீடா இருந்தா, நாகார்ஜுனா இவருக்கு என்றைக்கோ ரெட் கார்டு கொடுத்துத் துரத்தி விட்டிருப்பாரு!"ன்னு பயங்கர விமர்சனம் கிளம்பி இருக்கு!

வினோத் நிறத்தை கலாய்த்த திவாகர்

உள்ளுக்குள்ள 'நான் தான் அழகு, நான் தான் பெரிய ஆள்'னு நினைச்சுட்டு இருக்கிறதுல தப்பில்லை. ஆனா, மத்தவங்களை மட்டம் தட்டினா எப்படி?. கானா ராஜ்யத்தின் ராஜாவான கானா வினோத்தை பார்த்து, "கரிச்சட்டி தீஞ்சவாயன்", "கரிச்சட்டி கருவாயன்"ன்னு திவாகர் கிண்டல் பண்ணியிருக்காரு! வினோத் டென்ஷன் ஆகலைன்னாலும், அவர் அணியில இருந்தவங்க கொந்தளிச்சிட்டாங்க!

"ஒருத்தரோட நிறத்தை விமர்சிக்கிறது ரொம்பத் தப்பு!"ன்னு கானா ராஜ்யத்தினர் சத்தம் போட, "வினோத்தை மட்டும் சொல்றீங்களே, நீங்க மட்டும் வெள்ளையாக்கும்?"ன்னு ரம்யா கேட்டுத் திருப்பித் தாக்கி இருக்காங்க. அப்புறம், திவாகருக்காக சாண்ட்ரா தான் சாரி கேட்டு சமாதானம் பண்ண வேண்டியதாப் போச்சு!

பிக் பாஸ் நீங்க இருக்கீங்களா

பார்வையாளர்கள் இப்போ பிக் பாஸ் கிட்ட கேட்கிற ஒரேக் கேள்வி இதுதான்: "பெண் போட்டியாளர்களுக்குப் பிடிக்காவிட்டாலும் அவங்களைத் தொடுவது, மேலே சாய்வது, முத்தம் கேட்பது, மோந்து பார்ப்பது இதெல்லாம் ரெட் கார்டு கொடுக்கப் போதாதா?" திவாகர் என்ன நினைச்சுட்டு இருக்காருன்னா, "நான் என்ன செஞ்சாலும் பிக் பாஸ் என்னைக் கண்டிக்க மாட்டார், ரெட் கார்டு கொடுக்க மாட்டார்"னு! ஆனா, "மோசமா நடந்தா ரெட் கார்டு உண்டுன்னு நிரூபிங்க பிக் பாஸ்! இந்த வீட்டின் பிக் பாஸ் நீங்க தான்; திவாகர் இல்ல!"ன்னு கமெண்ட் போட்டுட்டு இருக்காங்க.

இப்போ லேட்டஸ்ட்டா வந்த ப்ரோமோவுல, பிக் பாஸ் ராஜ்யத்தை எல்லாம் மாத்தி, திவாகருக்குப் பதிலா பார்வதியை ராணியாகவும், வினோத்துக்கு பதிலா விக்கல்ஸ் விக்ரமை ராஜாவாகவும் நியமிச்சிருக்காரு!

இந்த வார இறுதியில், பிக் பாஸ் உண்மையிலேயே திவாகருக்கு ரெட் கார்டு கொடுத்து ஷாக் (SHOCK) கொடுப்பாரா, இல்லை லேசா கண்டிச்சுட்டு மறுபடியும் காப்பாத்துவாரான்னுப் பொறுத்திருந்துதான் பார்க்கணும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+