Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bigg Boss: திவாகர் உங்களுக்கு மண்டைல மூளை இல்லையா?" கையில் ரெட் கார்டு! மேடையில் வெடித்த விஜய் சேதுபதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த ஒரு மெகா ஆக்சன் இப்போது நடந்திருக்கிறது! கடந்த வாரத்தில் திவாகர் மற்றும் பார்வதியின் எல்லை மீறிய செயல்பாடு குறித்து சோசியல் மீடியாவில் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த வாரம் வீக் எண்ட் எபிசோடில் விஜய் சேதுபதி நேரடியாகக் களத்தில் இறங்கி அவர்களைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்!

Bigg Boss Bigg Boss tamil Vijay Sethupathi vijay tv

விஜய் சேதுபதியின்அதிரடி

இந்த வாரம் பிக்பாஸ் மேடைக்குக் கையில் ரெட் கலர் கார்டுன் வந்த விஜய் சேதுபதி, நேரடியாகத் திவாகர் மற்றும் பார்வதியைக் கேள்வி கேட்டுத் துளைத்திருக்கிறார். "எல்லாரும் டாஸ்க்கில்அடிச்சு உடைச்சு ஓடிக்கிட்டு இருக்காங்க. அந்த நேரத்தில், அந்தப் பொண்ணு திவாகரிடம் ஆபாச குறியீடு காட்டுச்சா? இதுதான் அவங்க வேலையா, என்ன பார்வதி?" என்று மிகவும் கோபமாகக் கேட்டிருக்கிறார்.

இதற்கு பார்வதி தலைகுனிந்தபடி நிற்க, திவாகர் தான் "தவறாகப் புரிந்துகொண்டேன்" என்று மழுப்பி இருக்கிறார். அப்போது விஜய் சேதுபதி, "நம்மளுக்கு புடிச்சவங்க என்ன சொன்னாலும் அதுதான் சரியா இருக்கணும்னு நம்புனா இதுதான் கதி! உங்க மண்டையில மூளை இல்லையா?" என்று இருவரையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

கடந்த சில நாட்களாகத் திவாகர் கேமரா முன்பு, "தமிழ் சினிமாவைக் காப்பாற்றப் போவது நான் தான்" என்று தன்னைத்தானே வாட்டர்மெலன் ஸ்டார் என்று சொல்லி கொண்டு செய்த அலப்பல்களுக்கு இந்தக் கண்டனம் ஒரு பதிலடியாக பார்க்கப்படுகிறது!

இரட்டை எவிக்‌ஷன்

இந்த பரபரப்புக்கிடையே, இந்த வாரம் இரண்டு எவிக்‌ஷன் இருப்பதாகத் தகவல்கள் உறுதியாகி இருக்கின்றன. முதலில் வலுவான போட்டியாளராகக் கருதப்பட்ட கனி திரு வெளியேறப் போவதாகச் செய்தி பரவி TRPயை ட்விஸ்ட் செய்த பிக்பாஸ், இப்போது ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப திவாகரையும் வெளியேற்றி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன!

ரசிகர்களின் கொண்டாட்டம்

திவாகர் வெளியேற வேண்டும் என்று நினைத்திருந்த ரசிகர்களுக்கு, இந்த இரண்டு எலிமினேஷன் தகவலே ஒரு பெரியக் கொண்டாட்டமாகத் தான் இருக்கிறது. திவாகரை கடுமையாக விமர்சித்த விஜய் சேதுபதி, அவரைச் சாதாரணமாக வெளியேற்றாமல், அவருடையக் குறைகளைச் சொல்லி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என்பது பல ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

சேதுபதியின் ரெட் கார்டு

இன்று விஜய் சேதுபதி கையில் ரெட் கார்டை அள்ளி வைத்திருப்பதை பார்க்கும்போது, திவாகர் மற்றும் பார்வதிக்கு மட்டுமே அது கொடுக்கப்படுமா அல்லது மற்றப் போட்டியாளர்களின் சர்ச்சைக்கும் அது பயன்படுமா என்றக் கேள்வியும் எழுந்துள்ளது. பில்டப்பா அல்லது ACTIONஆ? கடந்த வாரம் வெளியேறிய பிரவீன் ராஜே, "வீட்டில் அடல்ட் டாபிக் பற்றிப் பேசுகிறார்கள்; அதெல்லாம் நேரில் பார்த்தால் குமட்டிட்டு வரும்" என்று பிக்பாஸ் நாடகத்தை கலாய்த்த நிலையில், இந்த வாரம் விஜய் சேதுபதியின் உண்மையானக் கோபம் ACTION ஆக மாறுமா அல்லது TRP-க்கான பில்டப் ஷோவா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

எது எப்படியோ, இந்தக் கேள்விக் கேட்கும் செக்‌ஷன் தான் இந்த வாரம் பிக்பாஸ் வரலாற்றிலேயேப் பரபரப்பான எபிசோடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+