விஜய் சேதுபதி சறுக்கிய விஷயம்! எல்லை மீறும் பார்வதி- கம்ருதீன்! கையில் 18+ லீலை.. வினோத்- திவாகர் தலைவலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி, சண்டைகள் மற்றும் வன்முறைச் சம்பவங்களால் ரசிகர்களுக்குச் சலிப்பைக் கொடுத்து வரும் நிலையில், தற்போது வீட்டுக்குள் நடக்கும் குழப்பங்களை வைத்து, தொகுப்பாளர் விஜய் சேதுபதிக்கு எதிராகவே விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன. ஒருபக்கம், உள்ளிருக்கும் போட்டியாளர்களின் சண்டைகள் தலைவலியை உண்டாக்க, மறுபக்கம், விஜய் சேதுபதியின் பலவீனமான அணுகுமுறையும் விமர்சிக்கப்படுகிறது.

Bigg Boss Bigg Boss tamil Vijay Sethupathi vijay tv

எல்லை மீறும் கம்ருதீன்

பிக் பாஸ் வீட்டுக்குள் அடிக்கடி வன்முறையில் ஈடுபடும் கம்ருதீன் நடக்காத சில விஷயங்களை கூட நடந்ததாக கதை விட்டுக் கொண்டிருக்கிறார். இவர் சக போட்டியாளர்களைத் தாக்குவது, அவர்களை அவமரியாதையாக நடத்துவது போன்றச் செயல்களில் ஈடுபட்டும், இதுவரை அவருக்கு பிக் பாஸ் அல்லது தொகுப்பாளர் தரப்பிலிருந்து எந்த 'மஞ்சள் கார்டு' வழங்கப்படவில்லை.

முந்தைய சீசன்களில் கமல்ஹாசன் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கியதைக் குறிப்பிட்டு, மற்ற மொழித் தொகுப்பாளர்களுடன் ஒப்பிடும்போது, விஜய் சேதுபதி தான் இந்நிகழ்ச்சிக்குக் கிடைத்ததிலேயே மிகவும் பலவீனமானத் தொகுப்பாளராகத் தெரிகிறார் என்றும், வன்முறைக்கு எதிராக அவர் கண்டனம் தெரிவிக்கத் தவறுவது நிகழ்ச்சிக்குச் சறுக்கலை ஏற்படுத்துகிறது என்றும் சினிமா விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மோசமான விளைவு

விஜய் சேதுபதி கம்ருதீனை எச்சரிப்பதோடு நிறுத்திக் கொண்டதால், அவர் துஷாரின் வளர்ப்பு குறித்துப் பேச, அது கிட்டத்தட்ட உடல் சண்டையாகவே உருவானது. இதுபோன்று போட்டியாளர்கள் எல்லை மீறுவதற்குக் காரணம், தொகுப்பாளரின் மென்மையானப் போக்குதான் என்றும் பேசப்படுகிறது. இந்த நிலையில் நேற்று லைவில் நடந்த ஒரு விஷயம் பற்றிய வீடியோ இணையத்தில் இப்போது வைரலாகி கொண்டிருக்கிறது.

அந்த வீடியோவில் கம்ருதீன் மற்றும் பார்வதி இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அதில் பார்வதியின் கைகளில் 18+ என்று ரகசியமாக எழுதிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் சைகை மொழியில் பேசக்கூடாது என்ற ஒரு ரூல்ஸ் இருக்கிறது ஆனால் ரூல்ஸ் மீறி இவர்கள் இருவரும் கைகளில் எழுதி பேசிக் கொள்கின்றனர்.

ஏற்கனவே பார்வதி நேற்று தன்னிடம் கம்ருதீன் அட்வான்டேஜ் ஆக தொட்டு பேசுகிறார் என்று திவாகரிடம் குற்றசாட்டு வைத்திருந்தார் ஆனால் இன்று இவர்கள் இருவரும் கையில் எழுதி விளையாடுவதை வைத்து அதிகமான நெகட்டிவ் கமெண்டுகள் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே பார்வதி மற்றும் கம்ருதீன் இருவரும் சாப்பிட்டுக்கொண்டே எனக்கு ரொம்ப பசியா இருக்கு வெளியே போய் சாப்பிடணும் என்று இரட்டை அர்த்த வகையில் பேசியது இணையத்தில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது இப்போது கையில் 18+ என்று எழுதி புது சர்ச்சையிலும் இந்த ஜோடி சிக்கிகிறது.

இந்த நிகழ்ச்சியை குழந்தைகளோடு வீட்டில் இருக்கும் போது பார்க்க முடியாது என்று பலர் விமர்சித்த நிலையில் விஜய் சேதுபதி உங்களுக்கு பார்க்க பிடிக்கவில்லை என்றால் உங்கள் கையில் இருக்கும் ரிமோட்டில் சேனலை மாத்திட்டு போங்க என்று தான் சொன்னதாக பேசி இருந்தார். விஜய் சேதுபதியே இப்படி சொல்லிவிட்டாரே என்று உள்ளேருப்பவர்களுக்கு துணிச்சல் அதிகமாகிவிட்டது போல. அதனால் தான் நாம இதுபோல பேசிக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருந்தால் டீம் நமக்கு சப்போர்ட் பண்ணுவார்கள் என்று நினைத்து விட்டார்களா என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

வினோத் - திவாகரின் கச்சேரி

காம்ருதீன் ஒருபக்கம் சர்ச்சையில் சிக்கியிருக்க, மறுபக்கம் கானா வினோத்தும், திவாகரும் செய்யும் அலப்பறைகள் ரசிகர்களுக்குச் சிரிப்பை வரவழைத்தாலும், சண்டையின் நோக்கத்தை மாற்றி வருகிறது. 24வது நாளான இன்று வெளியான முதல் ப்ரோமோவில், வழக்கம்போல திவாகர் கேமரா முன்பு 'கண்டென்ட்'க்காக Performance செய்ய முற்படுகிறார். ஆனால், அதைத் தடுக்கும் வகையில், கானா வினோத் பாட்டுப் பாடித் தொந்தரவு செய்கிறார்.

சண்டையின் தொடர்ச்சி

இதனால் திவாகர் துஷாருடன் நடிக்க முற்பட, வினோத் இன்னும் உரத்தக் குரலில் பாட்டுப் பாடுகிறார். கடுப்பான திவாகர், மேல் ஷர்ட்டைக் கழட்டிவிட்டுப் பேச முயன்றாலும், வினோத் விடாமல் பாடுகிறார். விக்கியிடம் திவாகர் புகார் சொல்ல, "நீங்க ரெண்டு பேரும் வீம்புக்கு என்ன வேணாலும் பண்ணுங்க. நாங்க அதுல வர மாட்டோம்" என்று விக்கி 'நோஸ் கட்' கொடுக்கிறார். இதனால், திவாகர் பிரவீனிடம் இதைப் பற்றிக் கேட்க, "அது அவர் உரிமை, அவர் பாடுகிறார்" என்று பிரவீன் திவாகருக்குப் பதிலடி கொடுத்தார்.

பிக் பாஸ் வீட்டுக்குள் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை ஆகியோர் வெளியேறிய நிலையில், இப்போது பிரஜின் - சாண்ட்ரா ஜோடி வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே சென்றுள்ளனர். அவர்கள் உள்ளே இருக்கும் சண்டைக்கோழிகளின் முகத்திரையைக் கிழிப்பார்களா, அல்லது அவர்களும் இந்தச் சண்டையில் சிக்கிக் கொள்வார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+