Bigg Boss: திவாகர் திருந்த மாட்டாரா? பிக் பாஸ் உள்ளேயும் தற்பெருமை! முதல் நாளே 'குறட்டை' சண்டை! ரவுண்டு கட்டிய நடிகர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் நேற்று (அக்டோபர் 5) பிரம்மாண்டமாக ஆரம்பித்த 'பிக் பாஸ் தமிழ் சீசன் 9' ஷோ, முதல் நாளே கலகலப்புக்குப் பதிலா சண்டைக் களமா மாறிடுச்சு. இந்த சீசன்ல மொத்தம் 20 பேர் உள்ளே போயிருக்காங்க. இதுல நிறையப் பேரு சோஷியல் மீடியா பிரபலங்கள் தான்! சினிமாவுல நடிச்சவங்களுக்கு அங்கீகாரம் இல்லையான்னு சில ரசிகர்கள் ஆதங்கப்பட்டாலும், கவர்ச்சியான போட்டோஸ் போட்டவங்க, ரீல்ஸ் பண்ணவங்கன்னு ஹவுஸ் ஃபுல்லா இவங்கதான்!

Bigg Boss Bigg Boss tamil Vijay Sethupathi vijay tv

உள்ளேயும் தற்பெருமை

இந்த டாப் லிஸ்ட்ல இருக்கிறவர்தான் நம்ம வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர். இவரைப் பார்த்தாலே பல பேருக்குக் கோபம் வர ஆரம்பிச்சிடுச்சு. காரணம், இவர் வெளியில எந்த அளவுக்குத் தற்பெருமை பேசுவாரோ, அதையேதான் பிக் பாஸ் வீட்டுக்குள்ளேயும் பண்ணிக்கிட்டு இருக்கார்.

உள்ளே நுழையும்போதே, தொகுப்பாளர் விஜய் சேதுபதி கூட, "வெளியில செஞ்ச வேலைகளை எல்லாம் உள்ளே செய்யாதீங்க. உங்க தனித்திறமையை மட்டும் காட்டுங்க"ன்னு கெஞ்சாத குறையா அட்வைஸ் பண்ணி அனுப்பினார். ஆனா, திவாகர் அதைக் காதுல வாங்கவே இல்லை போல!

அவருடைய இரண்டு, மூன்று நடிப்பு ஸ்டெப்புகளை போட்டுப் போட்டு, 'ஐயோ போதும்டா சாமி'ன்னு மத்தவங்களைச் சொல்ல வைக்கிற அளவுக்கு இவரோட ஓவர் பில்டப் போய்க்கிட்டிருக்கு!

கோபமான பிரவீன், ஹம்ருதீன்

இது போதாதுன்னு, திவாகர் அங்க இருக்கிற போட்டியாளர்கள்கிட்ட எல்லாம் போய், "எனக்கு நடிப்புலாம் ஒரு விஷயமே கிடையாது. நான் நடிப்பு அரக்கன்! நான் புரொஃபஷனலா டாக்டர் தான். ஆனாலும் நான் ஐந்து படம் நடிச்சிருக்கேன். நான் பெரிய ஆளு தெரியுமா!"ங்கிற மாதிரிப் பேசிட்டே இருக்கார்.

உள்ளே எப்படியாவது ஒரு சான்ஸ் கிடைச்சுடாதான்னு வருஷக் கணக்காப் போராடிக்கிட்டிருக்கிற சில சீரியல் நடிகர்களுக்கு இதைப் பார்த்தா கோபம் வரத்தான் செய்யும்! அதுலயும் விஜய் டிவியோட 'பாரதி கண்ணம்மா', 'சின்ன மருமகள்', சிந்து பைரவினு பல சீரியல்கள்ல வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடிச்சுட்டு இருக்கிற பிரவீனுக்கும், திவாகருக்கும் தான் பயங்கரமா முட்டிக்கிட்டு இருக்கு. திவாகர் தற்பெருமை பேசும்போதெல்லாம், பிரவீனுக்குக் கோபம் தாங்க முடியலை. அவர் முகத்துக்கு நேராவே நோஸ்கட் பண்ணிக்கிட்டு இருக்காரு!

நேற்று இரவு ரெண்டு பேருக்கும் படிப்பு சம்பந்தமா ஒரு வாக்குவாதம் வந்துச்சு. இன்று காலையிலயோ, யார் அதிகமா குறட்டை விட்டதுன்னு சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க! என்னடா இது, ஒரு நாளைக்குள்ள இத்தனை சண்டையானு பார்த்தா, இதுல விஜய் டிவியோட 'மகாநதி' சீரியல் நடிகர் ஹம்ருதீனும் சேர்ந்துக்கிட்டாரு! திவாகர் பேசினதைக் கேட்டு கடுப்பான ஹம்ருதீன், அவரும் திவாகர்கிட்ட வாக்குவாதம் பண்ண ஆரம்பிச்சுட்டார்.

நெட்டிசன்களின் செல்லக் கிண்டல்

திவாகரின் இந்த போக்குகளைப் பார்த்த ரசிகர்கள், "டாக்டர் திவாகர், நீங்க வீட்டுக்குள்ள இருக்கிற மத்த 19 பேருக்கும் ட்ரீட்மென்ட் கொடுப்பீங்கன்னு பார்த்தா, நீங்கதான் எல்லார்கிட்டயும் அர்ச்சனை வாங்கிக்கிட்டு இருக்கீங்க போல!"ன்னு செல்லமா கலாய்ச்சிட்டு இருக்காங்க.

இப்படியே போனா, டாக்டர் திவாகர், பிக் பாஸ் வீட்டுல எவ்வளவு நாள் தாக்குப்பிடிப்பார்னு பார்க்கணும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+