Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bigg Boss 9: இன்னும் 3 நாள் தான்! பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இத்தனை விஷயம் இருக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டுல ஒரு பரபரப்பான விஷயம்ன்னா, அது சினிமாவுக்கு அப்புறம் பிக்பாஸ் நிகழ்ச்சிதான்! 'அது ஒரு ரியாலிட்டி ஷோவா? இல்லன்னா, ஒரு பெரிய ஸ்கிரிப்ட்டு போட்ட சீரியலா?'ன்னு பல விவாதங்கள் நடந்தாலும், அந்த வீட்டுக்குள்ள என்ன நடக்குதுன்னு பார்க்காம நம்மளால இருக்க முடியலை. கிட்டத்தட்ட 100 நாள், 100 கேமராக்கள், ஒரே ஒரு வெற்றியாளர்ன்னு இந்த ஃபார்முலா மட்டும் எப்படிப் பல சீசன்களா ஹிட் அடிக்குது என்பதுதான் பலருடைய கேள்வி. அதிலும் தற்போதைய ஒன்பதாவது சீசன் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்க இருக்கிறது இந்த நிலையில் இந்த சீசனில் சில நிபந்தனைகளும் இருக்கிறதாம். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

Bigg Boss Bigg Boss Tamil vijay tv

பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ

"பிக் பாஸ்ல என்னய்யா இருக்கு? ஒரு 20 பேரை ஒரு வீட்டுக்குள்ள அடைச்சு வெச்சு, சண்டை போட வைப்பாங்க. அவ்வளவுதானே?"ன்னு நீங்க கேட்கலாம். ஆனா, அதுலதான் இந்த ஷோவோட பெரிய ட்விஸ்ட்டே இருக்கு! பிக்பாஸ்ங்கிறது சும்மா ஒரு ஷோ இல்லைங்க. இது ஒவ்வொரு மனுஷனோட குணாதிசயங்களையும், அவன் ஒரு எதிர்பாராத சூழல்ல எப்படிச் செயல்படுறான்னு நம்ம கண் முன்னாடியே காமிக்கிற ஒரு சோதனைக்கூடம் (Psychological Experiment) மாதிரி! வெளியில 'சாது' மாதிரி தெரியுற ஒருத்தர், வீட்டுக்குள்ள எவ்வளவு பெரிய 'சாதுர்யக்காரரா' மாறுறார்னு நம்ம பார்க்கலாம். அமைதியா இருக்குற ஒருத்தர், ஒரு சண்டையில தன் கோபத்தை வெளிக் காமிக்கிறப்போ, "அடேங்கப்பா! இவருக்குள்ள இவ்வளவு இருக்கா?"ன்னு நமக்கு ஆச்சரியமா இருக்கும்.

இந்த ஷோல முக்கியமான ரகசியம் என்னன்னா, 'அன்ஃபில்டர்டு எமோஷன்ஸ்' (Unfiltered Emotions) தான். அவங்க சிரிச்சா, நாமளும் சிரிப்போம். அவங்க அழுதா, நமக்கும் கண்ணு கலங்கும். ஏன்னா, அவங்க எதுக்காகவும் நடிக்கலை. தூக்கமின்மை, பசி, மற்ற போட்டியாளர்களோட அழுத்தம்ன்னு இந்தச் சூழல்ல அவங்களோட உண்மையான முகம் வெளிய வருது. அதைப் பார்க்குறதுல ஒரு தனி சுவாரஸ்யம் இருக்கு.

மக்கள் ஏன் இந்த ஷோவுக்கு அடிமை ஆகுறாங்க

நம்ம மக்களுக்கு, அடுத்தவங்க லைஃப்ல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கிற ஆர்வம் எப்பவுமே அதிகம். பிக்பாஸ் அதை ஒரு டைம் பாஸ் என்டர்டெயின்மெண்ட்டா கொடுக்கறாரு.

1. கனெக்டிவிட்டி (Relatability): வீட்டுக்குள்ள நடக்குற சண்டை, சச்சரவுகள், பாசம், பழிவாங்கல் எல்லாமே, நம்ம வீடுகள்லயும், நம்ம ஆபீஸ்லயும், தெருக்கள்லயும் நடக்குற விஷயங்கள் தான். "ஆமா... என் மாமியார் கூட இப்படித்தான் சண்டை போடுவாங்க", "என் பிரெண்ட் கூட இப்படித்தான் பித்தலாட்டம் பண்ணுவான்"ன்னு நமக்கும் அந்த வீட்டுக்குள்ள இருக்கிற போட்டியாளர்களுக்கும் ஒரு கனெக்ஷன் உருவாகிடுது.

2. யாரை நம்புறது? யாரை நம்பக்கூடாது? ஒரு நாளைக்கு ஒரு போட்டி, ஒரு சண்டை, ஒரு நட்புன்னு ஒவ்வொரு ஷாட்டும் பரபரப்பா இருக்கும். காலையில பாசமா பேசுனவங்க, நைட்டு நாமினேஷன்ல முதுகில் குத்தி இருப்பாங்க. இதுல, 'மக்கள் ஆதரவு யாருக்கு?'ன்னு நாமளும் ஒரு ஜட்ஜா மாறி வோட் போடுறதுல ஒரு பவர் இருக்கிறதா ஃபீல் பண்றோம்.

3. சினிமா பிரபலம் + காமன் மேன்: சினிமா, சீரியல் பிரபலங்களோட, சில நேரங்கள்ல சாமனிய மக்களையும் வீட்டுக்குள்ள போடுறப்போ, 'செலிபிரிட்டி லைஃப்' எப்படி இருக்குன்னு பார்க்கிற ஆர்வம் இன்னும் அதிகமாகுது. பிரபலங்கள் எப்படிச் சமைக்கிறாங்க, எப்படிச் சண்டை போடுறாங்கன்னு தெரிஞ்சுக்கிறதுல ஒரு தனி உற்சாகம்.

விஜய் டிவியின் சாமர்த்தியம்

இந்த ஷோவோட மிகப்பெரிய வெற்றிக்கு, நிகழ்ச்சி வடிவமைப்பாளர்கள் செய்யும் சில சாமர்த்தியமான விஷயங்களும் காரணம்:

புதிய திருப்பங்கள் (Twists): திடீர்னு ஒரு வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுக்குறது, ஒருத்தரை சீக்ரெட் ரூம்ல போடுறது, பணப்பெட்டியை நடுவுல வைக்கிறதுன்னு, யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டுகளைக் கொடுத்து நிகழ்ச்சியை கடைசிவரை போரடிக்காம வெச்சுருக்காங்க.

Bigg Boss Bigg Boss Tamil vijay tv

வார இறுதிப் பஞ்சாயத்து

வாரக் கடைசியில தொகுப்பாளர் வந்து, அந்த வாரம் நடந்த எல்லாப் பிரச்சனைகளையும், சண்டைகளையும் தீர்த்து வைக்கிற 'பஞ்சாயத்து' செஷன் இருக்கு பாருங்க... அதுதான் பலரோட 'வீக் எண்ட் அஜெண்டா 'வே!. மொத்தத்துல, பிக்பாஸ்ங்கிறது வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி இல்ல. ஒரு சமூகத்துல மனிதர்கள் எப்படிச் செயல்படுறாங்க, எந்த மாதிரியான விஷயங்களுக்கு நாம ரியாக்ட் பண்றோம்கிறத கண்ணாடி மாதிரி காமிக்கிற ஒரு சமூகப் பதிவா மாறிடுச்சு! அடுத்த சீசன் வந்தா, நீங்க பார்க்காம இருக்கப் போறதில்லை, சரியா? இல்லையா மக்களே?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+