பிக் பாஸ் திவ்யாவிற்கு 50 லட்சம் பரிசு மட்டும் இல்ல.. இவ்ளோ விஷயம் இருக்கு! திறமைக்கு கிடைத்த வெகுமதி
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நேற்றைய கிராண்ட் ஃபினாலே எபிசோடு ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒரு இரவாக அமைந்தது. பரபரப்பும், உணர்ச்சியும், ஆச்சரியமும் கலந்து சென்ற அந்த மேடையில், இறுதியாக திவ்யா கணேஷ் டைட்டிலை தட்டி தூக்கிய தருணம் தான் அனைவரின் கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்தது.
நேற்றைய நிகழ்ச்சியில் பைனலிஸ்ட்களான அரோரா, விக்கல்ஸ் விக்ரம், சபரி மற்றும் திவ்யா கணேஷ் ஆகியோர் மேடைக்கு அழைக்கப்பட்டனர். முதலில் நான்காவது இடம் அரோராவுக்கும், மூன்றாவது இடம் விக்கல்ஸ் விக்ரமுக்கும் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு மேடையில் சபரி மற்றும் திவ்யா மட்டுமே இருந்தனர். அந்த இறுதி நிமிடங்களில் திவ்யாவின் முகத்தில் தெரிந்த பதற்றமும், சபரியின் அமைதியும் ரசிகர்களை திரைக்கு கட்டிப்போட்டது.

இறுதியாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, திவ்யா கணேஷின் கையை உயர்த்தி டைட்டில் வின்னராக அறிவித்த அந்த தருணம், மேடையிலும் வீட்டிலும் இருந்த அனைவரையும் உணர்ச்சிவசப்படுத்தியது. இந்த வெற்றியோடு திவ்யா கணேஷ், பிக் பாஸ் டைட்டிலை வென்ற இரண்டாவது வைல்டு கார்டு போட்டியாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இதற்கு முன் சீசன் 7-ல் அர்ச்சனா இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார். வைல்டு கார்டாக 28-வது நாளில் வீட்டுக்குள் நுழைந்த திவ்யா, வந்த முதல் வாரத்திலேயே வீட்டுத் தலைவர் பொறுப்பை கைப்பற்றியது, அவரது விளையாட்டின் ஆரம்ப வலிமையை காட்டியது.
நேற்றைய ஃபினாலே மேடையில் திவ்யாவுக்கு வழங்கப்பட்ட பரிசுகளும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தின. டைட்டில் டிராபியுடன் சேர்த்து, முதல் பரிசாக ரூ.50 லட்சம் ரொக்கத் தொகை வழங்கப்பட்டது. இதற்கு மேலாக, இந்த சீசனில் அதிக சம்பளம் பெற்ற போட்டியாளர் என்ற பெருமையும் திவ்யாவுக்கே.
ஒரு நாளுக்கு ரூ.30 ஆயிரம் சம்பளம் என்ற அடிப்படையில், 77 நாட்கள் அவர் நிகழ்ச்சியில் இருந்ததால், சம்பளமாக மட்டும் ரூ.23 லட்சத்துக்கும் மேல் அவர் பெற்றுள்ளார். டைட்டில் தொகையும் சேர்த்து பார்த்தால், பிக் பாஸ் சீசன் 9 மூலம் திவ்யா கணேஷ் சுமார் ரூ.73 லட்சத்துக்கும் அதிகமான வருமானம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதோடு மட்டும் நிற்காமல், மாருதி விக்டோரிஸ் என்ற சொகுசு காரும் பரிசாக வழங்கப்பட்டது. இதனால் திவ்யாவின் பிக் பாஸ் பயணம் வெறும் டிராபியோடு முடிவடையாமல், பொருளாதார ரீதியாகவும் பெரிய வெற்றியாக அமைந்துள்ளது.
வீட்டுக்குள் திவ்யாவின் பயணம் எளிதானதாக இருக்கவில்லை. சாண்ட்ராவுடன் ஏற்பட்ட மோதல்கள், சில வாரங்களில் வந்த நெகட்டிவ் கருத்துகள் என பல தடைகளை அவர் சந்தித்தார். ஆனால் அதனை தாண்டி, தனது விளையாட்டு முறையை மாற்றிக் கொண்டு, அமைதியும் தைரியமும் கலந்த அணுகுமுறையை கடைப்பிடித்தார்.
குறிப்பாக டிக்கெட் டூ பினாலே கார் டாஸ்க் போது பார்வதி மற்றும் கம்ருதீனை நேரடியாக எதிர்கொண்ட விதம், மக்கள் மத்தியில் அவருக்கு பெரிய ஆதரவை பெற்றுத்தந்தது. இதுவே இறுதியில் அவரை டைட்டில் வின்னராக மாற்றிய முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
நேற்றைய பிக் பாஸ் மேடையில் கிடைத்த இந்த வெற்றி, திவ்யா கணேஷின் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் வெற்றிக்குப் பிறகு, அவருக்கு சினிமா மற்றும் வெப் தொடர்கள் உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரசிகர்களும், "பிக் பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா" என்பதைத் தாண்டி, அவரை வெள்ளித்திரையில் ஒரு முக்கிய இடத்தில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: எலக்ஷனில் ஜெயித்த மீனா.. பிறகு நடந்த எதிர்பாராத சம்பவம்! மனம் மாறும் விஜயா.. சிந்தாமணியின் பிளான் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்: முத்துவேல் பற்றி தெரிய வந்த பெரிய உண்மை.. அதிர்ச்சியில் கதிர்! உடையும் குடும்பம் -
தேர்தல் பற்றி விஜய் பேசிய டயலாக், சிறகடிக்க ஆசையில் ரீ கிரியேட்! இதை கவனிச்சீங்களா? இனிவரும் பிரச்சனை? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது!












Click it and Unblock the Notifications