பிக் பாஸ் தமிழ் 9 வின்னர் திவ்யாவின் ஸ்டோரி.. பல அவமானங்களுக்கு பிறகு கிடைத்த முதல் வெற்றி! மேடையில் நெகிழ்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக திவ்யா கணேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். இவர்தான் வைல்ட் கார்டு மூலம் போட்டிக்கு அழகாக வந்து வெற்றி பெற்று இரண்டாவது போட்டியாளர் அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மூன்றாவது பெண் போட்டியாளர் என்ற பல ஸ்பெஷல் இருக்கிறது. திவ்யாவை பற்றி சில விஷயங்களை இங்கே பார்க்கலாம்
பிக் பாஸ் சீசன் 9 டைட்டிலை திவ்யா கணேஷ் தட்டி தூக்கிய தருணம் வந்தப்போ, உண்மையிலேயே மனசு கொஞ்சம் கனமாயிடுச்சு என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. ஏனெனில் இந்த வெற்றி ஒரே நாளில், ஒரே ஷோவால கிடைத்தது கிடையாது. பல வருடங்களாக அவர் கடந்து வந்த வாழ்க்கை, அவமானங்கள், கண்ணீர், நம்பிக்கையிழப்பு எல்லாத்துக்கும் கிடைத்த ஒரு பெரிய பதில்தான் இந்த டைட்டில்.

பிக் பாஸ் வீட்டுக்குள்ள "எனக்கு யாருமே இல்லை", "எனக்கு நண்பர்கள் கிடையாது"ன்னு உடைந்து அழுத அந்த திவ்யாவே, இன்று பல லட்சம் மக்களின் மனதில் இடம் பிடிச்சு டைட்டிலை தூக்கிட்டு நின்னது சாதாரண விஷயம் இல்ல. அந்த கண்ணீர் பலவீனம் கிடையாது, அது ஒரு பெண்ணின் உண்மை மனசு. அந்த உண்மைதான் அவரை இங்க கொண்டு வந்திருக்கு.
ராமநாதபுரம் பூர்வீகமாக கொண்ட ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து வந்த ஒரு பெண். சினிமா பின்னணி இல்லை, பெரிய சப்போர்ட் இல்லை. "சினிமா நம்ம குடும்பத்துக்கு செட் ஆகாது"ன்னு ஆரம்பத்தில் பெற்றோர் சொன்ன வார்த்தைகளையும் தாண்டி, மனசுக்குள்ள இருந்த நடிப்பு கனவை விட்டுக்கொடுக்காம நின்னவங்க திவ்யா. வாய்ப்பு கிடைக்காம பல கம்பெனிகளின் வாசல்களில் காத்திருந்த நாட்கள், ரிஜெக்ஷன்கள், அமைதியா அழுத இரவுகள்... இதெல்லாம் தெரியாமதான் பல பேர் ஒரு நடிகையை ஜட்ஜ் பண்ணுறாங்க.
சீரியலில் முதல் வாய்ப்பு கிடைக்கவே அவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. 'பிரியமானவளே' சீரியலில் உமா கதாபாத்திரம், அதுக்கப்புறம் ஏற்பட்ட பிரச்சனைகள், ரெட் கார்டு, சீரியலிலிருந்து வெளியேற்றம்... அந்த இடத்திலேயே பல பேர் உடைந்து போயிருப்பாங்க. "இனிமேல் எதுவும் வேண்டாம்"ன்னு திவ்யாவும் நினைத்த தருணம் இருந்திருக்கு. ஆனாலும் வாழ்க்கை அவரை முழுக்க கைவிடல. 'பாக்கியலட்சுமி' சீரியலில் ஜெனி கதாபாத்திரம் மூலம் மீண்டும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிச்சார்.
அந்த நேரத்திலேயே வாழ்க்கை இன்னொரு சோதனையை போட்டது. நிச்சயதார்த்தம், மீடியா முன்னிலையில் அறிவிப்பு, அதுக்கப்புறம் திருமணம் நின்று போனது. நடிகை என்பதாலேயே ஏச்சும் பேச்சும், குற்றச்சாட்டுகளும். மனதளவில் முற்றிலும் உடைந்து போன ஒரு பெண்ணுக்கு அங்கிருந்து மீண்டு வருவது அவ்வளவு எளிது கிடையாது.

ஆனா திவ்யா திரும்பி வந்தார். அதுவும் அமைதியா, தைரியமா. பிக் பாஸ் வீட்டுக்குள் அவர் ஆடிய விளையாட்டு முதலில் சலிப்பு கொடுத்தாலும் பிறகு பாராட்டு வாங்கியது. எந்த இடத்திலும் தைரியமாக தன்னுடைய கருத்தை எடுத்து வைத்தார். அதனால்தான் சில நேரம் அவர் தனியாக நின்றார். ஆனா அதே தனிமைதான், வெளியிலிருந்து பார்த்த மக்களுக்கு அவரை இன்னும் நெருக்கமாக்கியது.

இன்று அந்த திவ்யா, மற்றவர்கள் வாங்கிய விருதுகளை பார்த்து ஏங்கிய திவ்யா இல்லை. தன்னுடைய நேர்மையான பயணத்தாலேயே பிக் பாஸ் கோப்பையை கையில் தூக்கி நின்ன ஒரு வெற்றி பெண். "நம்பிக்கையும் தைரியமும் இருந்தா ஒரு பொண்ணை யாராலும் தடுக்க முடியாது"ன்னு சொல்லாம சொல்லி நிரூபிச்சிருக்கார்.
திவ்யா கணேஷ்... இந்த டைட்டில் ஒரு ட்ரோபி மட்டும் இல்லை. இது உங்கள் வாழ்க்கைக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதை. உண்மையிலேயே மனசார பாராட்டுக்கள்.
-
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
சிறகடிக்க ஆசை: விஜயாவுக்கு கிடைத்த அதிர்ச்சி.. மீனாவுக்கு தெரிய வந்த பெரிய உண்மை.. கோபத்தில் ஸ்ருதி, ரவி -
விஜய்க்கு புது நெருக்கடி.. கமிஷனர் ஆஃபீஸில் பிக் பாஸ் ஜூலி கொடுத்த புகார்.. தவெக நிர்வாகிகளுக்கு சிக்கல் -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்?












Click it and Unblock the Notifications