Bigg Boss: 20 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் 9 ஆரம்பம்: வீடு முழுக்க சீரியல், சோஷியல் மீடியா பிரபலங்கள்
சென்னை: விஜய் டிவியில் தமிழ் ரசிகர்களின் ஆரவார வரவேற்புக்கு மத்தியில், 'பிக் பாஸ் தமிழ் சீசன் 9' நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 5) பிரமாண்டமாகத் தொடங்கியுள்ளது. தொகுப்பாளர் விஜய் சேதுபதி அறிமுகப்படுத்த, மொத்தம் 20 போட்டியாளர்கள் இந்த ஆண்டு பிக் பாஸ் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்துள்ளனர். வழக்கத்தைவிட அதிக எண்ணிக்கையிலான போட்டியாளர்களுடன் ஆரம்பித்திருக்கும் இந்த சீசன், ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்குப் பஞ்சமிருக்காது என்பதை உறுதி செய்துள்ளது.

பிக் பாஸ் 9ன் 20 போட்டியாளர்களின் முழு விவரம் இதோ:
இந்த முறை சினிமா, தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள், மாடலிங் மற்றும் விளையாட்டு எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த திறமைசாலிகள் களமிறங்கியுள்ளனர்.
1. திவாகர்: (வாட்டர்மெலன் ஸ்டார்) சமூக ஊடகங்களில் நகைச்சுவை மூலம் பிரபலமானவர்.
2. அரோரா சின்க்ளேர்: (பலூன் அக்கா) மாடலிங் துறையில் கிளாமர் புகைப்படங்களால் கவனம் ஈர்த்தவர்.
3. எப்.ஜே: (F.J.)
4. பார்வதி: (வி.ஜே. பார்வதி) தொகுப்பாளினி, 'குக் வித் கோமாளி' மற்றும் 'சர்வைவர்' புகழ்.
5. (துஷார்)
6. கனி: குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் மற்றும் இயக்குனர் அகத்தியனின் மகள்
7. சபரி: (சீரியல் நடிகர் சபரிநாதன்)
8. பிரவீன் காந்தி: (இயக்குநர் பிரவீன் காந்தி) 'ரட்சகன்' , ஜோடி உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.
9. கெமி: தேசிய அளவில் கூடைப்பந்து வீராங்கனையாக இருந்து, அரசியல் காரணங்களால் விலகி, இப்போது மாடலிங்கில் இருக்கும் பிரபலம்.
10. ஆதிரை: நடிகர் விஜய் நடித்த பிகில் படம் மூலம் பிரபலமானவர்.
11. ரம்யா ஜோ: ஆடலும் பாடலும் மேடை நடனக் கலைஞர். ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தவர்.
12. வினோத்: கானா பாடகர் வினோத்
13. வியானா
14. பிரவீன்
15. சுபிக்ஷா
16. அப்சரா CJ
17. நந்தினி
18. விக்ரம்
19. கமருதீன் விஜய் டிவியின் 'மகாநதி' சீரியல் நடிகர்.
20. கலையரசன்
இந்த சீசனில் தனித்துவமான பின்னணி
திவாகர், அரோரா போன்றவர்கள் சமூக ஊடகங்களில் இருந்து நேரடியாகப் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருப்பதால், அவர்களின் ஆட்டத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். கூடைப்பந்தைத் துறந்த கெமி மற்றும் மேடை நடனக் கலைஞரான ரம்யா ஜோ போன்றோர், தங்கள் தனிப்பட்ட வாழ்க்கைப் போராட்டங்களை வீட்டில் எப்படி வெளிப்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
சர்ச்சை ஆளுமை
இயக்குநர் பிரவீன் காந்தி போன்ற வெளிப்படையான பேச்சாளர்கள், வீட்டில் நிச்சயம் பஞ்சாயத்துகளுக்கும், விவாதங்களுக்கும் வழிவகுப்பார்கள். மொத்தத்தில், 20 போட்டியாளர்களுடன், 'ஸ்பேஸ் தீம்' அடிப்படையில் பிரமாண்டமாகத் தொடங்கப்பட்டுள்ள 'பிக் பாஸ் தமிழ் சீசன் 9', இனிவரும் நாட்களில் தமிழக மக்களின் பொழுதுபோக்கு அட்டவணையில் ஆதிக்கம் செலுத்தத் தயாராகிவிட்டது. இந்த 20 பேரில் உங்களுக்கு மிகவும் பிடித்த மற்றும் உங்கள் ஆவலுக்குரிய போட்டியாளர் யார்?
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications