ரொம்ப மன அழுத்தமா இருக்கு, கதறிய விசித்திரா.. பிக் பாஸ் செய்த சிறப்பு சலுகை.. யாருக்கும் செய்யாததாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இதுவரைக்கும் யாருக்கும் செய்யாத செயலை பிக் பாஸ் விசித்திராவிற்கு செய்து கொடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சில தினங்களாகவே எனக்கு ரொம்ப மன அழுத்தமாக இருக்கிறது என்று விசித்திரா பீல் பண்ணி, அதனால் எனக்கு நியூஸ் பேப்பர் வேண்டும் என்று கேட்டிருந்தாராம்.

bigg boss Tamil Vichitra asked me for a newspaper

அதற்கு பிக் பாஸ் இதுவரைக்கும் யாருக்கும் செய்யாத சலுகையாக விசித்திராவிற்கு மட்டும் நியூஸ் பேப்பர் கொடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்

இதுவரைக்கும் எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் தான் யார் வெற்றியாளராக போகிறார்கள் என்று யூகிக்க முடியாத வகையில் இருக்கிறது. இதுவரைக்கும் ஒளிபரப்பான ஆறு சீசன்களிலுமே இந்த சீசனின் டைட்டில் வின்னர் இவர்தான் என்று ஆரம்பத்திலேயே ரசிகர்கள் நிர்ணயித்து விடுவார்கள்.

அதுபடி தான் ஒவ்வொரு வாரமும் விளையாட்டும் போய்க் கொண்டிருக்கும். ஆனால் இந்த சீசனில் மட்டும் யாரையும் அப்படி உறுதியாக சொல்ல முடியவில்லை. காரணம் ஒரு வாரத்தில் நன்றாக இருக்கும் போட்டியாளர்கள் அடுத்த வாரமே தங்களுடைய சுயரூபத்தை காட்டத் தொடங்கி விடுகிறார்கள்.

அந்த மாதிரி தான் இந்த சீசனில் வயதில் மூத்த போட்டியாளராக நடிகை விசித்திரா அறிமுகம் ஆகி இருந்தார். இதுவரைக்கும் எந்த சீசனிலும் இல்லாத வகையில் விசித்திரா தன்னுடைய திறமையை காட்டி விளையாடிக் கொண்டிருக்கிறார். எல்லா சீசன்களிலும் ஒரு சில வாரங்களிலேயே வயதில் மூத்த போட்டியாளர்கள் வெளியேற்றி விடுவது வாடிக்கையாக இருக்கிறது.

ஆனால் விசித்திரா உள்ளே இளம் போட்டியாளர்களோடு கெத்தாக போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் ஜோவிகாவுடன் மல்லுக்கட்டி படிப்பு விஷயத்தில் கறாராக பேசியது பலராலும் பாராட்டப்பட்டது. அதற்கு பிறகு தெலுங்கு நடிகர் ஒருவர் தனக்கு கொடுத்த பாலியல் தொல்லை குறித்து பேசி பலரையும் விசித்திரா கண்கலங்க வைத்திருந்தார்.

இப்படியாக விசித்திராவிற்கு அதிகமான பாசிட்டிவ் வரவேற்பு இருந்த நிலையில் சில நாட்களாக மாயா மற்றும் பூர்ணிமா கேங்கோடு சேர்ந்து விசித்திரா விளையாடி வருவது அவருடைய ரசிகர்களையே அதிருப்தி அடைய வைத்திருக்கிறது. இந்த நிலையில்தான் சில தினங்களாக விசித்திரா தனக்கு மன அழுத்தமாக இருப்பதாகவும் அதனால் தனக்கு நியூஸ் பேப்பர் தரும்படியும் பிக் பாஸிடம் கேட்டிருக்கிறார்.

இதுவரைக்கும் யாருக்கும் நியூஸ் பேப்பர் வழங்கியது கிடையாதாம். அதனால் விசித்திரா நீங்கள் தரும் நியூஸ் பேப்பரில் பிக் பாஸ் செய்திகள் ஏதேனும் இருந்தால் கூட அதைக் கிழித்து எடுத்துவிட்டு எனக்கு தாங்க என்று சொன்னதாகவும் அதனால் விசித்திராவிற்கு மட்டும் பிக் பாஸ் கன்ஸ்ட்ரக்ஷன் ரூமில் வைத்து நியூஸ் பேப்பர் படிப்பதற்காக கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதேபோல பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருக்கும் போட்டியாளர்களில் அதிகமான சம்பளம் வாங்குவது விசித்திரா என்றும் கூறப்படுகிறது அவருக்கு ஒரு நாளைக்கு 40,000 சம்பளமாக கொடுக்கப்படுகிறது என்று தகவல்கள் வலம் வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+