பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சிக்கு புதிய தொகுப்பாளர்! லீக்கான அப்டேட்! இனி சம்பவம் இருக்கு
சென்னை: தமிழை போலவே பிக் பாஸ் நிகழ்ச்சி பல மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் கடந்த ஜனவரி மாதத்தோடு எட்டாவது சீசன் முடிவுக்கு வந்தது. அதேபோல தெலுங்கிலும் கடந்த ஜனவரி மாதத்தில் தான் எட்டாவது சீசன் முடிவடைந்தது. இந்த நிலையில் அடுத்த சீசன் யார் தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது அது பற்றி பார்க்கலாம்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சி தமிழில் ஒளிபரப்பாகும் போது அதிகமான விமர்சனங்கள் வந்தது. மக்களுக்கு பரிச்சயமான பிரபலங்களால் எப்படி 100 நாட்கள் ஒரே வீட்டிற்குள் இருக்க முடியும்? அவர்களுடைய குடும்பத்தினரிடமும் வெளி உலக தொடர்பும் இல்லாமல் அவர்கள் ஒரு அறையில் செய்யும் செயல்களை எப்படி காட்ட முடியும் என்று பல்வேறு கேள்விகள் வந்தது. ஆனால் விமர்சனங்களுக்கு எல்லாம் முதல் சீசனிலேயே விடை கிடைத்துவிட்டது.

விமர்சனங்கள்
ரசிகர்களுக்கு பிடித்த நடிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் செய்யும் செயலை பார்த்து பலர் அதிர்ச்சி அடைந்தனர். இவரா இப்படி? இவங்களா இப்படியெல்லாம் பேசுவாங்க? சினிமாவில் அப்படி நடிப்பாங்களே ஆனால் வீட்டுக்குள் எப்படி இருக்கிறார்களே என்று பலர் புலம்பி வந்ததையும் பார்க்க முடிந்தது. அந்த நேரத்தில் சோசியல் மீடியா இந்த அளவிற்கு வளர்ச்சி அடையவில்லை. அதனால் டிவியில் மட்டும்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க முடியும்.
ஆரம்பத்தில் நிகழ்ச்சி
அதுவும் தினமும் இரவு 9:00 முதல் 10: 30 மணி முதல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிகழ்ச்சிக்காக பலர் டிவி முன்பு காத்திருக்க தொடங்கிவிட்டனர். முதல் இரண்டு சீசன்கள் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்கள் தொடங்கப்பட்டு வந்தது. அதிலும் கடந்த இரண்டு சீசன்களாக 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
ஒன்பதாவது சீசன்
அதுபோல தமிழில் 8 சீசன்கள் முடிவுக்கு வந்திருக்கிறது. மற்ற மொழிகளில் 18 சீசன்கள் தாண்டி கூட ஒளிபரப்பு செய்யப்பட்டிருக்கிறது. தமிழை போலவே தெலுங்கிலும் 8 சீசன்கள் முடிவுக்கு வந்திருக்கிறது. தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட அதே நாளில்தான் தெலுங்கிலும் தொடங்கப்பட்டது. தமிழில் ஏழு சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.
ஒரே சீசனில் விலகல்
எட்டாவது சீசனில் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்திருந்தார். அதுபோல தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனை ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்கினார். தன்னுடைய திரைப்படங்கள் வேலை காரணமாக இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி இருந்தார். இரண்டாவது சீசனை நடிகர் நானி தொகுத்து வழங்கி இருந்தார். இந்த சீசனும் நல்ல வரவேற்பு பெற்றது.

புதிய தொகுப்பாளர்
அதற்கு பிறகு நானியும் ஒரே சீசனோடு பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகிவிட்டார். மூன்றாவது சீசனில் புதிய தொகுப்பாளராக நடிகர் நாகார்ஜுனா அறிமுகமானார். அவர் தொடர்ந்து 5 சீசன்களாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இவருக்கு பதிலாக தான் இப்போது புதிய தொகுப்பாளர் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தை
அதிலும் இவருக்கு பதிலாக நடிகர் விஜய் தேவரகொண்டா அல்லது நடிகர் ராணா இவர்களில் இருவர் ஒருவர் தொகுத்து வழங்குவார்கள் இந்த பேச்சை ஆரம்பத்தில் அதிகமாக இருந்த நிலையில் இப்போது நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இன்னும் ஒரு சில வாரங்களில் யார் தொகுத்து வழங்க போகிறார் என்று உறுதியான தகவல்கள் தெரிய வந்துவிடும் என்று கூறப்படுகிறது.
-
மகாநதி சீரியலின் கிளைமேக்ஸ் ஷூட்.. கடைசியில் யார் வந்திருக்காங்க பாருங்க? எதிர்பாராத முடிவு -
சிறகடிக்க ஆசை: பட்டும் திருந்தாத விஜயா.. அசிங்கப்படுத்தும் மனோஜ்! முத்துக்கு வெற்றி மேல் வெற்றி.. செம சம்பவம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்!












Click it and Unblock the Notifications