தக்காளி விக்கிற விலையில் "பிக் பாஸ் தாமரை” செய்த வேலையை பார்த்தீங்களா? வாயடைத்துப் போன ரசிகர்கள்
சென்னை: வரலாறு காணாத விலை ஏற்றத்தை சந்தித்துள்ள தக்காளியின் விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விலையற்றத்திற்கு சில காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதனை கட்டுப்படுத்த அரசாங்கம் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவருவது மட்டுமின்றி தக்காளி விலை உயர்வு குறித்த ஹாஸ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிக் பாஸ் தாமரை செல்வி தான் நடிக்கும் சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் "தக்காளி தொக்கு" வைத்து அதை ரீல்ஸ் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்.
அனைத்து தரப்பட்ட மக்களும் தங்களது அன்றாட உணவில் பயன்படுத்தும் முக்கிய பொருளாகவும் தவிர்க்க முடியாத பொருளாகவும் தக்காளி இருந்து வருகிறது. அனைவரும் எளிதில் வாங்கும் வண்ணம் கிலோ ரூபாய் 20,ரூ30 என்று விலைக்கு விற்று வந்த தக்காளி கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ80 முதல் ரூ100 வரை விற்கப்பட்டு வருகிறது. சற்றும் எதிர்பாராத இந்த மலை போன்ற விலையேற்றம் மக்களின் வாங்கும் சக்தியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பாலும் தமிழ்நாட்டில் விற்க்கப்படும் தக்காளிகள் பெங்களூர் மற்றும் கர்நாடக மாநிலங்களின் பிற பகுதியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்பட்டு வருவதால் தான் குறைந்த விலையில் தமிழக வியாபாரிகளால் மக்களுக்கு விற்க முடிந்தது. தற்பொழுது பெங்களூர் மற்றும் கர்நாடகா பகுதிகளில் பலத்த மழை காரணமாக தக்காளி விளைச்சலில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன் காரணமாக தக்காளி வரத்து பாதிக்கு பாதி குறைந்துள்ளதாக வியாபாரிகள் கூறி வருகின்றனர். அதன் காரணமாகவே வேறு வழியின்றி தக்காளி இம்மாதிரியான மலை போன்ற விலையை நோக்கி சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.வெளிப்புற சந்தையில் கிலோ ரூ80 முதல் ரூ100 ரூபாய் வரை தக்காளி விற்கப்பட்டாலும், பசுமை பண்ணை காய்கறி கடைகளில் 15% தள்ளுபடியாக கிலோ ரூ60 முதல்ரூ 65 ரூபாய் வரை தக்காளிகள் மக்களுக்கு சலுகை விலைகளில் விற்கப்பட்டு வருகிறது.
ஒருவருக்கு இரண்டு முதல் மூன்று கிலோ வரை மட்டுமே சலுகை விலையில் விற்கப்படும் பசுமை பண்ணை காய்கறிகள் கடைகள் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்பட வேண்டும் என்றும் எல்லையோர கிராம விவசாயிகள் மற்றும் தமிழகத்தின் பிற பகுதியின் விவசாயிகளிடமும் அரசு நேரடியாக தக்காளியை கொள்முதல் செய்தால் ஓரளவு விலையை கட்டுக்குள் கொண்டு வரலாம் என்றும் வியாபாரிகள் மற்றம் நுகர்வோர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த தாமரைச்செல்வி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் "நினைத்தாலே இனிக்கும்" சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்த சீரியலில் நடிகையோடு சேர்ந்து தக்காளி தொக்கு வைத்து அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் பலர் தாமரை செல்வி நல்ல வசதியாக மாறிட்டார் போல, அதனால் தான் இவ்வளவு தக்காளி பயன்படுத்தி சமைக்கிறாரே என்று என்று கிண்டல் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications