கதறி அழுத பிக் பாஸ் தனலட்சுமி.. என்ன ஆச்சு? அதிர்ச்சிகரமான காரணம்.. இப்படியுமா பண்ணுவாங்க?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட தனலட்சுமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் இனி இறக்க தான் வேண்டும் என்று அதிர்ச்சிகரமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
கதறி அழுதபடி தனலட்சுமி வெளியிட்டு இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனால் பதறிப்போன ரசிகர்கள் என்னவென்று விசாரிக்க, கடைசியில் தான் கதறி அழுததற்கு அதிர்ச்சிகரமான பதில் ஒன்றை தனலட்சுமி கூறி இருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம்.

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகம் ஆகி பலரையும் யார்ரா இந்த பொண்ணு என்று சொல்ல வைத்த ஒரு போட்டியாளர் என்றால் அது தனலட்சுமி தான். அந்த சீசனில் இதுவரைக்கும் இல்லாத வகையில் புது முறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது பெரிய அளவில் புகழ் இல்லாத சாதாரண மக்கள் ஒருவர் இந்த சீசனில் கலந்து கொள்கிறார் என்று ஆரம்பத்தில் பில்டப் கொடுக்கப்பட்டது.
ஆனால் கடைசியில் பார்த்தால் தனலட்சுமி டிக்டாக், ஷார்ட் பிலிம் என்று ஏற்கனவே பிரபலமாக தான் இருந்திருக்கிறார். அதன் மூலமாகத்தான் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சாதாரண மக்களின் பிரதிநிதி என்று தனலட்சுமி பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு பிக் பாஸ் வீட்டிற்குள் அதிகமாக பிரபலம் ஆகி இருந்தார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் அசீமோடு மட்டுமல்லாமல் எல்லா போட்டியாளர்களிடமும் முட்டி மோதி இருந்தார். அதோடு பொம்மை டாஸ்க் தனலட்சுமி நடந்து கொண்ட விதம் யாராலும் மறக்கவே முடியாது. காரணம் பொம்மை டாஸ்க் அசீம் என்னை எந்த இடத்தில் கை வைத்தார் தெரியுமா என்று அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்த தனலட்சுமி வெளியே வந்த பிறகு அசீம் தான் என்னுடைய அண்ணன்.
அவர் அந்த டாஸ்க்கில் என்னை தவறாக தொடவில்லை. விளையாட்டு வேகத்தில் தான் என்னிடம் சண்டையிட்டார் என்று அப்படியே பிளேட்டை மாற்றி போட்டு இருந்தார். அதோடு அசீமுக்கு ஆதரவாக பல இன்டர்வியூக்கிலும் பேசியிருந்தார். தொடர்ச்சியாக விக்ரமுக்கு எதிராகவே தனலட்சுமி பேசிக் கொண்டிருந்தார்.

இதனால் அசீமுக்கு ஏற்கனவே ரசிகர்கள் அதிகமாக இருக்கும் நிலையில் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தனலட்சுமி இப்படி மாறி இருந்தாரா? என்றும் பலர் கேள்வி எழுப்பி வந்தனர்... எப்படியோ பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து ஒரு வருடம் ஆகிவிட்டது ஆனால் தனலட்சுமி எதிர்பார்த்தபடி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய அளவில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இன்ஸ்டாகிராமில் மட்டும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். ஆனால் பெரிய அளவில் புகழ் எதுவும் இல்லாததால் மீண்டும் தான் வைரலாக வேண்டும் என்று எடுத்திருக்கும் ஐடியா தான் தற்போது இணையத்தில் அனைவராலும் அதிர்ச்சியாகி விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதாவது இன்று இன்ஸ்டாகிராமில் தனலட்சுமி கண்ணீர் விட்டு கதறி அழுதபடி ஒரு வீடியோவை அப்லோட் செய்திருந்தார்.
அதன் கேப்ஷனில் வாழ்க்கையில் முடிவு மரணம் என்று அவர் போட்டு இருக்க, அதை பார்த்து பதறிப்போன ரசிகர்கள் ஆறுதல் சொல்லி வந்தனர். பிறகு சில நிமிடங்களில் கேப்ஷன் மாற்றப்பட்டு பாராட் கேஸ்ட் சேனலை பாருங்கள் என்று குறிப்பிட்டு இருந்தார். எல்லோரும் என்ன ஆச்சோ, ஏதாச்சோனு தெரியலையே என்று பதறிப் போய் அந்த லிங்கில் உள்ள போய் பார்த்தால் அங்கே தனலட்சுமி ஹாயாக படுத்து டிவி பார்த்துக்கொண்டு இருக்கிறார்.
அந்த வீடியோவில் ஒரு குரல் என்ன அழுது வீடியோ போட்ட என்று கேட்க, அதற்கு தனலட்சுமி ரொம்ப நாளா எதுவும் போடல... அதான் வைரலாக சும்மா போட்டு விட்டேன் என்று பதில் சொல்லி இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்ததும் கடுப்பான ரசிகர்கள் எமோஜியிலேயே வறுத்து எடுத்து வருகிறார்கள்.
-
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு?












Click it and Unblock the Notifications