ஒரே வார்த்தையால் தாமரையை வாயடைக்க வைத்த ஜூலி..என்ன இப்படி இறங்கிவிட்டார்கள்...குழப்பத்தில் ரசிகர்கள்
சென்னை: பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தற்போது ஜூலி மற்றும் தாமரை இடையே புது சண்டை தொடங்கி இருக்கிறது.
சண்டை சச்சரவுகளில் தர லோக்கலாக போட்டியாளர்கள் பேசிக் கொண்டதை பார்த்து ரசிகர்கள் திகைத்துப் போய் இருக்கின்றனர்.

பஞ்சம் இல்லாத சண்டைகள்
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே பிரச்சனைகளுக்கும், சண்டை சச்சரவுகளுக்கும் பஞ்சம் இல்லாமல் தான் ஒளிபரப்பாகி வருகிறது.முதல் வாரத்தில் காபி பொடிக்கு ஏற்பட்ட கலவரம் போதாதென்று பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஒவ்வொரு நாளும் ஒரு டாஸ்க் வைத்து போட்டியாளர்களுக்குள் குடுமிப்பிடி சண்டை உருவாக்கி இருக்கிறது. போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் இழந்த பெயரை இந்த நிகழ்ச்சியில் பெற்றுவிட வேண்டும் என்று கலந்துகொண்டு இருந்தாலும், அவர்கள் செய்யும் செயல்களைப் பார்த்து இவர்கள் இப்படியும் பட்டவர்களா என்று கூட நினைக்கத் தோன்றுகிறது என சிலர் கூறி வருகின்றனர்.

வைரலாகும் ப்ரோமோ
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது ஆனால் நாட்கள் செல்லச் செல்ல இந்த நிகழ்ச்சியில் அதிகமான டாஸ்க்குகள் கொடுக்கப்படுவதால் அங்கே சண்டை சச்சரவுகள் தான் அதிகமாக ஏற்பட்டு கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் போட்டியாளர்கள் டாஸ்க் செய்கிறோம் என்கிற பெயரில் சண்டை போட்டுக்கொண்டு இருந்தாலும், மற்றொருபுறம் முடிந்ததும் அனைவரும் ஒற்றுமையாக தான் இருந்து வருகின்றனர். அந்த ஆனால் இந்த நிகழ்ச்சி இருபத்தி நான்கு மணி நேரமும் ஒளிபரப்பாகி வருவதால் பலரும் அதனை முழுமையாக பார்க்க முடிவதில்லை அதனால் அதில் ஒரு சில ப்ரோமோ மட்டும் தினமும் ஒளிபரப்பாகி வருகிறது அதனைத் தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.

ஜூலி தாமரையின் திடீர் சண்டை
நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்க முடியாத ரசிகர்கள் பலர் ப்ரோமோவை பார்த்து அங்கே நடக்கும் சண்டைகள் மட்டுமே அவர்கள் பார்ப்பதால் நிகழ்ச்சியை பற்றிய கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் அதிகமாக கிளம்பி வருகிறது. அந்த வகையில் தற்போது இன்று ஒளிபரப்பாகி வரும் ஐந்தாவது ப்ரோமோவில் ஜூலி மற்றும் தாமரையின் அல்டிமேட் சண்டை பார்த்து ரசிகர்கள் திகைத்துப் போய் இருக்கின்றனர். அதில் பல நாட்களுக்கு பிறகு மீண்டும் ஜூலி தன்னுடைய பழைய நிலைக்கு திரும்பி உள்ளார் என்று ரசிகர்கள் கூறியிருக்கின்றனர்.

ஜூலி பேசிய அந்த வார்த்தை
தற்போது நடந்து வரும் திருடன் போலீஸ் டாஸ்க்கில் போட்டியாளர்களுக்குள் அதிகமான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வருகிறது. ஒரு சில போட்டியாளர்கள் நாங்கள் விளையாட்டில் இருந்து ஒதுங்கிக் கொள்கிறோம் விளையாட மாட்டோம் என்றெல்லாம் போர்க்கொடி தூக்கி கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் தாமரை இடம் ஜூலி "உங்க கிட்ட எல்லாம் மனுசன் பேசுவானா" என்று பேசியது ரசிகர்களால் என்ன இப்படி இறங்கிவிட்டார்கள் என்று கேள்விகளை எழுப்பி இருக்கிறது. இவர்கள் எப்போதும் இப்படித்தான் இருந்து வந்தார்களா?? அல்லது இந்த சீசனில் தான் இப்படி இருக்கிறார்களா??என்று குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications