பிஞ்சிடும்..அசிங்கமா இல்லையா??ஜூலியை பங்கமாய் திட்டிய வனிதா.. மௌனத்தில் ஜூலி.. இப்படி ஆகிவிட்டதே
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் இந்நிகழ்ச்சியில் மூன்றாவது ப்ரோமோவில் ஜூலியை கடும் கோபத்தில் வனிதா திட்டி இருக்கிறார்.
வனிதாவின் பேச்சுக்கு ஜூலி மௌனம் காத்து வருவதை பார்த்து ரசிகர்கள் ஜூலிக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

ரசிகர்களின் கேள்வி
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியது தான் தொடங்கியது அங்கே போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது என்று ரசிகர்கள் புலம்பிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஒவ்வொரு ப்ரோமோவிலும்
வனிதாவின் வேற லெவல் பர்பாமன்ஸ் தான் காட்டப்பட்டு வருகிறது. அதனால் கண்டென்ட் கொடுப்பதற்காகத்தான் இப்படி பிக்பாஸ் உசுப்பேத்தி விடுகிறதா என்பது பலருடைய கேள்வியாக இருந்துவருகிறது.

புது டாஸ்க்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்று களவாணிகளும் காவல்துறையும் எனும் டாஸ்க் தொடங்கப்பட்டு இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று ஒன்பதாவது நாளில் அடியெடுத்து வைத்திருக்கும் நிலையில் ஒவ்வொரு நாளும் டாஸ்க் வைத்து வேற லெவல் என்டர்டைன்மென்ட் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று தொடங்கியிருக்கும் புது டாஸ்கில் இவர்கள் செமையாக ஆட்டம் போட்டு வருகிறார்கள். இவர்கள் சும்மாவே ஆடுவார்கள் தற்போது இவர்களுக்கு டாஸ்க் என்கிற பெயரில் கொடுத்திருக்கும் சலுகைகளால் வீட்டிற்குள்ளே அதகளம் நடந்து வருகிறது.

ஜூலியை டார்கெட் செய்யும் வனிதா
தற்போது மூன்றாவது ப்ரோமோவில் பிக்பாஸ் வீட்டிற்குள் காவல்துறை உடையில் இருக்கும் வனிதாவின் பொருள்களை பல போட்டியாளர்கள் உடைத்து விடுகின்றனர். அவர்கள் களவாணி டாஸ்க் செய்வதால் அப்படி செய்திருந்தாலும், உடைத்த போட்டியாளர்களில் அனைவரையும் விட்டுவிட்டு ஜூலியை மட்டும்தான் டார்கெட் செய்து வனிதா அவரிடம் மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருக்கிறார். இந்த வாரம் ட்ரெண்டிங் போட்டியாளர் பட்டம் கொடுக்கும் போது கொடுத்த பேஜ் கூட பாலாஜி முருகதாஸ் உடைத்துவிட்டார். அதையெல்லாம் விட்டுவிட்டு வனிதாவின் சென்ட் பாட்டிலை ஜூலி டாய்லெட் உள்ளே போட்டு விட்டாராம் அதற்கு பெரிய ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

கோபத்தில் வனிதா செய்த செயல்
பிச்சுருவேன். .அசிங்கமா இல்லையா??பொருளோட வேல்யூ தெரியாதா??என்றெல்லாம் கண்டமேனிக்கு திட்டி தீர்க்கிறார். அதுமட்டுமல்லாமல் எல்லாத்தையும் வெளிய தூக்கி விசிறி அடிச்சிடுவேன்...ஸ்டன்ட்த் காட்டணும்னு நினைக்கிறீர்களா?? என்று இவர் பேசும் போது அனைவரும் ஆளுக்கொரு திசையாக சிதறி ஓடிக்கொண்டிருக்கின்றனர். அப்போது மட்டும் ஷாருக் என்னுடைய பொருள்களும் தான் போய் இருக்கு நான் இப்படியா பண்ணுகிறேன் என்று கேட்டு இருக்கிறார். அதுக்கு உங்க கூட நான் விளையாடனும் என்று இல்லை வனிதா என கூறியிருக்கிறார். அதற்கு ஷாரிக் நீங்க வேணா உங்க பொருளை பார்த்துக்கோங்க, நீங்க இப்போ ட்ரெஸ்ஸ வேற மாத்திட்டீங்க நீங்க இப்போ கேம் உள்ளே தான் இருக்கீங்களா இல்லையான்னு தெரியலை என்று கூறி இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் வனிதாவை எதிர்த்து பேசிய ஷாரிக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications