நீங்க ஆர்ட்டிஸ்ட் தான்.. அதுக்காக இப்படியா?? ஓவியாவே பார்த்ததும் அதிர்ச்சியாகிருவாங்க
சென்னை: ஓவியா பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
Recommended Video
ஓவியாவின் வீடியோவை பார்த்ததும் குழப்பமடைகின்ற வகையில் இருந்தாலும் அந்த வீடியோ வேற லெவலில் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது.

ஓவியாவை எதிர்பார்க்கும் ரசிகர்கள்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி எப்போது தொடங்கப் போகிறது என்று செய்தி வெளியாக தொடங்கியதோ அப்போது இருந்து ஓவியா எப்போது அதில் கலந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆரம்பத்திலேயே இவர் உள்ளே நுழைந்து விடுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இவர் கலந்துகொள்ளவில்லை என்பது அதிர்ச்சியாக இருந்தாலும் இவர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக தற்போது உள்ளே நுழைவார் என்று ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருக்கின்றனர்.

வைரலாகும் வீடியோ
ஓவியா இந்த அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று செய்திகள் பரவியதை தொடர்ந்து பல ரசிகர்கள் அவருக்காக டிஸ்னி ஹாட்ஸ்டார் ஆப் டவுன்லோட் செய்து வைத்திருக்கிறார்களாம். அது மட்டுமல்லாமல் ஓவியாவிற்காக நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே பல ஆர்மிகள் தொடங்கப்பட்டது. எப்போது ஓவியா என்டரி இருக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு தற்போது வைரலாகும் வீடியோ அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இது உண்மையா?? இல்லையா?? என்று குழப்பத்தோடு ரசிகர்கள் தவித்து வருகிறார்கள்.

இது வேற லெவல் எடிட்
தற்போது ட்ரெண்ட் ஆக இருக்கும் எடிட்டிங் வேலையில் ஓவியாவின் ரசிகர்கள் தங்களுடைய மன சந்தோசத்திற்காக தங்களுக்கு பிடித்த மாதிரி எல்லாம் எடிட் செய்து அதை பகிர்ந்து வருகிறார்கள். அந்த மாதிரிதான் தற்போது கூட பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஸ்டைலாக மாஸ் கெட்டப்பில் ஓவியா என்ட்ரி கொடுக்கும் வீடியோ ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. ஓவியா ஆர்மி இந்த வீடியோவை ட்ரண்ட் செய்வதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறார்கள். அதனால்தான் சமூக வலைத்தளத்தை எந்தப் பக்கம் திரும்பினாலும் இந்த வீடியோ தான் கண்களில் தென்பட்டது.

என்னம்..மா யோசிக்கிறாங்க
கமல்ஹாசன் ஓவியாவின் அறிமுகத்தை சொல்லியபடி இனி மீண்டும் இந்த வீட்டிற்குள் நுழைகிறார் என்று வழியனுப்பி வைத்தது போலவும், பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளே நுழைந்ததும் ஓவியா தனக்கே உரிய கொக்கு நெட்ட கொக்கு எனும் பாடலை பாடியபடி ஸ்டைலாக வீட்டை சுற்றி வருகிறார். இந்த வீடியோஸ் பார்த்ததும் பலர் இது உண்மையா?? என்று குழப்பத்தோடு கேட்டு வருகின்றனர். இது எடிட்டிங் என்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும், இந்த மாதிரி திடீரென்று எப்போது நடக்கும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறதாம். இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் லைக் பட்டனை தெறிக்க விட்டு வருகிறார்கள்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications