கொண்டாட்டத்தை தொடங்கிய ஓவியாவின் ஆர்மி...கிடைத்த மகிழ்ச்சி செய்தி.. இது வேற லெவல் ட்விஸ்ட்
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அடுத்த வாரத்தில் முதல் வைல்டு கார்டு என்ட்ரி அறிமுகமாக இருக்கிறது.
ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த போட்டியாளரின் வருகையை தற்போது புரிந்துகொண்ட போட்டியாளர்களின் செயல்பாடு மாறி இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஆரம்பத்திலேயே ஒலித்த பெயர்
ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது தொடங்கப்பட்டு ஒரு சில நாட்கள் கடந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் முதல்வர் வைல்ட் கார்டு என்ட்ரி அறிமுகமாக இருக்கிறார். ரசிகர்கள் ஆரம்பத்திலேயே எதிர்பார்த்த போட்டியாளர்கள் தற்போது முதல் முறையாக அறிமுகம் ஆக இருப்பதை நினைக்கும்போது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்து வருகிறது. பிக்பாஸ் அல்டிமேட் தொடங்க போகிறது என்றதுமே ரசிகர்கள் அதிகமாக உச்சரித்த பெயர் ஓவியா தான். ஓவியா மீண்டும் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்பது ரசிகர்களின் பலருடைய ஆசையாக இருந்தது.

ஏமாற்றமாக மாறிவிட்டதாம்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருவதால் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக பலர் டிஸ்னி ஆப் டவுன்லோட் செய்து இருக்கின்றனர். ஒரு சிலர் ஓவியா கலந்து கொண்டால் தான் நாங்கள் டவுன்லோட் செய்வோம் என்று கூட ஒரு சில ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். பலர் ஓவியாவுக்காக ஆரம்பத்தில் இந்த ஆப்பை டவுன்லோட் செய்து விட்டார்களாம். ஆனால் ஓவியா வரவில்லை என்பது அவர்களுடைய பெரிய ஏமாற்றமாக இருந்தது.

ஏமாற்றி விட்டார்களே பாஸ்
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி போட்டியாளர்களின் விவரம் ஆரம்பத்திலே வெளியாகி இருந்தது. இந்த வகையில் ஓவியாவின் பெயரும் அதில் இருந்ததால் அவருடைய ரசிகர்கள் பலர் அவருக்காக பேன்ஸ் பேஜ்களை தொடங்கி இருந்தனர். ஏற்கனவே இவருக்கு முதல் சீசனில் அளவுக்கு அதிகமாக பேன்ஸ் இருந்த நிலையில் இந்த அல்டிமேட் நிகழ்ச்சியில் புதியதாக பல ஆர்மிகள் ஓவியாவிற்க்காக தொடங்கப்பட்டது. ஆனால் கடைசியில் கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும், அதனால் இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி ரசிகர்களுக்கு பெருத்த அதிர்ச்சியை கொடுத்துவிட்டது.

இது ஹேப்பி நியூஸ் தான்
தற்போது ஓவியா கொரோனாவில் இருந்து முழுமையாக சரியாகி விட்டதாகவும், அதனால் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் வரும் வெள்ளிக்கிழமை இவர் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக அறிமுகமாகியிருக்கிறார் என்ற செய்திகள் தற்போது வெளியாகியிருக்கிறது. நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஓவியா தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது. இதனால் இவருடைய ரசிகர்கள் கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டார்கள். பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் மீண்டும் ஓவியா வந்தால் அவருடைய நடவடிக்கைகள் எப்படி இருக்குமோ? ? என்று ரசிகர்கள் இப்போதே ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருக்கிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications